Tuesday, 27 October 2020

சுக்கிர திசையும் #பாதிப்பும்

#சுக்கிர திசையும் #பாதிப்புகள் தரும்
(பாகம் 1)

பொதுவாக சுக்கிரதிசை வந்துவிட்டாலே அந்த இருபது வருடங்களும் அற்புதமாக இருக்கும் என்று பொதுவான கருத்து கூறப்பட்டாலும் கூட எல்லோருக்கும் சிறப்பாக நடைபெறுவதில்லை.
அது மட்டுமல்ல சிறப்பானதாக இருந்தாலும் கூட 20 வருட காலம் முழுவதும் சிறப்பாக இருப்பதில்லை
என்பதே நடைமுறை உண்மை.

முதலில் சுக்கிர திசை யார் யாருக்கெல்லாம் பாதிப்பைத் தரும்?
யார் யாருக்கெல்லாம் சிறப்பைத் தரும்?
என்பதை பார்க்கலாம்.


ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் லக்னங்களுக்கு சுக்கிர திசை நடைபெறும் காலம் #சுக்கிர பகவான் நல்ல ஸ்தானங்களில் இருந்து அதாவது ராசி, நவாம்சம், சோடச வர்க்கம்
#சுயம்பாவக பலம் மற்றும் ஷட்பலத்தில் வறுத்து நல்ல நிலைமையில் இருந்தால் சிறப்பான நல்ல பலன்களை தருகிறார் என்பது எனது அனுபவத்தின் மூலம் நான் கண்ட அநேக உண்மை.

மேஷம் மற்றும் விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தால் சிறந்த பலனைத் தருகிறார். ஏனென்றால் அவர் மாளவ யோகத்தை ஏற்படுத்துவார்.அதற்கும் நிறைய விதியும் விதி விலக்குகளும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன் வக்ரம் அடையாமல் இருந்தால் நல்ல பலன்களைத் தருவார்.

கடகம் சிம்மம் தனுசு மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக சுக்கிர திசை சிறப்பை தருவதில்லை குறிப்பாக கடக லக்னத்தில் பிறந்து ஏழாம் இடமாகிய மகர ராசியில் சுக்கிரன் இருந்து தசை நடத்தினால் களத்திர தோஷத்தை ஏற்படுத்துவார் ஏனென்றால் காரகோ பாவ நாஸ்தி என்கிற விதிமுறைக்கு ஏற்ப வாழ்க்கை துணை வழியிலும் உறவினர் வகையிலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு இதேபோன்றுதான் சிம்ம லக்னத்திற்கும் கும்ப ராசியில் இருக்கும் சுக்கிர பகவானால் மேற்கண்ட பிரச்சனைகள் ஏற்படும்.

இதேபோன்று தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மிதுன ராசி அல்லது கன்னி ராசியில் இருந்தால் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதேபோன்று #மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மிதுனம், கன்னி, தனுசு வீடுகளில் இருந்தாலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

#மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு சுக்கிரன் கடகம், சிம்மம் , கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசியில் இருக்கும்போது பாதிப்புகளை ஏற்படுத்துவார் .
மேலும் நவாம்சம் மற்றும் இதர வர்க்கங்களை அனுசரித்து பாதிப்புகள் குறைய வாய்ப்பு இருக்கிறதா மற்றும் #பரிகாரங்கள் செயல்படுமா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் #மேஷ லக்னத்தில்
(லக்னத்தின் #புள்ளி #பரணி நான்காம் பாதம் ஆக இருந்து) பிறந்து
#சுக்கிரன் #கன்னி ராசியில்
#சித்திரை நட்சத்திரத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு சுக்கிர திசை நடக்கும் போது கடன் பிரச்சினைகளும், கண்பார்வை பிரச்சனைகளும், வாய் பேச்சு மூலமாக வம்பு வழக்குகளும், குடும்பத்தில் பொருளாதார சிரமங்களும் ஏற்படும். மேலும் வாழ்க்கைத்துணை மூலமாகவும், நண்பர்களாலும், தாய் வழி உறவினர்களாலும் பிரச்சனைகள் வம்பு வழக்குகள் ஏற்படும்.

சரி இதற்கு தீர்வுதான் என்ன?
பரிகாரம் உண்டா?
என்பதையும் காணலாம்.

குறிப்பிட்ட மேஷ லக்கினம் பரணி நட்சத்திர பாதத்தில் லக்னம் விழுந்த ஜாதகர்களுக்கு சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து தசை நடக்கும்போது சுக்கிரனுக்கு நீசபங்கம் அடைந்து இருக்கவேண்டும்.
குருவின் பார்வை கிடைத்திருக்க வேண்டும் .குறிப்பாக குருபகவான் ரிஷப ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக பார்த்தால் மட்டுமே கன்னி ராசியில் இருக்கும் சுக்கிர தசை பிரச்சனைக்கு உண்டான தீர்வுகள் மற்றும் பரிகாரம் எடுபட வாய்ப்புகள் உண்டு.

இது போன்று ஒரு லக்னம் எந்த நட்சத்திரப் பாதத்தில் இருக்கிறது? கிரகம் எந்த நட்சத்திரப் பாதத்தில் இருக்கிறது? அதற்கு விதிகள் மற்றும் விதிவிலக்குகள் உண்டா?
என்பதை தகுந்த அனுபவம் மிகுந்த கணித ஜோதிடர் தீர்மானம் செய்து அதற்கான சிறந்த வழிகாட்டுதலை ஜாதகருக்கு கொடுத்து நல்ல விதமாக வழிகாட்ட இயலும்.

நன்றி மேற்குறிப்பிட்டவை பொதுப்பலன்கள் இன்னும் நுட்பமாக பாகை கலை விகலை ரீதியாக ஒரு ஜாதகத்தை அணுகவேண்டும்.
ஜாதகர் பிறந்த திதி,நாம யோகம், கரணம், தசாபுத்தி அந்தரம் ஒருங்கிணைத்து பலன் கூறவேண்டும்.

 


No comments:

Post a Comment