Thursday, 29 October 2020

எம தீபம்

தீபாவளிக்கு முதல் நாள் எம தீபம் என ஒருநாள் வருகிறது இதை அநேகம் பேர் அறிந்திருக்கவில்லை.சூட்சுமமான சக்தி வாய்ந்த ஆயுள் பலத்தை அதிகரித்து கொள்ள கூடிய இந்த பரிகாரத்தை குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் வழி வழியாக செய்து வந்திருக்கின்றனர்.

சகோதரனை சந்தோசப்படுத்தி தானும் தன் கணவனும் நீண்ட ஆயுளுடன் வாழ செய்து கொள்ளும் பரிகாரம் 

தீபாவளிக்கு முதல் நாளில் சகோதரனுக்கும் அவரது மனைவிக்கும் விருந்து அளித்து தன் கைப்பட பரிமாறி புது துணி எடுத்துகொடுத்து ஆசிர்வாதம் பெற வேண்டும் தீர்க்க சுமங்கலியாக நீண்ட ஆயுளுடன் வாழ்க என சகோதரன் மஞ்சள் கலந்த பச்சரிசி தூவி வாழ்த்த வேண்டும்.அன்று மாலை சகோதரி தன் வீட்டுக்கு சென்று தெற்கு நோக்கி ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.இதை வாசலில் வைக்கவும் இதனால் எமன் தன் பாசகயிறை இந்த சகோதரி குடும்பத்தின் மீது வீச தயங்குவான்

No comments:

Post a Comment