Wednesday 14 October 2020

குளிகன்கிரகம்

குளிகன்கிரகம்.
................

குளிககிரகம் என்பது பகலிலும் , இரவிலும், ஒரு ப்ரத்யேக நேரத்தில், ஒவ்வொரு இராசிக்ஷேத்ரங்களிலும், உதயமாகின்றது.

இந்த குளிகன் கிரகம் உதயமாகின்ற வேளையை,
,. குளிகோதயம்,,
என்று அழைக்கப்படுகின்றது.

இராதுக்கள் (இராகு+சிகண்டி) போலவே, குளிகனுக்கும் சுயக்ஷேத்ரம் கிடையாது,
இருந்தாலும் சனியின் சுயக்ஷேத்ரங்களில் ஒன்றான கும்பம் இராசியை குளிக கிரகத்திற்கு, ஒரு சில கிரந்தங்களில் சொல்லப்படுகின்றது.

கேரளீய ப்ரஸ்னஜோதிஷத்தில் குளிகனுக்கு ஒரு பெரும்பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ரத்யேகமாக, அபிசார கர்ம்மங்கள், ஸ்த்ரீபுருஷ மோகன வஸ்யங்கள், கைவிஷம். சத்ருபாதைகள். துர்மந்திர மரணங்கள், போன்றவற்றை குளிகன் கிரகம் கொண்டுதான் கணிதம் செய்யமுடியும்.

இராமாயணத்தில், இலங்காபுரிவேந்தன், இராவணபிரபு தனது புருஷத்தி மண்டோதரி நிறைமாத கெர்ப்பிணி ஆக இருக்கும்போது, ஜாதக ஜனன சமயம் பிறக்கப்போகும் சிசுவிற்கு சரியாக இருக்கவேண்டும் என்று எண்ணி, ஒன்பது கிரகங்களையையும் சிறை வைத்தான். அப்போது ஒன்பது கிரகங்களில் சனி கிரகமானது, தான் நக்ஷத்ர பாத சாரங்களில் சஞ்சரிக்கமுடியாமல் பெரும் அவஸ்தை பட்டார்,

இராவணன் புருஷத்திக்கு பிரஸவவேதனை ஏற்பட்டது,
அனைத்து கிரகங்களையும், அவரவர்கள் சுயக்ஷேத்ரம்., உச்சக்ஷேத்திரம் போன்றவற்றில் ஸ்திதி செய்தான். ஆனாலும் ஆயுள்ஸ்தானம் நிர்ணயிக்கும் அந்தஸ்து பெற்றுள்ள சனிபகவான், தன்னுடைய லிங்கத்தினால் சுய இன்பம் (Self sex) செய்து, அந்த பீஜசுக்லம் கொண்டு ஸங்கல்பமாக ஒரு கிரகத்தை உல்பாதனம் செய்தார்.
அந்த கிரகத்தை  யாருக்கும் தெரியாமல், இராவணன் புத்திரனின் ஜாதகத்தில் அஷ்டமக்ஷேத்ரம் என்னும், ஆயுள்பாவகம் ஆன எட்டாம் பாவகத்தில் வைத்தார்.
அதுதான் குளிக கிரகம், அதனாலேதான் குளிகன்கிரகம் சனியின் புத்திரன் என்று அழைக்கப்படுகின்றது,

மண்டோதரிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்தபோது அதன் அழுகுரல் கேட்டபோது, மேகங்கள் அதிர்ந்து, இடிஇடித்தது.
மேகங்களையை அதிர வைத்ததால் குழந்தைக்கு,
மேகநாதன்,,
என்று பெயரிட்டான் இலங்கேஸ்வரன்.
பின்னாளில் இந்திரனையே மாயப்போர் செய்து வென்றதினால்,
இந்திரஜித்,
என்கிற நாமத்திலும் அறியப்பட்டான்.

அஷ்டமக்ஷேத்ரத்தில் குளிகன் இருந்ததால் பின்னாளில் மாயப்போரினாலேயே இலக்ஷமணனால் கொல்லப்பட்டான்.
இராவண புத்திரன் இந்திரஜித் என்கிற மேகநாதன். 

குளிகன்கிரகம் ஒவ்வொரு நாளும் பகலிலும், இரவிலும், குறிப்பிட்ட நாழிகையில் உதிக்கின்றது என்பதை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்துகொள்ளவாம்,
இந்த குளிகன்கிரகம் உதயமாகும், குளிகோதயம் நேரத்தை பஞ்சாங்கம் இல்லாமலும் கணிக்கலாம்.

பகல்நேரத்தில் குளிகோதயம் நேரம் அறிந்துகொள்ள, அன்றைய கிழமை முதல் சனிக்கிழமை வரை எத்தனை நாட்கள் உள்ளது என்பதை அறிந்து அந்த எண்ணை நான்கு எண் கொண்டு பெருக்கி., அதிலிருந்து, இரண்டை கழித்து மீதிவரும் எண் தான் அன்றைய தின பகல்  குளிகோதயம் நேரம் ;

உதாகரணத்திற்கு ;
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை கிழமை, இன்றைய ஞாயிற்றுகிழமை முதல் வருகின்ற சனிக்கிழமை வரை எத்தனை நாட்கள் உள்ளது என்று எண்ண வேண்டும்.
ஞாயிறு 01
திங்கள் 02.
செவ்வாய் 03.
புதன் 04. 
வியாழன் 05.
வெள்ளி 06.
சனி 07.

7× 4 ; 28.

இந்த 28 லிருந்து 02 ஐ கழிக்கவேண்டும்,

28
-02
- - 
26 வரும்,

ஆகவே ஞாயிற்றுக்கிழமை பகலில் குளிகோதயம் நேரம் 26 நாழிகை 

இரவுநேரத்தில் குளிகோதயம் காணவேண்டுமென்றால்.
அன்றைய கிழமையிலிருந்து, செவ்வாய்கிழமை வரை எண்ணி  அந்த எண்ணை நான்கால் பெருக்கி, அதிலிருந்து இரண்டை கழித்து மீதிவரும் எண் இரவுநேரத்தில் குளிகோதயம் நாழிகை என்றும் எடுத்துகொள்ளவேண்டும். 

குளிககிரகம் பாவகிரகம் ஆகும்.
குளிகன் நிற்கின்ற இராசிக்ஷேத்ரம் பாவக காரகத்துவத்தை நாசம் செய்துவிடும்.
சுபகிரகங்களோடு சேர்ந்து சுபகிரக தன்மையை கெடுக்கும், பாபகிரகங்களோடு சேர்ந்து பாபத்தின் வீர்யத்தை மேலும் கூட்டும்.

இந்த தோஷ தன்மையை குளிகபவனாதிபத்யதோஷம்,,
என்று சொல்வார்கள்.
குருவின் பார்வை குளிகதோஷம் இல்லாமல் செய்யும்.

குளிகனுக்கு பார்வை இல்லையென்று சொல்வார்கள், ஆனால் ஒரு சில ஜோதிஷ கிரந்தங்களில்,
குளிகனுக்கு மூன்று கண்களை கொண்டு மூன்று விதமான பார்வைகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது நேர் எதிர் பார்வை ஸமஸப்தம பார்வை என்கிற ஏழாம்பார்வை, தான் இருக்கும் க்ஷேத்ரத்திலிருந்து ஏழாம் வீட்டை பார்க்கும்.
தனது வலது கண் கொண்டு இராசிக்கு பன்னிரண்டாம் வீட்டையும், இடதுகண்கொண்டு தான் இருக்கின்ற க்ஷேத்ரத்திலிருந்து, இரண்டாம் வீட்டையும் பார்க்கும் என்றும் சொல்லப்படுகின்றது.. 

குளிககிரகம் பலாபலன்கள்.
........................
01. ஒன்றாம்பாவகக்ஷேத்ரத்தில் நின்றிருந்தால்,

குளிகன் தனித்து யாரோடுகூடி சேராமல் இருந்தால் ஜாதகர்கள் ஒரு உன்னதமான நிலைக்கு சேர்ந்து விடுவார்கள்.
வாகனயோகம் உண்டு, அதேசமயம் இந்த ஒன்றாம்பாவகக்ஷேத்ரத்தில் பாபகிரகங்களோடு சேர்ந்திருந்தால், ஜாதகர் நித்யரோகியாக இருப்பார்கள்.
.........................
02. இரண்டாம்பாவகக்ஷேத்ரத்தில் நின்றாருந்தால்.

கலகப்பிரியன். தாரீத்யவான், பாபகிரகம் சேர்ந்திருந்தால், ஜாதகர்கள் ஜெனித்த குடும்பம் நாஸம் அடையும். 
..............................
03. மூன்றாம்பாவகக்ஷேத்ரம்.

இளையசகோதரர்களால் தோஷங்கள் உண்டாகும். அகம்பாவம் உள்ளவர்கள்.
...............................
04. நான்காம்பாவகக்ஷேத்ரம்.

மாதாவிற்கும், தாம் வாழ்கின்ற வீட்டிற்கும் தோஷம் உண்டு பண்ணும். உறவினர்களால் உபேஷிக்க படுவார்கள்.
பாபகிரகம் சேர்க்கை உண்டானால் நிச்சயமாக வாகன விபத்து உண்டு.
.....................
05. ஐந்தாம்பாவகக்ஷேத்ரம்.

மனோவியாதி உண்டாகும், புத்திரர்களால் நாசம் சம்பவிக்கும். புதனோடுகூடி சேர்ந்திருந்தால் உன்மாதம் என்கிற பைத்தியரோகம் வரும்.
...................
07. ஆறாம்பாவகக்ஷேத்ரம்.

சொந்த உறவு ஜனங்களை வெறுத்து வாழ்வார்கள்.
சத்ருக்களை அழிப்பார்.
ஜாலவித்தைகளை செய்து வாழ தெரிந்திருப்பார்கள்.
......................
07. ஏழாம்பாவகக்ஷேத்ரம்.

குடும்பத்தில் ஜாதகருக்கு கெட்ட பெயர் உண்டாகும். ஜீவித பங்காளியோடு திருப்தியான ஜீவிதம் இருக்காது.
பாபகிரகம் சேர்க்கையிருந்தால் விஷம் சாப்பிடவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
................................
08. எட்டாம்பாவகக்ஷேத்ரம்.

அல்பாயுசு, அல்லது நித்யரோகி.
தற்கொலை முயற்சி மேற்கொள்வார்கள்.
........................
09. ஒன்பதாம்பாவகக்ஷேத்ரம்.

தெய்வாதீனம் இல்லாதனாகவும், ஒரு பாக்கியதோஷியாகவும். சந்தானங்களால் அனுகூலங்களை பெறாதவர்களாகவும், இருப்பார்கள்.
.............................
10. பத்தாம்பாவகக்ஷேத்ரம்.

ஸாஸ்த்ர வித்யாப்யாஸம் உள்ளவர்கள்.
விதேஸ சஞ்சாரம் உண்டு. தொழில், உத்யோக அலைச்சல்கள் இருக்கும்.
......................
11.பதினொன்றாம்பாவகக்ஷேத்ரம்

ஐஸ்வர்யம் கூடிய ஜாதகர்கள். யோக நாயகன் / நாயகிகள்.
சகல விஜயங்கள் கிட்டக்கூடியவர்கள்.
................
12. பன்னிரண்டாம்பாவகக்ஷேத்ரம்.

மரணத்தை பற்றியும் ப்ரேதங்கள் பற்றியும் சதா பயந்து கொண்டேயிருப்பார்கள்.
..................

இலக்னக்ஷேத்ரஸேனனும், அஷ்டமக்ஷேத்ரஸேனனும் , கூடியிருக்க குளிககிரகம் சேர்க்கை ஜாதகருக்கு அகாலமரணம் உண்டாகும்.

சூரியனோடு சேர்ந்திருந்தால் பிதாவை  நாஸப்படுத்துவார்கள்.

ஒன்பதாம்பாவகக்ஷேத்ரத்தில் சூரியனோடுகூடி, குளிககிரகம் இருந்தால் பிதாவிற்கு சீக்கிரம் மரணம் உண்டாகும்.

சந்திரனோடுகூடி குளிககிரகம் இருந்தால் மாதாவிற்கு தோஷத்தை கொடுக்கும்.

குஜனோடு கூடினால் சகோதர்களுக்கு பகை.

புதனோடுகூடினால், உன்மாதம் என்கிற மனோவியாதி உண்டாகும்.

வியாழத்தோடு கூடினால் துர்புத்திகள் தோன்றி பின்பு மறைந்துவிடும்.
.
சுக்ரனோடுகூடியிருந்தால், நீச்ச ஸ்த்ரீகளோடு லைங்கீக சுகம், ஸ்த்ரீமார்கள் நீச்ச புருஷர்களோடு லைங்கீக சுகம் காண்பார்கள்.

சனியோடு சேர்ந்திருந்தால் சோம்பேறி.

இராகுவோடு சேர்ந்திருந்தால் விஷம் சாப்பிடுவார்கள், அல்லது விஷம் கலந்த தொழில்களை செய்வார்கள்.

சிகண்டியோடு கூடியிருந்தால் அக்னி கண்டம், அக்னி சம்பந்தப்பட்ட தொழில்கள் அமையும்.


No comments:

Post a Comment