Tuesday, 3 November 2020

ஆசைக்கும் கர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம்



    ஆசைக்கும் கர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம் இது.......

        பொதுவாக கர்மத்திற்கான துவக்கமே ஆசைகள் தான் என்பது அனைவரும் அறிந்ததே.......

       அதேநேரத்தில் இந்த உலகில் இந்த ஒரு ஜீவராசியும் தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள கர்மத்தின் வாயிலாக இப்புவியில் ஜனனமாகிறது......

       அதேநேரத்தில் எந்த ஒரு ஆசையோ அல்லது விருப்பங்களோ இருக்கும் பட்சத்தில் அதனை அனுபவிப்தற்கு முன்போ அல்லது பின்போ அதற்கான கர்மத்தையோ அல்லது அதற்கான படிப்பினையை பெற்றே ஆகவேண்டும்.........

     உதாரணத்திற்கு ஒரு ஆண் தனது ஆசைகளை ஒர் பெண்ணின் வாயிலாக நிறைவேற்றிக் கொள்கிறான் ஆனால் அதற்கான படிப்பினை கர்மத்தை காலம் முழுவது ம் அதற்கான பலனை சந்தித்தே ஆகவேண்டும்......

    அதேபோல் தான் ஒரு பெண்ணாவன் தனக்கு ஒரு குழந்தை  வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் அந்த குழந்தையை பெற்றெடுப்பதற்குள் அதன் வலியை பொறுத்துக்கொண்டே ஆகவேண்டும் இது கர்மத்தின் படிப்பினை ஆகும்........

     அதாவது சந்திரன் என்னும் கர்ப்பிணி தாய் சனி என்னும் கருவை சுமந்து அதன் வலியை 10 மாதம் பொறுத்துக்கொண்டு அந்த குழந்தை பிறக்கும் வரை அந்த வலியை பொறுத்துகொண்டே ஆகவேண்டும்.இதற்கிடையே சந்திரனுக்கான கர்மபலன் கடுமையாக சனி தருவார்.......

    அதேபோல் தனது ஆசைகளுக்கான அடையாளம் உருவானதும் அந்த அடையாளத்திற்கான நோக்கம் மற்றும் அதற்கான கர்மபலனையும் பொறுப்பேற்றுக்கொண்டு அதற்கான படிப்பினையை காலம் முழுவதும் சந்தித்தே ஆகவேண்டும்......

     இன்னும் சொல்லப்போனால் சில நேர அற்ப ஆசைகளை அனுபவத்தவனுக்கு அதற்கான படிப்பினையை அனுபவித்த இருவரும் அதற்கான அடையாளத்தின் வாயிலாக காலம் முழுவதும் சந்தித்தே ஆகவேண்டும்......

     

No comments:

Post a Comment