Saturday 24 October 2020

நவராத்திரியும் நவகிரகங்களும்

நவராத்திரியும் நவகிரகங்களும்

புரட்டாசி அமாவாசைக்கு பின் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது தினங்களும் சாரத நவராத்திரி ஆகும். சக்தி வழிபாட்டுக்கு உரிய காலங்களாகும். 

இந்த நவராத்திரி காலத்தில் அன்னையை மூன்று வடிவங்களில் வழிபடுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அன்னை சும்பன் விசும்பின் எனும் அசுரர்களை அழிக்க மும்மூர்த்திகளின் மகா சக்தி ஒன்பது தினங்கள் விரதம் அனுஷ்டித்தார் என்கிறது தேவி மகாத்மியம். அன்னை கடைபிடித்ததை போல நாமும் அந்த விரதத்தை கடைபிடிப்பதால் இச்சா க்ரியா ஞான சக்தியை பெறுகின்றோம்.

மும்மூர்த்திகளின் சக்திகளான துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி சேர்ந்து மகா சக்தியாகி, அந்த மகா சக்தியில் இருந்து ஒன்பது தினங்கள் ஒன்பது சக்திகள் உருவாகியது. 

1. மகேஸ்வரி (சூரியன்)
திசை: வடகிழக்கு
கோலம்: பச்சரிசி மாவால், புள்ளிக் கோலம் போட வேண்டும்.
மலர்கள்: தாமரை, மல்லிகை, வில்வம்
பழம்: வாழை
இராகம்: தோடி
நெய் வேத்தியம் : காலையில் வெண்பொங்கல், மாலையில் காராமணி சுண்டல்.
பலன்: எடுத்த காரியங்களில் உண்டாகும் தடைகளை தகர்ப்பவர், பாதுகாப்பு அளிப்பவர்.
"ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி -தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்"

2. கௌமாரி (செவ்வாய்)
திசை: தென்கிழக்கு
கோலம்: மாக்கோலம்
மலர்கள்: முல்லை, துளசி
பழம்: மா
இராகம்: கல்யாணி
நெய்வேத்தியம்:
காலையில் புளியோதரை மாலையில் மிளகு வடை, வெண்ணை எடுக்காத தயிர் சாதம், சுண்டல், சுக்கு சேர்த்த பாணகம் போன்றவற்றை அளிக்கலாம். 
பலன்: எதிரிகளை அழித்து வெற்றியை தருபவள். பில்லி சூனியங்களில் இருந்து காப்பவள்.எழுப்பு சம்பந்தமான பிராச்சனைகள்ய தீரும்.
"ஓம் சிகித்வஜாயய வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி -தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்"

3. வாராஹி (கேது)
திசை: தென் திசை
கோலம்: மலர்க்கோலம்
மலர்கள்: சம்பங்கி, மரு
பழங்கள்: பலா
இராகம்: காம்போஜி
நெய்வேத்தியம்:
காலையில் வெண் பொங்கல் மாலையில் தேங்காய் சாதம்
பலன்: நல்ல துணையை அருள்பவர். செல்வளம் கிடைக்கும்.
"ஓம் ஷாமலயா வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி - தந்நோ வராஹி ப்ரசோதயாத் "

4. மகாலக்ஷ்மி (சுக்கிரன்)
திசை: கிழக்கு
கோலம்: வண்ணக் கோலம், ரங்கோலி
மலர்கள்:  ஜாதி மல்லிகை, கதிர்ப்பச்சை
பழம்:  கொய்யா
இராகம்: பைரவி
நெய்வேத்தியம்: காலையில் சாம்பார் சாதமும் பொறியலும் மாலை எலுமிச்சை சாதமும் இவளுக்கு ஏற்றவை.
பலன்: உடல் ஆரோக்கியம் அருள்பவர்.
 "ஓம் மஹாலக்ஷ்மியை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்"

5. வைஷ்ணவி (புதன்)
திசை: மேற்கு
கோலம்: பச்சரிசி மாக்கோலம்
மலர்கள்: பவளமல்லி, விபூதி பச்சை
பழம்: மாதுளை
இராகம்: பந்துவராளி
நெய்வேத்தியம்: காலையில் தயிர்சாதமும் மாலையில் புளியோதரையும் படைக்கலாம்.
பலன்: மனகவலை நீக்கி பிரச்சினைக்கு தீர்வு அருள்பவர்.
"ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி -தந்நோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்"

6. இந்திராணி (சந்திரன்)
திசை: வடமேற்கு
கோலம்: கடலை மா கோலம்
மலர்: செம்பருத்தி, சந்தன இலை
பழம்: நாரத்தை
இராகம்: நீலாம்பரி
தெய்வேந்திரன்: காலையில் தேங்காய் சாதம் மாலையில் புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். 
பலன்: பதவி உயர்வு, மனதைரியம், நல்ல விளைச்சல்  அருள்பவர்.
"ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி- தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்"

7. பிராமி (குரு)
திசை: கிழக்கு 
கோலம்: நறுமண மலரினால் கோலம்
மலர்: தாழம்பூ, மல்லிகை, முல்லை, தும்பை இலை.
பழம்: பேரீச்சம்பழம்
இராகம்: பிலஹரி
நெய்வேத்தியம்: காலையில் கல்கண்டு சாதம் மாலையில் பாயாசம்
பலன்: சுகம் கிடைக்கும், செல்வவளம் பெருகும்.
"ஓம் ஹம்ச யுக்தாய வித்மஹே மஹா சக்தியைச தீமஹி - தந்நோ ப்ராஹ்மீ ப்ரஹசோதயாத்"

8. துர்க்கை (சனி)
திசை: தென்மேற்கு
கோலம்: பத்ம கோலம்
மலர்: ரோஜா, பன்னீர் இலை
பழம்: திராட்சை
இராகம்: புன்னகவராளி
நெய்வேத்தியம்: காலையில் பாயாசம் முறுக்கு மாலையில் சர்க்கரை பொங்கல்
பலன்: அச்சம் நீங்கும், 
"ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கிஹ் ப்ரசோதயாத்"

9. சாமுண்டி (ராகு) - 
திசை: வடக்கு திசை
கோலம்: வாசனை பொடிகளால் ஆன ஆயுத கோலம்
மலர்: தாமரை மரிக்கொழுந்து
பழம்: நாவல்
இராகம்: வசந்தா
நெய்வேத்தியம்: காலையில் திரட்டும் பால் மாலையில் அக்காரடிக்கல்
பலன்: குழந்தை பேறும் கலை ஞானமும் அருள்பவர்.
"ஓம் சண்டீஸ்வரீ ச வித்மஹே மஹாதேவீச தீமஹி- தந்ஹா சண்டீ ப்ரசோதயாத்"

இந்த முறையில் வழிபட்டால் தேவியின் அருள்களை நவகிரகத்தினால் விளையும் தோஷங்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

பாட உகந்த ஸ்தோத்திரங்கள்:
அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, லலிதா சஹஸ்ரநாமம் 

கலசம் வைக்க உகந்த நேரம்:
புரட்டாசி இரண்டாவது அமாவாசை முடிந்த பின்னர் அக்டோபர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 1.05  முதல் 1.23க்குள் கலசம் வைக்கலாம். அல்லது
நவராத்திரி ஆரம்பம் அக்டோபர் 17ம் திகதி காலை 7.31 - 9.00 மணிக்குள் கொலு வைக்க மிக நல்ல நேரம்.

அக்., 25 (ஞா) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 7.31 - 9.00 மணி)

கலசம் கலைக்க உகந்த நேரம்:
அக்., 26 (தி) விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 - 7.30 மணி)

No comments:

Post a Comment