Sunday, 20 September 2020

இஷ்ட தெய்வம்

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்கு சனி மூலையில் இருக்கும் கோயில் தெய்வம் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க வல்லது..அங்கு அமாவாசை தோறும் வழிபாடு செய்து வாருங்கள்...உங்கள் துன்பங்கள் விலகும்!! அதே போல் உங்கள் ஊருக்கு என ஒரு பொது தெய்வம் இருக்கும் ...ஊர்க்கோயில் இதுவும் முக்கியமானது. எல்லை தெய்வத்தை விட்டுவிட்டு அயலூரில் வரம் கேட்பது முறையல்ல..வடக்கு பார்த்து இருக்கும் அம்மன் ஊர் தெய்வமாகும்..!!

ஜாதகம் என்னிடம் பார்க்க வருபவர்களுக்கு பெரும்பாலும் நான் சொல்வது குலதெய்வ வழிபாடு ,உள்ளூர் கோயில் வழிபாடுதான்..வருடம் ஒருமுறை வெளியூர் இஷ்ட தெய்வத்தை வழிபட்டால் போதும் என்றுதான் சொல்கிறேன்...சிலருக்கு திருப்பதியும் சிலருக்கு திருச்செந்தூரும் பிடிக்கும்..எல்லாத்தையும் கலந்து கட்டி கும்பிடுவது இப்போது வழக்கமாகி விட்டது..ஆனால் அக்காலத்தில் இஷ்ட தெய்வம் முருகன் எனில் அவரை மட்டும்தான் வழிபடுவர்.

No comments:

Post a Comment