Saturday 17 October 2020

நவகிரகங்களில் கேது..!

நவகிரகங்களில் கேது..!

கேதுவை ஜனன ஜாதகத்தில் கணிக்க தனி தெய்வ அருள் வேண்டும், கிரகங்களில் மூத்தவர் என்றாலும் கேதுவை எல்லோரும் அழைப்பது சாமியார் என்றே, இங்கே தான் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை பகிறபோகிறேன், கேது சாமியார் அல்ல, ஒருவரின் கர்மம் எதிலோ, அந்த ஜாதகரின் கர்மத்தை எதில் கழிக்க இயலுமோ அதையே கேது வெளிப்படுத்துவார், கேதுவை ஆன்மீக கிரகம் என்று கூறுவது என்னை பொறுத்தவரை தவறு, கேது எல்லா காரகங்களையும் பரதிபலிப்பவர் நின்ற நிலை பொறுத்து என்பதே சரி, ஒருவர் ஜாதகத்தில் கேது நின்ற வீட்டின் ஆதிபதிய காரங்களில் அந்த ஜாதகர் கர்மா சேர்த்துள்ளார் என்று பொருள், கேதுவை எல்லோரும் நினைப்பது போல் மிக கொடூரமானவர் என்று நினைப்பதை விட உன் கர்மம் எவ்வாறானது என்பதை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறார் கேது என்பதே சரியான உச்சரிப்பு...

ஒருவர் சாமியாராக ஆன்மீக பாதையில் போவதும் கேதுவால், சைக்கோவாக கொலை/கற்பழிப்பு/திருட்டு போன்ற செயல்களை செய்வதும் கேதுவால், நல்ல குடும்பம் மனைவி பெற்றோர் ஆடம்பர வாழ்க்கை இவைகளை பெறுவதும் கேதுவால், நீ என்னவாகிறாய் என்பது எதை சேமித்து வைத்துள்ளாய் என்பதை பொறுத்தே, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு, ஆகவே கேதுவை எப்போதும் எதிர்மறையாக பார்ப்பதை கைவிடுங்கள்...

கேது பொதுவாக கொடுக்கும் பலன்கள் Surprise ஆகவே இருக்கும், கேது எதையுமே முன்னறிவிப்பின்றியே தருவார், கேது ஒருமனிதனை பன்படுத்துகிறார் என்றால் அவனின் முன்வினை பயன் அந்த காரகத்தில் தீயதாக இருந்திருக்கும், கேதுவை எப்போதுமே தூண்டாதீர்கள் நான் பலரிடம் கூறும் கருத்து இது, கேது அசுப நிலையில் இருந்தால் அதை தெய்வ ஆற்றல் கொண்டு கடக்க முயலுங்கள் அதை விடுத்து தனிமை, சித்தர் ஜீவ சமாதி வழிபாடு என்று சென்றால் அவரின் காரக பலன் தூண்டப்பட்டு உடனடியாக நடைபெறும், எப்போதுமே கேதுவை நேரடியாக தூண்டுவதை விட உங்கள் ஜாதகரீதியாக அவரின் நிலையை கணித்து சூழ்ச்சமமாக வழிபடுவது தெய்வ ஆற்றலை பெற வழிவகை செய்யும், கேது பெரும்பாலும் அசுப பலனை ஏன் தருகிறார் என்றால் மனிதன் எப்போதுமே நல்லவனாக மட்டுமே இருப்பதில்லை, சில நேரங்களில் அவன் சூழ்நிலையால் கெடுதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படவே செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஏனெனில் கலியுகம், கேது அசுப நிலையில் உள்ளவர்கள் தனிமையை தவிர்ப்பது நலம், ஒருவேளை தனிமையில் இருக்க ஆரம்பித்தால் நாட்கள் செல்ல செல்ல உங்கள் உலகியல் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழும், இது கடைசியில் எப்போதும் தனிமை என்கிற நிலைக்கு தள்ளும், கேது உலகில் எதிலும் பற்றில்லாதவருக்கு நண்பர், பற்றுள்ளவருக்கு எதிரி, ஏனெனில் பற்று கர்மங்களை சேர்க்கும், ஆனால் ராகு இவருக்கு எதிரில் நின்று கர்மங்களை சேர்க்காமல் விடமாட்டார், இது இவர்களுக்குள் உள்ள கர்ம ஒப்பந்தம், ஏனெனில் யாரும் முழு நல்லவனாக உலகில் வாழக்கூடாது அப்படி வாழ்ந்தால் அவருக்கு ஆயுளை கேதுவின் சிபாரிசின் பேரில் சனி பறித்துவிடுவார், கேது எவ்வாறு செயல்படுவார் என்றால் நல் கர்மா அதிகம் சேர்த்த மனிதன் பிறப்பேடுத்தால் அவனுக்கு அத்தனை நல்லவையும் அவனின் கர்மவினைக்கு ஏற்ப வழங்கி ஆண்டு அனுபவித்தவுடன் சனி ஆயுளை பறித்து விடுவார், இதனால் தான் நல்லவராக தெரியும் பலர் அற்ப ஆயுளில் இறந்து போகிறார், கேது எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றதால் அனைத்து காரகங்களிலும் கிடைக்கும் படிப்பினைக்கு காரகராகிறார், கேதுவை ஒதுக்கி விட்டு உலகில் வாழ்வது கடினம், அதே போல் கேதுவுடன் முழுதாக வாழ்வதும் கடினம், இரண்டுக்குமே முன்வினை கர்மம் இடம் தரவேண்டும், ஒருவர் ஜாதகத்தில் கேது நின்ற பாவத்தில் எந்த கிரகமும் சேர்க்கை பெறாமல் நின்றாலே கர்மா குறைவு என்று கணிக்கலாம், ஆனாலும் நின்ற வீட்டின் அதிபதி நல்ல ஸ்தானத்தில் நல்ல நிலையில் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் தான் இன்னும் நன்மை, அதே போல் 5/9ம் வீடு வலுப்பெற்ற ஜாதகருக்கு கேதுவின் தாக்கம் குறைவாகவே இருக்கும், கேதுவின் தாக்கம் அதிகமாகும் போதெல்லாம் ஒருவர் செய்ய வேண்டியது குறிக்கோளே இல்லாமல் நடைபயணம் செய்ய வேண்டும் பின்பு ஆரம்பித்த இடத்துக்கே வரவேண்டும் இது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் சரியான ஆலோசனை இல்லாமல் செய்தால் இதுவே Reverse ல் வேலை செய்து கேதுவை அதிகம் தூண்டும், ஆகவே கேதுவை கட்டுப்படுத்த சோதிட ஆலோசனை இல்லாமல் எந்த செயலையும் முந்திரிகொட்டை போல் செய்யவேண்டாம், கேதுவுடன் சேர்க்கை பெற்ற கிரகத்தை சாந்தி செய்தே ஆகவேண்டும் இல்லை என்றால் சரியான தசை/புக்தியில் அதன் கர்மபலனை அனுபவிக்க வேண்டும், கேதுவை மிக ஆழமாக ஆராய்ந்தே பரிகாரம் கூறவேண்டும், அவ்வாறு கூறப்படும் பரிகாரத்தை எவரிடமும் வெளிப்படுத்தாமல் நிறைவேற்றுவதே சாலச்சிறந்தது, கேது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவே, சுய ஜாதகம், கிரக நிலை பதிந்து கேள்வி எழுப்ப வேண்டாம், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...!

No comments:

Post a Comment