Sunday, 11 October 2020

முடக்கத்தான் கீரை சூப் :

For knee and joint pain

முடக்கத்தான் கீரை  சூப் :

தேவையான பொருட்கள் : 
முடக்கத்தான் கீரை        -   2  கைப்பிடி
சீரகம் , மிளகு , கசகசா  (தலா) அரை ஸ்பூன்
பூண்டு                  - 6 பல்
இஞ்சி                    -  ஒரு துண்டு
தேங்காய்த் துருவல்.  -  50 கிராம்
சோம்பு.                         -   அரை ஸ்பூன்
தனியா பொடி.            -  2 ஸ்பூன்
உப்பு.                             -  தேவையான அளவு
சின்ன வெங்காயம்.  -   ஒரு கைப்பிடி
பசு நெய்.                      -   5  ஸ்பூன்

செய்முறை :
முதலில் முடக்கத்தான் கீரையை சுத்தப் படுத்தி இலையை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சோம்பு , தேங்காய்த் துருவல் மற்றும் கசகசா ஆகியவற்றை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.நறுக்கிய வெங்காயத்தை அரிசி களைந்த நீரில்  போட்டு அதில் சோம்பு , தேங்காய்த் துருவல் , கசகசா ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் உப்பு , கொத்தமல்லி மற்றும் முடக்கத்தான் இலையைச் சேர்த்து நன்கு வேகவைத்து சூப்பாக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு அதில் இஞ்சி , பூண்டு , சீரகம் , மிளகு  ஆகியவற்றைச் சேர்த்து  வதக்கி அதில் சிறிது நெய்யைச் சேர்த்து சூப்பில் கொட்டி கிளறி பருகவும்.

பயன்கள் :
இந்த கீரைச் சூப்பை வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டு வரவும். இதனால் வயிறு சுத்தமாகி வாதம் சார்ந்த குறைபாடு நீங்கும். மேலும் இந்தக் கீரை சூப்பை குடித்து வந்தால் மலச் சிக்கல் , படை , சொரி , சிரங்கு ,கரப்பான்  போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கும்.

No comments:

Post a Comment