Tuesday 20 October 2020

மாந்தியின் கதை....

மாந்தி
***

குளிகாதி

குளிகன் சனியின் புதல்வர்
எமகண்டன் குருவின் புதல்வர்
அர்த்த பிரஹணன்; புதன்
காலன்; சூரியன்
மிருத்யூ; செவ்வாய்

தூமாதி கிரகங்கள்

பரிவேடன் சந்திரன் அம்சம்
இந்திர தனுசு சுக்கிரன் அம்சம்
தூம கேது ;கேது
தூமன்; செவ்வாய்
வியதிபாதன்; இராகு

இராவண மனைவி இந்திர ஜித்தை கருவுற்றிருக்கும்போது அனைத்து கிரகங்களையும் தன் கட்டு பாட்டில் வைத்து தன்மகனின் ஜாதகம் சிறப்பாக்க முயற்சி செய்தார்,
சனிக்கு திணறல் ஏற்பட்டது, தன் வியர்வையால் மாந்தி என புது புத்திரனை உருவாக்கி இந்திரஜித்தின் எட்டாம் பாவத்தில் வைத்துவிட்டார்

இந்திரனை மாயப்போரில் வென்றதால் இந்திரஜித் என அழைக்கப்படுகிறது

உண்மையான பெயர் மேகநாதன்
ஏனெனில் இவன் பிறந்த போது மேகங்கள் அதிர்ந்து இடி இடித்ததால் மேகநாதன் என பெயர் சூட்டப்பட்டது,

இன்னொரு கதை

சனீஸ்வரனுக்கும், குருபகவானுக்கும் இடையே நாரதன் கலகம் செய்து அதனால் இருவருக்கும் யுத்தம் நடந்து , சனி காயமுற்று அந்த உதிரத்தில் உதித்தவன் மாந்தி என்று ஒரு கதை உண்டு,

மாந்தி
1ம பாவத்தில்;
நீசகுணம், ரோகி, காம எண்ணங்கள்,கண்நோய்,

2;சண்டை, வாய் சண்டை,படிப்பு தடை,

3.பண ஆசை இருக்கும், இளைய சகோதரர் கள் இவரை விரும்ப மாட்டார்கள்

4.சொந்த வீடு இருந்தாலும் இவர் கை விட்டு போகும்

5.புத்திமான், ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவர்,
சம்பாதிக்க திறமை இல்லாத்தால் பிள்ளைகள் இவரை வெறுப்பார்கள்

6. வீரன், முட்டாள், மாந்திரீக ஈடுபாடு,

7.நீச மனைவி, நீசர்களோடு சகவாசம், நீசர்களோடு உடல் உறவு,

8.குள்ளன், விகார சொருபம்

9.பிறக்கும் போதே தந்தையை கொல்வார், புத்திர பாக்கியம் கிடையாது,

10.வியாபார தந்திரங்களை தெரிந்தவன்,

11.மனைவியாலும், பொது மக்களாலும் நனமை பெறுவான்

12.ஏழை, காம சுகம் இருந்தும் அனுபவிக்க யோகம் கிடைக்காது

No comments:

Post a Comment