Monday, 19 October 2020

முடக்கு வாதக் கசாயம்

முடக்கு வாதக் கசாயம்

நிறைய வகை வலிகள் நம்மைப் பாதிக்கின்றன

மூட்டு வலி கழுத்து வலி இடுப்பு வலி சிறு சிறு முட்டுக்களில் மட்டும் ஏற்படும் வலி மூட்டுக்களின் அமைப்பு மாறி முடங்கிப் போக வைக்கும் முடக்கு வாதம் போன்ற பல வகை வலிகளால் பலர் அவதிப் படுகின்றனர்

முடக்கு வாதம் என்பது ஒரு மிகப் பெரிய சவால்

வலிகளைக் குறைக்க ஒரு மாத்திரை வீக்கங்களைக் குறைக்க ஒரு மாத்திரை மற்ற மூட்டுகளுக்குப் பரவாமல் இருக்க ஒரு மாத்திரை இயக்கங்கள் இயல்பாக இருக்க ஒரு மாத்திரை வலிகளை உணராமல் இருக்க ஒரு மாத்திரை என்று பல வகையான மாத்திரைகள் சாப்பிட வேண்டிய கட்டாய நிலைகுத் தள்ளப் படுகிறோம்

முடக்கு வதத்தால் ஏற்படும் வலிகளைக் குறைப்பதற்கு வீக்கங்களைக் கட்டுப் படுத்துவதற்கு

நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் கசாயம் இந்த முடக்கு வாதக் கசாயம்

பல வருடங்களாக முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல மூட்டு வலி இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தொடர்ந்து நூறு நாட்கள் இந்தக் கசாயத்தைப் பயன்படுத்தி வர வலிகளும் வேதனைகளும் வீக்கங்களும் படிப்படியாக குறைந்து கொண்டே வருவதை உணர முடியும்

சுத்தி செய்த கொடிவேலி சூரணம் ...... இரண்டு கிராம்

புங்க மர வேர்ப் பட்டை சூரணம் ...... இரண்டு கிராம்

ஆயில் மரப் பட்டை சூரணம் ...... இரண்டு கிராம்

கடுக்காய் தூள் ...... இரண்டு கிராம்

திப்பிலி தூள் ...... இரண்டு கிராம்

கடுகு தூள் ...... இரண்டு கிராம்

ஆகிய  ஆறு பொருட்களையும் கொடுத்துள்ள அளவின்படி எடுத்து

நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி

நூறு மில்லி கசாயமாக சுருக்கி

இறக்கி வடிகட்டி

ஒரு வேளை மருந்தாக

உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக்குடித்து வர வேண்டும்

தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்

ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிடுவது நல்லது

நிறைய வலிகள் வேதனைகளால் பாதிக்கப் பட்டவர்கள் வேறு மருத்துவ முறை மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் இந்த முடக்குவாதக் கசாயத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி வர படிபடியாக உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்

ஊசி மருந்துகள் எடுப்பவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் எடுப்பவர்கள் வலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் எந்த நோயாளிகளாக இருந்தாலும் வாதம் சம்பந்தப் பட்ட பிரச்சினைகளில் இருந்து முழுமையாக வெளி வர வேண்டும் வலிகளைக் குறைக்க வேண்டும் பக்க வாதத்தில் இருந்து வீடு பட  வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தி நலமடையலாம்

இது வெறும் முடக்கு வாதத்திற்கு மட்டுமல்ல பக்க வாதத்தையும் குணப் படுத்தும் மிக சிறந்த மருந்து

மூட்டுகளில் ஏற்படும் கடுமையான வலிகளையும் வீக்கங்களையும் குறைத்துக் குணப் படுத்தும் ஆற்றல் வாய்ந்தது இது

முடக்கு வாத நோய் என்பது மிக மோசமான நோய் ஆகும்

ஒரு முட்டில் ஆரம்பிக்கும் இந்த நோய் படி படியாக மற்ற மூட்டுக்களுக்கும் பரவி மற்ற மூட்டுக்களின் இயக்ககங்களும் குறைந்து உருவ அமைப்பே கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போய் நம்மை முடக்கக்கூடிய மிகப் பெரிய நோய்தான் முடக்கு வாத நோய் ஆகும்

பிறந்ததில் இருந்தே ஏற்படுகின்ற முடக்கு வாத நோய்

இதய கோளாறுகளால்  ஏற்படும் முடக்கு வாத நோய்

காய்ச்சலுக்குபின் ஏற்படும் முடக்கு வாத நோய்

உடலில் ஏற்படும் காயங்களால் அதனால் ஏற்படும் அழற்சி தொற்றுக்களால் உண்டாகும் முடக்கு வாத நோய்

இடியோபதிக் ருமாட்டாய்டு ஆர்த்திரிட்டிஸ் என்ற என்ன காரணம் என்று தெரியாமலே ஏற்படும் முடக்குவாத  நோய்

என்று பல வகைகளில் முடக்கு வாத நோய் நம்மைப் பாதிக்கின்றது

பொதுவாக முடக்கு வாத நோய் ஏற்படும்போது உடலுடைய இயக்கங்கள் காலை வேளைகளில் நின்று போய் விடுவதை பார்க்க முடியும்

காலையில் எழுந்திருக்கும்போது நடக்க முடியாது

கைகால்களை நீட்டி மடக்க முடியாது

நேரம் ஆக ஆக படிப்படியாக மூட்டுகளின் இயக்கங்கள் சரியாகி எந்த சிரமும் இல்லாமல் நாம்  வேலையைப் பார்க்க முடியும்

ஆனால் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டால் படுத்து விட்டால் மீண்டும் எழுந்திருக்கும்போது இயக்கங்கள் ஏற்பட நீண்ட நேரம் ஆகும்

முடக்கு வாத நோயாளிகளுக்கு முடக்கு வாதத்தால் முட்டுகளில் வலிகளும் வீக்கங்களும் வேதனைகளும் இருக்கும்போது ஒரு தும்மல் ஏற்பட்டால் கூட உடல் முழுவதும் கரண்ட் ஷாக் அடிப்பது போல வலிகளும் வேதனைகளும் சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கடுமையாக மோசமாக இருக்கும்

அந்த அளவுக்கு மிக கடுமையான வலிகளை ஏற்படுத்தும் முடக்குவாத நோயை நீக்கக் கூடிய அழகான அரு மருந்து இது

பக்கவாதம் என்பது

பொதுவாக மூளையில் ஏற்படும் இரத்தக் கட்டிகளால் ஏற்படும்

அல்லது விபத்துக்களால் ஏற்படும்

அல்லது நேரடியாக முதுகுத்தண்டில் இருக்கும் காயங்களால் ஏற்படுவது

என்ற மூன்று வகைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது

எவ்வளவு முயற்சி செய்தாலும் பக்கவாத நோயில் இருந்து முழுமையாக விடுபடுவது என்பது மிகப் பெரிய சவாலாக  இருக்கிறது

மருந்துகள் சாப்பிட்டாலும் எவ்வளவோ உணவு முறை மாற்றம் உடல் பயிற்சிகள் இயன்முறை மருத்துவம் என்ற பிசியோ தெராப்பி செய்தாலும் கைகளின் இயக்கம் கால்களின் இயக்கம் பேசுவதில் உள்ள சிரமம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களைக் காண முடிவதில்லை

பக்க வாதத்தால் ஏற்படும் பக்க விளைவுகளான உடலுடைய இயக்கம் குறைந்து போவது உள்ளுறுப்புகளின் இயக்கம் குறைந்து போவது சென்ஸ் ஆர்கன் என்ற கண் காது மூக்கு வாய் போன்ற உறுப்புகள் செயல்பாடுக் குறைபாடு தோலில் உணர்ச்சிகள் குறைந்து போவது போன்ற நிறைய தொந்தரவுகள் ஏற்படுகின்றன

சுற்றி நடக்கும் நடப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல் புரிந்தாலும் அதற்கேற்ற பதில்களை சொல்ல முடியாமலும் இருக்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது

படுத்த படுக்கையாக இருக்கும் பக்க வாத நோயாளிகள் கூட இந்த மருந்தை தொடர்ந்து தினமும்  மூன்று வேளைகள் சாப்பிட்டு வர

ஓரிரு மாதங்களில் கைகளின் இயக்கத்தில் மாற்றம்

கால்களில் இருந்த உணச்சியற்ற தனமை மாறி கால்களின் இயக்கத்தில் மாற்றம்

மலம் அல்லது சிறுநீர் கழிக்கும்போது இருந்த உணர்ச்சியற்ற தன்மை மாறி முன்னேற்றம் அடைவதை   உணருவார்கள்

பக்கவாத நோயை வேகமாகக் குணமாக்க உதவும் கசாயம் இது

மூல நோய்

மூன்றுவகைப் படும்

முதல் வகை

வெளிப்புறமாக எதுவும் தெரியாது உட்புறமாக மட்டும் ஏதோ அடைப்பு இருப்பது போல தோன்றி மலம் கழிக்கும்போது உதிரப் போக்கு ஏற்படும்

வலி வேதனை எரிச்சல் ஆசன வாயில் இருந்து கொண்டே இருக்கும்

இரண்டாவது வகை

மலம் கழிக்கும்போது ஆசன வாய் வழியாக ஏதோ ஒரு தசை வெளியே வந்து மீண்டும் மலம் கழித்து முடித்த உடனேயே உள்ளே போய் விடும்

வலிகளும் வேதனைகளும் எரிச்சலும் முள் குத்துவது போன்ற கடுமையான வலியும் ஆசன வாயில் இருந்து கொண்டே இருக்கும்

மூன்றாவது வகை

ஆசன வாய்க்கு வெளியே ஒரு தசை தொங்கிக்கொண்டே இருக்கும்

எவ்வளவு முயற்சி செய்தாலும் அழுத்தி விட்டாலும் உள்ளே போகும் ஆனால் மறுபடியும் வெளியே வந்து விடும்

சில நேரங்களில் ஆசன வாயை முழுமையாக அடைத்து ஒரு நாளில் பல முறை மலம் கழிக்கும் துன்பத்தை ஏற்படுத்தும்

இது சம்பந்தப் பட்ட பிரச்சினைகளைக் குறைக்க வேண்டும் குணப் படுத்த வேண்டும் என்ற நிலையில் நமக்கு துணை வருவது இந்தக் கசாயம் ஆகும்

இந்த முடக்கு வாதக் கசாயம்

உடலில் ஏற்படும் மூட்டு வலிகள் காரணமாக ஏற்படும் வலிகள் வீக்கங்கள் வேதனைகள் இயக்கக் குறைபாடுகள்

பக்கவாத நோய் காரணமாக ஏற்படும் உடலின் இயக்கங்கள் பாதியாகவோ முழுமையாகவோ நின்று போய் விடுதல்

மூல நோய் காரணமாக மலம் கழிபதில் ஆரம்பித்து மலம் வரும் சூழலிலேயே அரிப்பையும் எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்தும்

ஆகிய மூன்று பிரச்சினைகளையும் நிரந்தரமாகக் குணப்படுத்த உதவும் மிக சிறந்த மருந்து ஆகும்

இதை தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டு நலமுடன் வாழ முடியும்

குறிப்பு

கொடிவேலி நச்சு தன்மை உடையது

முறைப்படி சுத்தி செய்த கொடி வேலியை மட்டுமே மருந்தாகப் பயன் படுத்த வேண்டும்

எனவே தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தைப் பயன் படுத்தக் கூடாது

No comments:

Post a Comment