Saturday, 17 October 2020

திருவேங்கடமுடையானின் ஆபரணங்களின் வகைகள்!!

திருவேங்கடமுடையானின் ஆபரணங்களின் வகைகள்!!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பெருமை மிகு திருவேங்கடமுடையான் திருப்பாதம் முதல் திருமுடி வரை எத்தனையோ திவ்யாபரணங்கள், மணிஹாரங்கள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சி பக்தர்களுக்கு ஆச்சர்யத்தையும், ஆனந்தத்தையும் மேலோங்கச் செய்யும். இப்படி மின்னும் ஆபரண அலங்காரங்கள் எத்தனை எத்தனையோ !

தங்க பத்ம பீடம், தங்க பாத கவசம், சுவர்ண பீதாம்பரம், தங்க நந்தக வாள், வைரங்கள் பதித்த சூர்ய கட்டாரி ( வாள் ) , வைகுண்ட ஹஸ்தம் ( வரத ஹஸ்தம் ) , கடி ஹஸ்தம், தங்க கவசங்கள் , சாலகிராம ஹாரங்கள், சங்கு, சக்ர தங்க கவசங்கள், நவரத்தினங்களால் பதிக்கப்பட்ட கவசங்கள், லக்ஷ்மி ஹாரம், நான்கு சர சஹஸ்ர நாம மாலை, வைர கிரீடங்கள், மகர தோரணம்.. இப்படி எண்ணிலடங்கா ஆபரணங்கள் திருவேங்கடமுடையானுக்கு இருப்பது சிறப்பு.

No comments:

Post a Comment