Tuesday, 1 September 2020

தானத்தை செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா

தானம் செய்வது என்பது நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும்.

என்னதான், பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம். அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அந்த வகையில் நாம் தானம் செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து தானம் செய்தால் நமக்கு கிடைக்கும் புண்ணியத்தின் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம். எந்த பொருளை சேர்த்து கொடுக்கவேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்..

அன்னதானம்,வஸ்திரதானம்,பணதானம் இது போன்ற பல்வேறு விதமான தானங்களை நாம் செய்து வருகிறோம்.

இதுபோன்ற தானங்களை செய்யும்போது துளசி இலைகளையும் சேர்த்து தானம் செய்தால் இரட்டிப்பான பலனை அளிக்கும் என்கிறது சாஸ்திரம்.தானம் கொடுக்கக்கூடிய பொருளோடு ஓரிரு துளசி இலைகளை சேர்த்து தானமாக கொடுங்கள்.

துளசியை தானமாக கொடுத்தால் உங்களுக்கு தனவரவு அதிகரிக்கும். இனி வரும் நாட்களில் நீங்கள் தானம் செய்யும்போது முழுமனதோடு, சந்தோஷத்தோடு துளசி இலைகளையும் சேர்த்து தானம் வழங்கி புண்ணியத்தை இரட்டிப்பாக சேர்த்துக்கொள்ள்ளுங்கள்.

மேலும், எந்தெந்த பொருட்களை கொடுத்தால் என்னென்ன பலன்களை அடைய முடியும் என்பதை பார்போம்

  • மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்
  • பூமி தானம் – இகபரசுகங்கள்
  • வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி
  • கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்
  • திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்
  • குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
  • நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
  • வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்
  • தேன் தானம் – சுகம்தரும் இனியகுரல்
  • சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்
  • தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்
  • கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
  • பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி
  • பால் தானம் – சவுபாக்கியம்
  • சந்தனக்கட்டை தானம் – புகழ்
  • அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்
  • வெள்ளி தானம் – மனக்கவலை நீங்கும். பித்ருகள் ஆசிகிடைக்கும்
  • விதை தானம் – வம்ச விருத்தியை தரும்

No comments:

Post a Comment