Tuesday, 6 October 2020

ஓடினால் ஓடுமா தலைவலி?

   ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, உடலின் எடையைக்    குறைப்பதற்காக, ஜாக்கிங் செய்யத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர் எனத் தொடங்கிய ஜாக்கிங், ஆறே மாதத்தில், ஒரு நாளைக்கு 14 கி.மீ. என உயர்ந்தது. ஜாக்கிங் எனது பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தது. வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தியது. நேரத்துக்குச் சாப்பிடத் தொடங்கினேன். நேரத்துக்குத் தூங்கத் தொடங்கினேன்.

உடலின் எடையும் 25 கிலோ அளவுக்குக் குறைந்தது. முக்கியமாக. ஜாக்கிங் செல்லத் தொடங்கிய அன்றிலிருந்து எனக்குத் தலைவலியே ஏற்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் எனக்குத் தலைவலியே வரவில்லை. இப்போது ஜாக்கிங் செல்வதில்லை. மீண்டும் தலைவலி. மீண்டும் ஓவிரான். ஆனால், ஜாக்கிங் சென்றால், தலைவலி போய்விடும் என்ற நம்பிக்கை மட்டும் இன்றும் உள்ளது

No comments:

Post a Comment