Friday, 23 October 2020

பேச்சு_திறமையும்_கிரகம்_அமர்ந்த_பலனும்

#பேச்சு_திறமையும்_கிரகம்_அமர்ந்த_பலனும். 

சமூகத்தில் யார் பேச்சிற்கு மரியாதை இருக்கும். யார் பேச்சை மதிக்கமாட்டார்கள் என்பதை ஜாதக ரீதியாக பார்ப்போமானால்,

லக்ன ராசிக்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானமும் அதன் அதிபதி வாக்கு ஸ்தானாதிபதியுமாவார். புதன் வாக்கிற்கு காரகனுமாவார். 

இந்த இரண்டாம் இடத்தில் குரு, சுக்கிரன், பௌர்ணமியை நெருங்கிய சந்திரன் முதலான சுப கிரகங்கள் பலம் பெற்று அமர்ந்தாலோ, பார்வை செய்தாலோ, இரண்டாம் அதிபதியுடன் சேர்ந்தோ
சாரத்தில் இருந்தாலோ, இரண்டாம் அதிபதி இரண்டிலே ஆட்சி ஆனாலும், 1,4,5,7,9,10 முதலான கேந்திர கோணத்தில் அமர்ந்தாலும் அவ்விடத்ததிபதிகளுடன் சேர்ந்தோ பார்த்தோ சார தொடர்பு பெற்றாலோ  வாக்கு சாதூர்யம் மிக்கவர். இவர்களது பேச்சுக்கு மரியாதை இருக்கும்.

வாக்குக்கு காரகனான புதனுடன் சுப கிரகங்கள் சேர்ந்தோ, பார்வை செய்தோ, லக்னாதிபதியுடன் பலம் பெற்ற புதன் இருந்தாலும், புதன் ஆட்சி உச்சமானாலும், கேந்திர கோணத்தில் புதன் இருந்தாலும் பலம் பெற்ற புதன் சாரத்தில் லக்னாதிபதி இரண்டாம் அதிபதிகள் இருந்தாலும் வாக்கு சாதுர்யம் இருக்கும்.  

இரண்டில் பாபகிரகங்கள் இருந்தாலோ பார்த்தாலோ சார தொடர்பு கொண்டாலோ ஜாதகர் பேச்சிற்கு மரியாதை இருக்காது. இரண்டில் ஆட்சி உச்சமானால் வன்சொற்களால் தன்வசப்படுத்துவார். சுபர் தொடர்பு பெற்றால் பேச்சை கட்டுபடுத்துவார்.

சூரியன் பலம் பெற்று, புதனுடன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும் 2ம் பதியுடன் சேர்ந்தாலோ அதிகாரமான பேச்சினால் நிர்வகிப்பார். 

சந்திரன் பலம் பெற்று, புதனுடன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும் 2ம் பதியுடன் சேர்ந்தாலோ சாந்தமான பேச்சினால் மனதை கவர்பவர்கள். ஆறுதல் தரும் பேச்சு. மனகவலை இருப்பவர்கள் இந்த அமைப்புடையவருடன் சற்று நேரம் பேசினாலே ஆறுதல் கிடைக்கும்.

செவ்வாயுடன் புதன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும் 2ம் பதியுடன் சேர்ந்தாலோ அவசரமான பேச்சுக்கள், கோபமான பேச்சுக்கள், இவர்களது பேச்சிற்கு பெரும் மரியாதை இருக்காது. தற்காலிக மரியாதை மட்டுமே.

புதன் பலம் பெற்று, இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும் 2ம் பதியுடன் சேர்ந்தாலோ புத்திசாதுர்யமான பேச்சாற்றல் இருக்கும். நகை சுவையாக பேசுவார். 

பலம் பெற்ற குரு,  புதனுடன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும்  2ம் பதியுடன் சேர்ந்தாலோ தெய்வீகமான பேச்சினாலும் அறிவுறையான பேச்சினாலும் மற்றவர்களை தன்வசப்படுத்துவர். 

பலம் பெற்ற சுக்கிரன்,  புதனுடன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும்  2ம் பதியுடன் சேர்ந்தாலோ கவர்ந்து இழுக்கும் பேச்சும் இனிமையான பேச்சும் இருக்கும். ஆடம்பர பேச்சும் உண்டு

சனி,  புதனுடன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும்  2ம் பதியுடன் சேர்ந்தாலோ அவதூறான பேச்சுக்கள், பேச்சில் தடுமாற்றம், வள வள என பேசுவது, பேச்சிற்கு மரியாதை கிடையாது. சொற் பொழிவு செய்யும் திறன் இருக்கும்.

ராகு புதனுடன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும்  2ம் பதியுடன் சேர்ந்தாலோ போதைக்கு அடிமையாக வாய்ப்பு உள்ளது. (லக்னாதிபதி இரண்டாம் அதிபதி நிலையை கொண்டு முடிவெடுக்க வேண்டும்.) ஆணவ பேச்சுக்கள், ஆசை தூண்டும் பேச்சினை உடைவர். ஆரம்ப காலத்தில் பேச்சில் தடை இருக்கும். பல குரலில் பேசும் திறமையும் இருக்கும்.

கேது, புதனுடன் அல்லது இரண்டில் இருந்தாலோ பார்த்தாலோ சார நாதனாக இருப்பினும்  2ம் பதியுடன் சேர்ந்தாலோ ஆன்மீக பேச்சாற்றல் இருக்கும். ரொம்ப பேசமாட்டார்கள். 

கொடும் பாவிகளாக கருதப்படும் சனி செவ்வாய் இரண்டில் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ பேச்சினால் பல சண்டைகளை சந்திப்பார், குடும்பத்தில் பிரச்சினை, வாய் தர்க்கம் பண்ணக்கூடியவர்கள். வன்சொற்களாலும் கோபக்கனலாலும் அடாவடித்தனமாக மற்றவர்களை தன்வசப்படுத்த முற்படுவார்.

வாக்கு சாதுர்யம் பெற சரஸ்வதி வழிபாடு செய்யுங்கள். 

பேச்சு தடை இருப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment