Saturday, 19 September 2020

கார்த்திகை என்றால் என்ன?

₹₹₹ கார்த்திகை ₹₹₹

******* THE AGNI ******

கார்த்திகை என்றால் தீபம், தீபம் என்றால் நெருப்பு ,, கார்த்திகை நட்சத்திரத்தில் நெருப்பு ராசி அதிபர்களின் பங்கு என்ன என்பதை பற்றிய சிறிய ஆய்வு

கால புருசனின் முதல் வீடான மேஷ வீட்டில் 3 ஆவது நட்சத்திரமாக அமைந்துள்ளது
முதல் பாதம் மேசத்திலும்
2,3,4, நட்சத்திர பாதங்கள் ரிஷபத்திலும் அமர்ந்துள்ளது,,

கார்த்திகை மாதம் என்றால் நினைவுக்கு வருவது, மழை காலம் ,,, மற்றும் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடுவது,, திருவண்ணாமலை தீபம், கிரிவலம்,,, இவை யாவும் மனதில் நீங்காதவை ஆகும்,,

பெண்கள் நெருப்பு மாதிரி இருக்க வேண்டும் கற்பு நெறி தவறாமல் இருக்க வேண்டும் இதில் மிகவும் கெட்டி காரர்கள் நெருப்பு அருகில் யாரும் கிட்ட நெருங்க முடியாது அல்லவா அந்த அளவிற்கு நேர்த்தியான கற்பு கரசி இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்,,,

கார்த்திகை நட்சத்திர அதிபதி சூரியன் ஆவார்,,

சூரியன் ,,செவ்வாய் வீடான விருச்சிக ராசியில் கார்த்திகை மாதம் முழுதும் பயணம் செய்வார்,, விருச்சிகம் கால புருசனுக்கு 8 ஆம் வீடு ஆகும்,, இந்த வீடு இருட்டு வீடு, ரகசிய வீடு,,மற்றும் உடலில் மர்ம பிரதேசம் குறிக்கும் பாவகம்,,, இந்த மாதிரியான வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார்,,, இருளில் ஒளி தரும் திருநாளும் இந்த மாதத்தில் வருகிறது,,

தமிழ் மாதத்தில் கார்த்திகை 8 ஆவது மாதம் கால்புருசனுகு 8 ஆவது (விருச்சிக)வீட்டில் சூரியன் கார்த்திகை மாதம் சஞ்சாரம், கார்த்திகை தீபம் விருச்சிக வீட்டில் அதாவது மண்ணால் செய்ய பட்ட கிலின் சட்டி இது செவ்வாய் காரகம்,, அதில் ஊட்றபடும் எண்ணெய் சனி காரகம் ,,அதன் மூலம் தீபம் அக்னி சூரியன் காரகம் ,,8 என்பது சனி தொடர்பு. எண்ணெய் பூமிக்கு பாதாள அடியில் இருக்கும் ஒரு வளமான பொருள் ,, விருச்சிகம் என்றாலே புதைந்து இருக்கும் வீடு என பொருள் ,,ரகசியம் என பொருள்,, இருளில் ஒளி தருதல் இருள் இருக்கும் இடத்தில் தானே ஒளி தேவை,,

வீட்டில் தீபம் ஏற்றுவது மற்றும் குளிரவைப்பது பெண்கள் தான் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது கார்த்திகை பெண் நட்சத்திரம்ஆகும் கார்த்திகை மாதத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யும் ராசி விருச்சிக பெண் ராசி ஆகும்

கார்த்திகை நட்சத்திர கூட்டங்கள் 6 ,, ஆறுமுகன் முருகனை இந்த கார்த்திகை பெண் நட்சத்திரங்கள் தான் வளர்த்து விட்டார்கள் என்று கந்தபுராணம் கூறுகிறது,, (கார்த்திகை நட்சத்திர 2,3,4 பாதங்கள் ரிஷபம் எனும் பெண் ராசியில் உள்ளது )கார்த்திகேயன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு,,

கார்த்திகை நட்சத்திர யோனி பெண்ஆடு ஆகும் வானில் கார்த்திகை நட்சத்திரம் உருவம் ஆடு போல இருக்கும்,, மற்றும் கத்தி உருவமும் இரூகும், தீபம் போன்ற உருவமும் இருக்கும்,
Goat 3714=15=1+5=6 என்பது சுக்ரன் எண் 6 பெண்களால் வளர்க்கப்பட்டார் முருகன்
கார்த்திகை நட்சத்திர கூட்டங்கள் இணைந்து ஆடு நடப்பது போல உருவத்தையும் கத்தி போன்ற உருவத்தையும் கொடுக்கிறது,, கத்தி செவ்வாய் காரகம், ஆடு செவ்வாய் வாகனம் ஆடு

புரட்டாசி மாதம் தொடங்கி மார்கழி வரை குளிர் காலம் தான்,,, இந்த குளிர் காலத்தில் வரும் பௌர்ணமி தினம் யாவும் நம் உடலுக்கு அதிக நன்மை புரிகிறது,, அதில் முக்கியமாக திரு கார்த்திகை தீப பௌர்ணமி தினம் அதிக சக்தியை கொடுக்கிறது,,

கார்த்திகை நட்சத்திரம் நம் உடலில் மூளை மற்றும் தண்டுவட எலும்பை இணைக்கும் புள்ளியில் உள்ளது,, அதாவது நம் உயிருக்கும், உடலுகும், அதிக முக்கியதுவம் வாய்ந்த இடத்தில் கார்த்திகை இடம்பிடித்து இருக்கிறது,,, கொண்டை நரம்பு என்று சொல்வோம் இது உயிர் தளம் ஆகும்,,

ஆங்கிலத்தில் Brainstem என்பார்கள்,
கொண்டை நரம்பு என்று நம் கிராம புறங்களில் சொல்வோம், மேஷம் என்பது தலை குறிக்கும் தலைக்குள் மூளை மற்றும் தண்டுவடம் இணைக்கும் இடம் கார்த்திகை நட்சத்திரம்,,அக்னி தேவன் வாசம் செய்யும் இடம்,, brain stem இதுவே உடலில் எந்த பாகம் எந்த நேரத்தில் உடல் வெப்பம் கூட்ட குறைக்க கட்டளை செய்யும் இடம் ஆகும்,, குளிர்காலத்தில் உடல் உஸ்ணம் அதிகரித்தல்,வெயில் காலத்தில் உடல் உஸ்ணம் குறைந்து குளிர்ச்சி அடைதல், தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தவாறு மாற்றும் flame controller இங்குதான் நடக்கிறது, (ஆனால், இதன் மூல கனல் ஆதி சக்தி மூலம் நட்சத்திரத்தில் இருக்கிறது )எப்போதும் நம் பின்னந்தலை சூடாக இருக்கும் படுத்து உறங்கும் போது கூட சிலருக்கு பிடதி வியர்க்கும்,, இது இந்த கார்த்திகை அக்னி தான்,,

உடம்பில் உஷ்ணம் இருந்தால் உயிர்உண்டு,, உஸ்ணம் இல்லை எனில் பிரேதம் என சொல்வோம்

அக்னி பகவான் வாகனம் ஆடு கார்த்திகை நட்சத்திர யோனி ஆடு,, அக்னி பகவான் மனைவி பெயர் சுவாகா தேவி, அய்யர்கள் யாகம் வளர்க்கும் போது சுவாகா சுவாகா என்று சொல்வதுண்டு,
கார்த்திகை ,,கார்த்திகேயன் எனும் முருக பெருமான் செவ்வாயின் அதி தேவதை ஆவார், கோவில்களில் காவல் தெய்வங்களுக்கு இன்றளவும் ஆடுகள் பலி இட படுகிறது (காவல் செவ்வாய் காரகம்)

கார்த்திகை நட்சத்திர மரம் அத்தி மரம் ஆகும்

இந்த அத்தி மரம் கார்த்திகை நட்சத்திர கதிர்களை அதிகம் கவருகிறது,, அதிக பிரகாசமான நட்சத்திரங்களில் முதல் இடம் கார்த்திகை நட்சத்திரமாகும்,, அத்தி பழம் இதன் உள்ளே சிறிய சிறிய முட்டைகள் உருவத்தில் இருக்கிறது இது கர்ப்ப பை முட்டைகள் போன்ற உருவம் குறிக்கிறது,, அத்தி பலம் சாப்பிட கால்சியம், இரும்பு சத்து பாஸ்பரஸ், சத்து வெகுவாக கிடைக்கிறது,, ஆண்களுக்கு ஆண்மையய் அதிக படுத்துகிறது,, உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது,, பெண்களின் கர்ப்ப பை குற்றங்களை நீக்குகிறது, முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிது பலமாக மாற்றுகிறது ,,
அத்தி மரம் அறிவியல் பெயர்

f.carica என்பர் ,8312131=19=1+9=10=1 சூரியன் கார்த்திகை நட்சத்திர அதிபர் சூரியன் ஆவார், அத்தி பழம் உண்டால் உடலில் காம அக்னி அதிகரிக்கும்

Agni 1351=10=1 suriyan சிவனின் அக்னி பொறிகள் மூலம் 6 குழந்தையாக பிறந்த முருகன் ( 6 சுக்ரன் எண் சுக்ரன்- பெண்)6 பெண்களால் முருகன் வளர்க்கப்பட்டார்,, கார்த்திகேயன் என பெயர் பெற்றார்,,

கார்த்திகை நட்சத்திர மரம் அத்தி
கார்த்திகை நட்சத்திர உருவம் கத்தி
அக்னி, தீபம், கத்தி, அத்தி, எல்லாமே 3எழுத்து கார்த்திகை 3 அவது நட்சத்திரம் 3 என்றால் ஜோதிடத்தில் வீரிய காரகன் செவ்வாய் குறிக்கும் மற்றும்

மற்றும் இந்த 3 என்ற எண்ணுக்குரிய கிரகம் குரு ஆவார்

வீட்டில் தீபம் ஏற்றவது முப்பெரும் தேவியர் வாசம் செய்யவே,, சுடர்,(லட்சுமி) ஒளி, (சரஸ்வதி)வெப்பம் (பார்வதி)

தீபம், அக்னி,3எழுத்துக்கள் முப்பெரும் தேவியர்கள் 3,, கார்த்திகை 3 ஆவது நட்சத்திரம்

Flame 83145=21=2+1=3 குரு எண்

 மேஷம்,செவ்வாய் சிம்மம் சூரியன் தனுசு குரு திரிகோணம் ,,,செவ்வாய், சூரியன், குரு (ஆண் கிரகங்கள்,)மூவரும் இணைந்த ஒளி கார்த்திகை தீப ஒளி

அக்னி , ஒளி,சுடர், என்றால் வெளிச்சம் என பொருள் வெளிச்சம் காரகம் குரு,, குருவின் எண் 3 இருட்டில் ஒளி  தேவை அதற்கு தான் தீபம் ஏற்றுவோம் அதே போல அத்தி பழம் குழந்தை பேறு கொடுக்கும்,, கார்த்திகை விரதம் பிள்ளை பேரு கொடுக்கும், முதலிரவு முடிந்து மறுநாள் ஆடு பலி இடுவார்கள் இதுவும் குழந்தை வேண்டி தான் நடைமுறையில் இருக்கிறது,, 
அத்தி பழம் ஆங்கிலத்தில் fig என்று சொல்வார்கள் f-8,i-1,g-3=கூட்டு தொகை 12=1+2=3 குரு எண் குருபுத்ர காரகன்,,ஆவார்

ஆக மொத்தம் கார்த்திகை நட்சத்திரம் குழந்தை பேறு வேண்டி இறைவனை சரணடையும் திருநாள்,, மற்றும் கார்த்திகை நட்சத்திர காரர்களுக்கு பெரும்பாலும் ஆண் பிள்ளைகள் அதிகம்,, இயல்பாகவே இந்த நட்சத்திர காரர்கள் பிள்ளைகளை சரியாக கண்ணியமாக அவர்களுக்கு பிடித்தவாறு  வளர்ப்பார்கள்,,

கார்த்திகை தீபம் என்றால் திருவண்ணாமலை தீபம் கிரிவலம் இந்த கோவில் அக்னி கோவில் ஆகும் செவ்வாய்கிழமை மட்டுமே பிரசித்தி பூஜை நடந்து வருகிறது,,மற்றும் இங்கு முருகனை தான் முதலில் வணங்கி செல்கிறார்கள்,,

கோவிலின் கிழக்கு ராஜ கோபுரம் 217 அடி உயரம் கூட்டு தொகை 9

கோவிலில் உள்ள மொத்த கல்வெட்டு 450 கூட்டு தொகை 9

திருவண்ணாமலை இல் 1008 லிங்கங்கள் புதைந்து உள்ளது =1+8=9 செவ்வாய் எண்

கோவிலின் இருக்கும் மண்டபங்கள் எண்ணிக்கை 306=3+6=9 செவ்வாய் எண்

கிளி கோபுரம் 81அடி உயரம் 8+1=9

அம்மணி அம்மன் கோபுரம்171அடி உயரம் 1+7+1=9

வடக்கு கட்டை கோபுரம் 45அடி உயரம் 4+5=9 கூட்டு தொகை 9

கோவிலில் 360 தீர்த்தம் உள்ளது,,3+6+0=9

ஒவ்வொரு இடத்தில் நின்று காணும் தரிசனம் 27தரிசனம் 2+7=9

மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளது 

9 என்பது செவ்வாய் எண் ஆகும்,,

மலையின் உயரம் 2665 அடி உயரம் மலை
19=10=1சூரியன் எண்

கோவில் ஆலய pincode 606601=19=1+9=10=1 சூரியன் எண் ,,கார்த்திகை நட்சத்திர அதிபதி சூரியன் ஆவார்

1000 கால் மண்டபம் உண்டு கூட்டு தொகை 1 சூரியன் எண்

கோவிலில் கார்த்திகை தீப திருநாள் 10 நாள் நடைபெறும் கூட்டு தொகை 1 சூரியனின் எண்

செவ்வாய், சூரியன், குரு, மூவரும் கார்த்திகை நட்சத்திரத்தில் பங்கு பெறுகிறார்கள்,,,

மற்றும் கார்த்திகை சனி தொடர்பு அடுத்த பதிவில் இடலாம்

ஓம் நமசிவாய ஸதீஷ் குமார்

No comments:

Post a Comment