Thursday 19 November 2020

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்*

*நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்*

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்..!  
நெஞ்செரிச்சலால் நீங்கள் மிகவும் அவதிப்படுகின்றீர்கள் என்றால் உங்களுக்கு பல வித ஆயுர்வேத கை வைத்தியங்கள் உள்ளது. வீட்டில் இருக்கும் ஒரு சில முக்கிய மூலிகைகளை வைத்தே நெஞ்செரிச்சலை நாம் குணப்படுத்தி விடலாம். எவ்வாறு என்பதை இனி அறிவோம்.  
  
ஏன் நெஞ்செரிச்சல்?

நாம் உட்கொள்ளும் உணவு தான் நெஞ்செரிச்சலை நமக்கு உண்டாக்குகிறது. 'முள்ளை முள்ளால் எடுப்பது' போல் 'உணவால் ஏற்பட்ட பாதிப்பை வேறொரு மருத்துவ தன்மை கொண்ட உணவை வைத்து சரி செய்து விடலாம். குறிப்பாக செரிமான கோளாறு, நெஞ்சு பகுதியில் வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இதனால் தென்படும்.

*ஏலக்காய்*

உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கண்ட டானிக்குகளை குடிக்க வேண்டியதில்லை. மாறாக நீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம்.

*துளசி*

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மூலிகைகளில் இந்த துளசி முதன்மையான இடத்தில் உள்ளது. நெஞ்செரிச்சலால அவதிப்படுவோருக்கு இது அருமையாக உதவும். 6 துளசி இலைகளை மென்றால் நெஞ்செரிச்சல் பறந்து போய் விடும். மேலும், இவை வயிற்றில் உண்டாக கூடிய வாயுக்களை தடுத்து வயிற்று பகுதியில் எரிச்சல் ஏற்படாதவாறு காத்து கொள்கிறது.

*புதினா டீ*

இந்த புதினா டீ பல வகையான மகிமைகளை கொண்டது. நீங்கள் நெஞ்செரிச்சலை சமாளிக்க முடியாமல் தடுமாறினால் உங்களின் வலி நிவாரணி இதுவே. அதற்கு சிறிது புதினா இலைகளை நறுக்கி கொள்ளவும். 1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் புதினாவை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கி கொள்ளவும். வடிகட்டிய பின்னர் இதனை குடித்தால் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்  
  
*இளநீர்*

நெஞ்செரிச்சல் உங்களை வாட்டி வதைக்கிறதா..? இனி இதனை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது. தினமும் 1 இளநீர் குடித்தால் மிக விரைவிலே நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம். மேலும், நெஞ்சு பகுதியில் ஏற்பட கூடிய அமில தன்மையையும் இது குறைத்து விடுகிறது.

*கிராம்பு*

நெஞ்செரிச்சலை உடனே குணப்படுத்த கிராம்பு ஒன்றே போதும். இவை எச்சினை அதிகம் உற்பத்தி செய்து செரிமான கோளாறை தடுக்கிறது. எனவே, நெஞ்செரிச்சல் தானாகவே குணமடைந்து விடும். இதற்கு ஒரு கிராம்பை சிறிது கடித்து, வாயில் வைத்து கொண்டாலே போதும்.

*வாழை பழம்*

மலச்சிக்கல், உடல் பருமன் போன்ற பிரச்சினைக்கு எப்படி இந்த வாழைப்பழம் உதவுகின்றதோ, அதே போன்று நெஞ்செரிச்சலுக்கும் இது பயன்படுகிறது. பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகம் நிறைந்துள்ளதால் இவை இதயத்தை பாதுகாக்கிறது. பழுத்த வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டாலே நெஞ்செரிச்சல் குணமாகி விடுமாம்.

*சீரக நீர்*

செரிமான பிரச்சினை தீர்ப்பதில் இந்த சீரகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. அத்துடன் உடலின் செயல்பாட்டையும் இது சீராக வைத்து கொள்ள பெரிதும் உதவும். 1 ஸ்பூன் சீரகத்தை கொதிக்க வாய்த்த நீரில் போட்டு குடித்து வந்தாலே போதும். நெஞ்செரிச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

*கற்றாழை சாறு*

நெஞ்செரிச்சலுக்கு ஒரு அருமையான தீர்வை இந்த கற்றாழை சாறு தருகிறது. காலையில் சாப்பிடுவதற்கு முன்னர் கற்றாழை சாற்றை சிறிதளவு குடித்தாலே போதும். மிக விரைவிலே நாம் இந்த நெஞ்செரிச்சலை சரி செய்து விட முடியும்.

*நெல்லிக்காய்*

வைட்டமின் சி நெல்லிக்காயில் அதிகம் உள்ளதால் இது போன்ற பிரச்சினையை எளிதில் தீர்க்க கூடும். நெஞ்செரிச்சல் இருக்கும் நேரத்தில் 1 நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். அல்லது நெல்லிக்காய் ஜோஸை அரை கப் குடிக்கலாம்.

*இஞ்சி*

மூலிகை தன்மை அதிகம் இஞ்சியில் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவை நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கும் விடை தருகிறது. சிறிது இஞ்சியை சூடு நீரில் நசுக்கி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகி விடும்.

மேற்சொன்ன முறைகளை வைத்தே உங்களின் நெஞ்செரிச்சலை எளிமையாக குணப்படுத்தி விடலாம்.

No comments:

Post a Comment