Monday, 26 October 2020

கேதுவும் அதன் தெய்வங்களும்..

கேதுவும் அதன் தெய்வங்களும்..!

கேதுவின் அதி தெய்வம் பிரம்மன், பரத்யதி தெய்வம் சித்திரகுப்தர், பரிகார தெய்வம் விநாயகர், இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் கேதுவை ஏன் கர்ம கணக்காளர் என்று நான் கூறுகிறேன் என்பதை, முன்வினை பயன்கள் அத்தனையும் கேதுவின் வசமே, அதனை பொருட்டே படைப்பு கடவுள் உயிரினத்தை படைக்கிறார், பின்னர் அந்த உயிரினம் உலகில் தன் கர்மாவை வாழ்ந்து கழிக்க பரிகார தெய்வம் விநாயகர் உதவுகிறார், அந்த உயிரினம் பிறப்பு முதல் இறப்பு வரை என்ன கர்மம் சேர்கிறார், எதை கழிக்கிறார் என்பதை சித்திரகுப்தர் கண்காணித்து குறித்து கொள்வார், பின்னர் திரும்பவும் அந்த கர்ம கணக்கின்படியே அந்த உயிரினத்தின் மறு பிறப்பு அமையும், இதற்கும் கேதுவின் காரகங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, உண்மையில் கேது பிரதிபலிக்கும் காரகங்கள் அனைத்தும் அவரவர் செய்த கர்மவினையே, ஒருவர் ஜாதகத்தில் கேது நன்மை செய்வதும் தீமை செய்வதும் அவரவர் கர்மாவை பொறுத்ததே, கேது எல்லா காரகத்தையும் பதிபலிப்பார்...

நான் என்னதான் இவ்வாறு கூறினாலும் கேது நின்ற வீட்டில் ஒரு இழப்பை தருக்கிறாரே அது ஏன்? என்பதே பலரின் கேள்வி, விடை கர்மம் சேர்க்காமல் மனிதனில்லை, அவ்வாறு சேர்த்த கர்மத்தை மனிதன் பிறப்பெடுத்து கழித்தே ஆகவேண்டும், அந்த கர்மத்தையே கேது தான் நின்ற ஆதிபதிய பலனில் பிரதிபலிக்கிறார், காரகாதிபதியும் கெட்டால் அதே கர்ம பலனை காரகத்திலும் தருவார் கேது...

மூன்று தெய்வங்கள் உள்ளனவே யாரை வழிபடுவது, சிலருக்கு விநாயகர் வழிபாடு அவ்வளவு நன்மை தராது, சிலருக்கோ சித்தரகுப்தன் வழிபாடு நன்மையை செய்யும், பலர் இவரை வீட்டில் சித்ரா பௌர்ணமி அன்று பூஜித்து வழிபடுவார்கள் அவர்களுக்கு நன்மையும் நடைபெறும், இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அவரவர் கர்ம வினை பொறுத்து கிடைக்கும், பிரம்மாவுக்கு என்று தனி கோயில் கிடையாது, ஈசனின் கோயிலில் சுதை சிற்பமாக இருப்பார், ஆகவே இவருக்கு அவ்வளவு வழிபாடும் கிடையாது ஏனெனில் ஈசனின் கோபத்துக்கு ஆளானதால், பிரம்மனை சாந்தி செய்ய ஈசனை சரண் புகுந்தால் போதும் என்பது என் தாழ்மையான கருத்து, இம்மூவரையும் எந்த நிலையில் வழிபடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் மேற்கொண்டு படிக்க...

பிரம்மன் வழிபாடு: ஜனன ஜாதகத்தில் கேது 5ல் நின்றாலோ, சூரிய தொடர்பை பெற்றலோ ஈசனை சரண் புகுந்து பிரம்மனை வழிபடுவது நல்ல பலனை தரும்..

சித்திரகுப்தன் வழிபாடு: ஜனன ஜாதகத்தில் கேது சனியின் தொடர்பை பெற்றால், 8ல் நின்றால் இவரை வழிபடுவது அதி உத்தமமான செயலாகும், காஞ்சியில் உள்ளது கோயில், இதனால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய் விட்டது என்பதை போல் பல அசுப விஷயங்களில் இருந்து காப்பார்...

விநாயகர் வழிபாடு: இவரை வழிபடாமல் எந்த வழிபாட்டு முறையையும் ஆரம்பிக்க இயலாது என்றாலும், ஜாதகத்தில் கேது அசுப நிலையில் எங்கு நின்றாலும் இவரை வழிபடலாம், அவ்வாறே மேலே கூறிய மற்ற இருவரும் ஆனாலும் அவ்விருவருக்கு சில நிலையில் கேது நின்றால் காக்கும் அமைப்பு உள்ளதால் அதை குறிப்பிட்டேன்...

எல்லாவற்றையும் கூறியபின்பு முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து போய் விட்டேன், ஆமாம் நீங்கள் எவ்வாறு இம்மூவரையுன் வழிபட போகிறீர்கள், வெளிப்படையாகவா?!, கூடவே கூடாது கேது ஆடம்பரத்தை விரும்பாதவர், இம்மூவரில் யாரை வழிபட்டாலும், அது பரம ரகசியமாக இருக்க வேண்டும், ஆடம்பரமாக பூஜை செய்வது, மற்றவர் பார்க்க வேண்டும் என்று கோயிலுக்கு படோடோபமாக செல்வது, உங்கள் வழிபாட்டில் கிடைக்கும் ஏற்றத்தை மற்றவரிடம் பகிர்வது, இந்த மற்றவர் என்பது பெற்ற தாயையும் சேர்த்தே கூறுகிறேன், இவ்வாறான செயல்கள் செய்தால் கேது தலையில் ஓங்கி அடிப்பார் தாங்கதான் தெம்பு இருக்காது நமக்கு, சூழ்ச்சம வழிபாடு மட்டுமே கேதுவை திருப்தி செய்யும், கேதுவின் தெய்வங்களை பூஜை/மந்திர ஜெபம்/ கோயிலுக்கு சென்று இவ்வாறான வகையில் வழிபடலாம் என்றாலும் எவ்வாறு வழிபட்டால் நன்மை என்பதை சோதிடரிடம் சோதித்து அறிவதே உத்தமமான காரியம்.

No comments:

Post a Comment