மேஷ ராசிகரார்களாக நீங்கள் என்று ஆர்வமாக அனைவரும் கேட்கும் வகையில் அவர்களின் சிறப்பு என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
பொதுவாக மனித வாழ்க்கையில் ஜோதிடம் குறித்து அனைவரும் அறிந்த ஒரு விஷயம் ராசி,நட்சத்திரம், ஜாதகம் போன்றவைகள்.
மொத்தம் 12 ராசிகள் இருக்கிறது அதில் முதன்மையானது மேஷம், நாம் மேஷ ரிசியில் பிறந்திருக்கலாமோ என்று பலர் ஏங்குவர்.
மேஷ ராசியின் குணாதிசயங்கள் என்ன,ஏன் அதனை இவ்வளவு விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.
நெருப்பு ராசியான மேஷத்தின் குணம்
- மேஷ ராசிகாரர்களிடம் நட்பு கொண்டால் பலவிதமான புதிய அனுபவங்களை நம் வாழ்வில் சந்திக்கலாம்.
- இந்த ராசியினர்க்கு உடலில் பல ஆற்றல்கள் இருக்கிறது.ஆனால் அது அவர்களின் சோம்பேறித் தனத்தால் வீணாகிறது.
- மேஷ ராசியினர்க்கு பிடிவாத குணம் அதிகம்.தான் விரும்பும் காரியத்தை முடிப்பதில் அதிக கவனமுடன் இருப்பார்கள்.
- மேஷ ராசிகாரர்கள் குறும்புத் தனமானவர்கள்.
- இவர்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.குறும்புத்தனத்தையே உருவமாக கொண்டவர்கள்.மேஷ ராசிகாரர்களுக்கு இயற்கையாகவே குழந்தைப் போல் குணம் கொண்டவர்கள்.
- சாதாரண விஷயங்களை கூட வேடிக்கையான விஷயமாக மாற்றுவதில் திறன் கொண்டவர்கள்.மேஷ ராசியினரின் நகைச்சுவை தன்மையால் அவரை சுற்றி இருப்பவர்களை அனைத்து கவலையும் மறந்து மகிழ்ச்சி அடைய செய்வார்கள்.
- வரலாற்று கூறுப்படி,செவ்வாயை போரின் கடவுள் என்று கூறுவார்கள்.மேஷ ராசியினரை செவ்வாய் ஆளப்படுவதால் அவர்களுக்கு தைரியம் சற்று அதிகமாகவே இருக்கும்.
- இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவேடுத்துவிட்டால் அதனை முடிக்கும் வரை தன்னம்பிக்கையுடன் தைரியமாக போராடுவார்கள்.
- பிரச்சனை என்று இவர்களை நம்பி வருவோரை சாகும் வரை தன்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்து காப்பாற்றும் குணம் படைத்தவர்கள்.
- மேஷ ராசியினர் எப்போதும் தாம் அமைதியானவர்கள் என்னும் உறுதிப்பாட்டை மனதில் கொண்டவர்கள்.
- பொதுவாக,மேஷ ராசியை ஆண் ராசி என்று கூறுவார்கள்.இவர்களுக்கு காதல்,ரொமன்ஸ் என்று வரும்போது பழைய காலத்து முறைப்படி தான் பழகுவார்கள்.
- உதாரணமாக பெண்களை தெய்வமாக மதிப்பது, அவர்களுக்கு கஷ்டம் தராத வகையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வது போன்றவற்றை பின்பற்றுவார்கள்.
- மேஷ ராசியினர் பெண்களை ஒரு ராணி போல் நடத்துவார்கள்.அவர்கள் பாசத்தை கூட ஒருவித கோபமாக தான் வெளிப்படுத்துவார்கள்.
- மேஷ ராசிக்காரர்கள் பல விஷயங்களின் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். குறிப்பாக காதல் என்றுவரும் போது அவர்களின் ஆர்வத்தை அடிச்சிக்க முடியாது.
- அவர்கள் வாழ்க்கையை உற்சாகமாகவும்,அழகாகவும் மாற்றும் ஆற்றல் படைத்தவர்கள்.அடுத்தவர்களுக்கு சட்டென்று எந்த உதவியும் செய்திட மாட்டார்கள்.எது சரி எது தவறு என்று ஆராய்ந்த பிறகே உதவிகளை செய்வர்.
- இது சில சமயங்களில் வரவேற்க தக்க விஷயம் இல்லை என்றாலும் பலை நேரங்களில் இது நன்மையை தரும்.
- மேஷ ராசிகாரர்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவர் அதே போல தன் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் கவர்ந்திழுப்பர்.
- மேஷ ராசி என்றாலே உற்சாகப்படுத்தும் ராசி என்று கூறுவார்கள்.ஆகையால் அனைவரும் இந்த ராசியினரை அதிகமாக விரும்புவார்கள்.
No comments:
Post a Comment