Friday, 23 October 2020

ராகு/கேது எங்கு உள்ளார், எப்படி தூண்டபடுவார்கள்..!

1ல் ராகு: எதிலும் முன்னிலை பெருவதாலும், பேராசை கொள்வதாலும் தூண்டபடுவார்..

1ல் கேது: முகத்தில் காயம், எப்போதும் முகத்தை உம் என்று வைத்திருப்பதால் தூண்டபடுவார்..

2ல் ராகு: அதிகமாக பேசுவதால், பொய், பணத்தாசையால் தூண்டபடுவார்..

2ல் கேது: புதிர்போட்டு பேசுவது, எப்போதும் பேசாமல் மௌனம் சாதிப்பதின் வழியே தூண்டபடுவார்..

3ல் ராகு: அதிக எதிர்பார்ப்பு, பிடிவாத முயற்சி..

3ல் கேது: முயற்சியே இல்லாமல் இருத்தல், எதையும் ஆராய்வது, எதிலும் சந்தேகம்..

4ல் ராகு: தன்னலம், வீடு, வாகனம் இவைகளை ஆடம்பரமாக அலங்கரிப்பது..

4ல் கேது: வீட்டை அடிக்கடி மாற்றுவது, அம்மாவை கவனிக்காமல் விடுவது..

5ல் ராகு: பூர்வீகத்தில் சொத்து சேர்ப்பது, மன அமைதி இல்லாமல் மந்திர ஜபம் செய்வது..

5ல் கேது: பூர்வீக தொடர்பை துண்டிப்பது, மந்திர ஜபம் செய்வது..

6ல் ராகு: கடன் வாங்குவது, வாய் சவடால் விட்டு வம்பிழுப்பது..

6ல் கேது: நோய் மேல் அக்கறை இல்லாமல் இருத்தல், மல சிக்கல், அடி தடி தகராறு..

7ல் ராகு: அதிக காமம், தொழில் கூட்டாளி, நண்பர்களை ஏமாற்றுவது..

7ல் கேது: மனைவியை மதிக்காமல் திட்டுவது, எதிராளியை சந்தேகப்படுவது..

8ல் ராகு: தவறான வழியில் பணம் ஈட்டுவது, தவறான நபர்களின் தொடர்பு..

8ல் கேது: மற்றவரை அழிக்க நினைப்பது, கொடுமை படுத்துவது, ஒருவரை அடைத்து வைப்பது..

9ல் ராகு: தன் சேமிப்பை வெளியில் கூறுவது, ஆன்மீக பயணங்களை ஆடம்பரமாக நடத்துவது..

9ல் கேது: ஆன்மீக தரிசனங்களை ரகசியம் காப்பது, தானம், தர்மம் செய்வதை வெளியில் கூறாமல் இருப்பது..

10ல் ராகு: தன் தொழில்/வேலையை பற்றி பெருமை பேசுவது, கர்ம காரியங்களை உதாசீனம் செய்வது..

10ல் கேது: மற்றவரின் வளர்ச்சியை சூழ்ச்சி செய்து தடுத்து தன் தொழில்/வேலையை உருவாக்குவது, கர்ம காரியங்களில் முறை தவறி செயல்படுவது..

11ல் ராகு: எல்லோரையும் லாப நோக்கத்தில் அணுகுவது, திருமணம் செய்யாமல் தொடர்பு வைத்து கொள்வது..

11ல் கேது: எனக்கு எந்த லாபமும் வேண்டாம் என கூறி தந்திரமாக லாபம் பார்ப்பது, மூத்த சகோதரனை உடலால்/உள்ளதாலும் காயப்படுத்துவது..

12ல் ராகு: இரவில் கண் விழிப்பது, தவறான புகைப்படம், வீடியோ பார்ப்பது, படுக்கை அறையில் மது அருந்துவது..

12ல் கேது: துணையை தாம்பத்தியத்தில் திருப்தி செய்யாமல் தன் சுகம் மட்டுமே முக்கியம் என நினைப்பது, படுக்கை அறையில் மனைவியை அடைத்து வைப்பது சண்டை போடுவது..

குறிப்பு: எப்போதுமே ராகு/கேதுவை தூண்டாமல் இருப்பது நலம், தூண்டினால் நல்ல பலன் கிட்டுமா என்பதை சோதித்தே தூண்ட வேண்டும், இல்லையேல் எதிர்மறை பலனே மிஞ்சும்.

No comments:

Post a Comment