#சாஸ்திர_கதம்பம்..
1.செவ்வாய் கிழமை எவரிடமும் கடன் வாங்குவதும், பத்திரத்தில் கையாழுத்திடவும் கூடாது.
-காலப் பிரகாசிகா
2.முதல் திருமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் கூடாது. மறுமணம் செய்வதற்கு காத்த்திகை மாதம் சிறந்தது. -விதான மாலை
3.சந்திரன் ரோகினியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில், அந்த நட்சத்திர நாழிகையில் பாதியை நீக்கி, மீதியிருப்பதில் முதல் பாதியில் எந்த காரியம் செய்தாலும், தடை,தாமதம் இல்லாமல் வெற்றி கிடைக்கும். -மணிக்கண்ட கேரளம்
4.கனவில் சுடுகாட்டைக் கண்டால் விரைவில் திருமணம் உண்டாகும். - கனவு பலன்கள்
5.வீட்டின் இடது புறத்தில் இருக்கும் மரங்களை விட, வலதுபுறத்தில் இருக்கும் மரங்கள் உயர்வாக இருக்க வேண்டும். - வாஸ்து சாஸ்திரம்.
6.பெண்கள் ஓம் என்பதை கூறக் கூடாது,ஹ்ரீம் என்று கூற வேண்டும். - -பூஜா கல்ப பஞ்சகம்
7.இரவில் பால் சாதம் ஆயுள் விருத்தி, இரவில் தயிர் சாதம் ஆயுள் குறையும். -சிவமகா புராண சாஸ்திரம்
8.அரளி பூக்களில் மஞ்சள் நிறம் அல்லது பொன் நிறப்பூக்கள் கொண்டு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய முதிர் கன்னி திருமணமும், கடன்களும் தீரும்
-மஹாபாரதம்
No comments:
Post a Comment