Monday, 26 October 2020

கண் பார்வை கோளாறை தடுக்க , நீக்க உபாயம்:

கண் பார்வை கோளாறை தடுக்க , நீக்க உபாயம்:

முதலில் எதனால் இந்த குறைப்பாடு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

* நாம் நம் பாரம்பரியத்தை மறந்ததால் எண்ணற்ற விளைவுகளை சந்திக்கின்றோம். அதிக நேரம் டி.வி.பார்த்தல், தொலைபேசி பார்த்தல் போன்ற செய்கை யினால் நம் பார்வைக்கு குறைப்பாடு ஏற்படுகிறது.

* கல்லீரலுக்கும், நம் கண்ணிற்கும் நிறைய தொடர்பு உண்டு. கண் குறைபாடு ஏற்பட்டால் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நம் கல்லீரல் சக்தியானது குறைந்து காணப்படுகிறது என்று அர்த்தம்.

* கல்லீரலுக்கு நாம் தேவையான சக்தியை கொடுத்தால் நிச்சயம் நம் பார்வை குறைப்பாடை போக்கலாம்.

* விட்டமின் குறைப்பாட்டாலும் நம் கண்பார்வை மங்க துவங்கும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது:

*முதலில் வாரத்திற்கு இருமுறை எண்ணெய் குளியலை தொடர வேண்டும். எண்ணெய் குளியலானது முதலில் உச்சந்தலையில் இருந்து அல்லாமல் நமது கால் பாத நக விரல்களில் இருந்து ஆரம்பிப்பது தான் சரியான முறை.

* பிறகு தேவையான பழங்கள் , கீரை, விட்டமின் A சத்து நிறைந்த காய்கறியான கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சோம்பு, பாதாம், கற்கண்டு இவற்றை சம பாகமாக எடுத்து மிக்ஸியில் பவுடர் ஆக்கி வைத்து கொள்ளுங்கள். இவற்றை பாலிலோ அல்லது தண்ணீரிலோ கலந்து குடித்தால் நிச்சயம் நம் கண்பார்வை கூடுவதை கண்கூடாக பார்க்கலாம்.

* கண் குடுவை  என்று கண்களை கழுவும் பழைய முறை ஒன்று உள்ளது. தினமும் இந்த கண் குடுவையை வைத்து  பத்து நிமிடமாவது நம் கண்களை அதில் திறந்து வைக்க வேண்டும். நம் மூக்கில்  இருந்து தண்ணீர் வடியும் நிலை உருவாகும் வரையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இது நம் உடலின் கல்லீரலை குளிர்ச்சி படுத்தி நம் கண்களின் ஈரபதத்தை தக்க வைப்பதால்  நிச்சயம் நம் கண்பார்வை தெளிவு பெறுவதை கண்கூடாக காணலாம்.

* கண் பயிற்சியை செய்வதன் மூலம் கண் பார்வையை மீ ட்கலாம். நண்பர்களே நான் சொல்லி இருக்கும் இந்த அருமையான வைத்தியத்தை தாங்களும் கடைபிடித்து 100% Result ஐ பெறுங்கள

No comments:

Post a Comment