Saturday 31 October 2020

காளான்'.:

உடல் எடையைக் குறைக்க உதவும் 'காளான்'.:

சைவ உணவுகளில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான உணவு காளான். காளானில் அதிகமான புரோட்டீன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும்கூட. காளான் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்து பார்க்கலாம்...

► காளானில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காளான் உதவும். 

► அதேநேரத்தில் காளானில் விஷக் காளான்கள் பல உள்ளன. எனவே, காளான் வாங்கும்போது, உண்ணக்கூடிய காளான் தானா என பார்த்து வாங்க வேண்டும்.

► எந்தவகையான காளானாக இருந்தாலும் வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்தபின்னர் சமைப்பது நல்லது. 

► காளானை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும். 

► வாரத்திற்கு ஒருமுறை காளான் சாப்பிட்டு வந்தால் ஓரிரு மாதங்களில் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

► குறிப்பாக இளம்வயதினர் காளானை அதிகளவு உட்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

► புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும், மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவுகிறது.

► உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

► உடல் கொழுப்பைக் குறைகிறது. பெண்களுக்கு கருப்பை நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. 


► இவ்வளவு பயன்கள் இருந்தாலும் சிலர் காளான் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தாய்ப்பாலை வற்ற வைக்கும் என்பதால் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வயதானவர்களும் காளான் வகைகளில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment