Wednesday, 21 October 2020

சிறுநீரகம்_சிறக்க_வாழைத்தண்டு_சூப்

#சிறுநீரகம்_சிறக்க_வாழைத்தண்டு_சூப் 🌱 
 வாரம் இருமுறை குடித்தால் நோயற்ற சிறுநீரகத்தை பெறலாம் ...🌺🌸 

#தேவையானவை:  

வாழைத்தண்டு – 200 கிராம், 
சின்ன வெங்காயம் – 1, பூண்டு பல் – 2, 
தக்காளி – 1, உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.

செய்முறை :சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டை தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெங்காயம், பூண்டு முதலானவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கி, வாழைத்தண்டுடன் சேர்க்க வேண்டும். அனைத்தும் நன்றாக வெந்ததும், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து எல்லாவற்றையும் மசித்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும். வாழைத் தண்டை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், மசித்து வடிகட்டியும் அருந்தலாம்.

#பலன்கள் :சிறுநீரகக் கற்களை நீக்கும். குடல்புண்களுக்குச் சிறந்த மருந்து. உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் அருந்திவர, விரைவிலேயே நல்ல பலன் தெரியும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை மற்றும் வெள்ளைப்படுதலை சரி செய்யும். நீர் சுருக்கம், நீர் கடுப்புக்கு நல்ல தீர்வாக இருக்கும்.ஷ🌱🍃

No comments:

Post a Comment