Saturday 17 October 2020

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி நடனம் ஆடியதற்குக் “குஞ்சிதபாதம்” என்று பெயர்

இந்த தரிசனத்தைக் கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை நடராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும் போது, அந்த மூலிகை வேர்களுக்குக் குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது.

சிவபெருமானின் இடது பாகத்தில் சக்தி தேவி இருக்கிறார். அதனால் தான் யமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேற்பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன்.

அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம். அதனால் ஆடல் நாயகனைத் தரிசிக்கும்போது கண்டிப்பாக இடது காலைத் தரிசிக்க வேண்டும். அப்படித் தரிசித்தால் வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்

No comments:

Post a Comment