Wednesday, 21 October 2020

லக்னம்/ராசிக்கு 7ல் ராகு 1ல் கேது பொது பலன்..!

லக்னம்/ராசிக்கு 7ல் ராகு 1ல் கேது பொது பலன்..!

லக்னம்/ராசிக்கு 7ல் ராகு: இந்த அமைப்பு ஜாதகர் தன் வாழ்வில் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியின் மீதும் அதிக எதிர்பார்ப்பை தரும், களத்திரம், தொழில் கூட்டாளி, இவ்வாறு ஜாதகர் அணுகும் அத்தனை எதிர்காரகத்தினரிடமும் அதிக எதிர்பார்ப்பை ராகு தருவார், ஆனால் அதில் நிறைவேறுவது மிக சிலவே, சிலருக்கு ஏமாற்றமே வாழ்க்கையாக இருக்கும், அதாவது எதிர்காரகத்தினரிடம் இவர்களாகவே அதிக எதிர்பார்ப்பை வளர்த்து கொள்வார், அல்லது எதிராளி இவருக்கு அவ்வாறான மாய தோற்றத்தை காட்டி ஏமாற்றுவார், இதனால் பல குடும்பம் சிக்கலில் உள்ளது, பல தம்பதியர்கள்/காதலர்கள் கருத்து வேறுபாட்டுடனோ அல்லது பிரிந்தோ தான் வாழ்கிறார்கள், மேலும் இந்த அமைப்பு தொழில் கூட்டாளி, வேலை செய்யும் இடத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள், நண்பர்களிடத்திலும் அதிக எதிர்பார்ப்பை தரும், இந்த அமைப்பு களத்திரத்தை சீக்கிரம் கொடுத்து பின்பு கெடுக்கும், காமத்தில் அதிக ஈடுபாட்டை தரும் சிலருக்கு திருப்தியின்மை ஏற்படலாம், சிலருக்கு பால் உறுப்புகள் சம்பந்தபட்ட பிரச்சனைகள் எழும், வாழ்வை அனுபவித்து வாழவேண்டும் என்பது இவர்களின் நினைப்பு ஆனால் நிறைவேறுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

லக்னம்/ராசியில் கேது: முகத்தில் ஏதாவது தழும்பு ஏற்படலாம், சிந்தனைகள் மாறிக்கொண்டே இருக்கும் அதை கடிவாளம் போட்டு கட்டுப்படுத்துவது மிக கடினமான வேலையாக இருக்கும், இவர்கள் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதில் முதலில் தாமதம்/தடை/ஏமாற்றம் ஏற்படலாம், பலர் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருப்பார்கள், இந்த அமைப்பு மறதியை அதிகம் தரும், இவ்வாறு அமைய பெற்றவர்கள் ஆண்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் கொள்வார்கள், பெண்களாக இருந்தால் தாடி வைத்த ஆணை பிடிக்கும், ஏதோ அது அவர்களுக்கு பாந்தமாக இருப்பதாகவும் நினைப்பார்கள்,  சந்தேக புத்தி அதிகமிருக்கும் இந்த அமைப்பு பெற்றவர்களுக்கு, ஏனெனில் 7ல் ராகு தரும் ஏமாற்றங்களால் எதையும் சந்தேக கண் கொண்டே பார்ப்பார்கள், கணவன்/மனைவி/காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேச ஆரம்பித்தால் நிச்சயம் ஏதாவது ஒரு கருத்து வேறுபாடு எழும், பின்னர் அதை பற்றி வருத்தம் கொள்வார்கள், தனிமை இவர்களை பொறுத்தவரை நன்றாக இருப்பதாக உணர்வார்கள் ஆனால் அதிலும் பெரும் சஞ்சல நிகழ்வுகளே சிந்தனைகளாக எழும்...

பரிகாரம்: வாரம் ஒருமுறை இயற்கையான இடத்துக்கு மனைவி/காதலர்/தனிமையில் சென்று வாருங்கள் இது பிரபஞ்ச ஆற்றலை பெற உதவும், இதனால் ராகுவின் தாக்கத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் பெறலாம், போகுமிடத்தில் குறைந்தது 24 நிமிடம் கழிப்பதாக இருக்கட்டும், தனிமையை தவிருங்கள், சிந்தனை செய்யும் போது அமைதியாய் எல்லோர் மத்தியிலும் அமர்ந்திருங்கள், மௌனம் கேதுவை அதிகம் தூண்டும் என்பதால் 15நிமிடத்துக்கு மேல் மௌனம் வேண்டாம்...

...

No comments:

Post a Comment