Tuesday, 13 October 2020

தெருக்குத்து



பொதுவாக தெருக்குத்து என்ற தெரு தாக்கங்கள் நல்லதல்ல ஆனாலும் அவற்றிலும் சில நன்மை தருவதாயும் சில தீமை தருவதாயும் சில வகை தெருத்தாக்கங்கள் பாதகமற்றதாயும் இருக்கும் அவைகளைப்பற்றி..........

தெருவோ அல்லது சாலையோ வீட்டிற்கு எதிராக இருத்தலே தெருகுத்து......

இதில் வட கிழக்குப் பகுதியின் கிழக்குச்சாலையைத்தொட்டு உள்ள
தெருக்குத்தும்.
வடக்குச்சாலையையத்தொட்டு வடகிழக்காக உள்ள தெருக்குத்தும்
வடகிழக்கு பகுதியின் விரிவாக்கமாவதால் இது நன்மையே தரும்........

மாறாக தென்கிழக்கு ப்பகுதியில் உள்ள தெருக்குத்து அக்னிமூலையின் விரிவாக்கமாவதால் இது தவிர்க்கப்படவேண்டும்...,..

தென்மேற்கு பகுதியின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தெருகுத்துக்கள் கன்னிமூலையின் விரிவாக்கமாவதால் இதுவும்
தவிர்க்கப்படவேண்டியதே.....

இதைப்போலவே வடமேற்குப்பகுதியின் தெருக்குத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டியதே.......

வடகிழக்கு ப்பகுதியில் ஒரு தெரு இருப்பின் நல்லது ஆனால் வடகிழக்கில் வடக்கிலும் கிழக்கிலும் இரு தெருக்குத்துக்கள் இருப்பது மத்திம பலனே...........

தென்கிழக்கின் தெற்குப் பகுதியில் தெருக்குத்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு......
அதேப்போல வடமேற்குப் பகுதியில் மேற்கில் தெருக்குத்தும் தொழிலில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.......

இப்படி உள்ள தெருக்குத்துக்கள் அமைந்துவிட்டால் அங்கு ஒரு வினை தீர்க்கும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது என்பது மரபாக உள்ளது......
ஆயினும் அப்படி வைக்கப்படும் சிலைகளுக்கும் நம்மாள் முடிந்தளவு தினமும் பூஜைகள் செய்து வருவது தீய விளைவுகளிலிருந்து நம்மை காத்து நிற்கும்..........


No comments:

Post a Comment