Sunday 11 October 2020

கடுகு....


கடுகு.....

மூலிகைகளும் அதன் மர்மங்களும்.....

திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம் (Magnoliophyta)
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Brassicales
குடும்பம்: Brassicaceae
பேரினம்: Brassica
இனம்: B. juncea

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு.
திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்பிளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.
நியாசின் (விட்டமின் B-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கல்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது. கல்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோளிணி எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

கடுகுக்கீரை Mustard greens

கடுகுக்கீரை செடி வகையை சேர்ந்தது. கடுகு செடி சுமார் நான்கு அடி உயரம் வரை வளரக் கூடியது. இக்கீரை பசுமை நிறத்துடனும் மென்மையாகவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
கல்சியம், பொஸ்பரஸ் நார்ச்சத்துகள் நிறைந்துள்ள இக்கீரை பசியை தூண்டக் கூடியது.
வயிற்றுப் பொருமல், மந்தம் முதலியவற்றை போக்கும் ஆற்றல் கொண்டது. இக்கீரை சீரணசக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
கடுகுக் கீரையில் பெரும்பாலான பைட்டோ phyto வேதிப் பொருட்கள் இருக்கின்றன. சளி, மூட்டுவலி, மனஅழுத்தம் போன்றவற்றுக்கெல்லாம் இந்தக் கீரை நல்ல மருந்து. குளிர் காலத்தில் கடுகுக் கீரை அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.
கடுகு எண்ணெய் மருத்துவ குணங்கள்
விஷத்தை கட்டுப்படுத்தும்
தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும்.இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

ஜீரணம் ஏற்படும்
கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

மூட்டுவலி நீங்கும்
அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

ஆஸ்துமா, தலைவலி நீங்கும்
தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
விக்கல் நீங்க
வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்
ரத்த அழுத்தம் கட்டுப்படும்
கடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி – 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

மூட்டு வலியையும் விரட்டும் கடுகு!
கடுகு இதில் உயர்தர சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. விட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட
்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது.விஷத்தை முறிக்கக்கூடிய தன்மை கடுகுக்கு இருக்கிறது. வீட்ல பெரியவங்க சொல்வாங்க பிரியாணி செய்தாலும் அதிலும் கொஞ்சம் கடுகை போடுங்க என்று. பார்க்க சிறிதாக இருந்தாலும் கடுகின் மருத்துவ குணங்கள் பெரிது. கடுகு எண்ணையில் ஆன்டி பாக்டிரியல் அதிகம் இருக்கிறது.

பெண்களின் முகத்திற்கு
1. கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும். லேசாக சூடுபடுத்திய கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடிகள் மறைந்துவிடும்.
2. கடுகு எண்ணெயுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.
தொடர் இருமல் இருந்தால் கடுகை பொடியாக்கி அரை ஸ்பூன் பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமடையும்.
கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.
தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்மா, கபம் குணமடையும்.
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.
கடுகில் உள்ள B-காம்ளக்ஸ் விட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், விட்டமின் B6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
மூட்டுவலி நீங்கும்
1. அடிபட்டு இரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட இரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விறைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.
2. கடுகுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்து வலியிருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு வேளை பற்று போட்டு வந்தால், வலி பறந்தே போய்விடும்.
3. கை, கால் மூட்டு வலி, வாயு பிடிப்பு, இரத்தக் கட்டு என்று பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு கடுகுதான்.
4. கடுகு எண்ணை தற்போது மளிகைக் கடைகளிலும் கிடைகிறது, அந்த எண்ணையை சிறிது கரண்டியில் எடுத்து லேசாக சூடுபடுத்தி வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், வலி விரைவில் குணமாகும்.


No comments:

Post a Comment