Friday, 6 November 2020

ஐப்பசி

## Asvina ##### 

**** ஐப்பசி ******

தமிழுக்கு 7 ஆவது மாதம்,

, கால புருசனுக்கு 7 ஆம் வீடு துலாம் ராசி

சூரியன் நீசம் ஆகும் வீடு 7 ஆம் வீடடில் துலாம்

துலாம் அதிபர் சுக்ரன் ஆவார்

7 சப்தஸ்வரம் இசை காரகம் சுக்ரன்,,

7 ஆவது கிழமை நாதன் சனி உச்சம் ஆகும் வீடு துலாம் ராசி

 ஐப்பசி இல் 

1 நவராத்திரி, 

2 தீபாவளி,

3 சரஸ்வதி பூஜை, 

4 ஆயுத பூஜை,

5 ஐப்பசி பௌர்ணமி இல் சிவனுக்கு அன்ன அபிசேகம்,

6 கந்த சஷ்டி, 

7 சதய விழா

இது போன்ற 7 பண்டிகைகள் நடக்கும்

 ஐப்பசி மாதம் சூரியன் நீசம் ஆகி சூரிய ஒளி வெப்பம் குறைந்து,, அடைமழை,, பனி வெண்பா, என்று இருள் சூழ்ந்து இருக்கும் மாதம் ஆகும்,, தீய சக்திகள் வெளிவரும் காலம் அடங்காத ஆன்மாக்கள் வெளியில் வரும் காலமும் கூட,, அதாவது negative energy அதை நாம் தவிர்க்கவே மனதை திசை திருப்பி மேலே சொல்ல பட்ட பண்டிகைகள் நடத்தி வருகிறோம் 

 ஐப்பசி மாதத்தில் காவேரி நதியில் குளித்து வந்தால் எல்லா பாவங்களும் போகும் என்று ஐதீகம்,, இதை துலா ஸ்நானம் என்பர்,,
 துலாம் ராசி இல் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதம் துலாம் மாதம் எனவும் ஐப்பசி மாதம் என்றும் கூறுவர்,,காவேரி என்றால் பெண்,, துலாம் ராசி அதிபதி சுக்ரன் பெண் கிரகம் ,, காவேரி நதியின் நடுவில் சுக்ரன் ஆலயம்
 ஸ்ரீரங்கத்தில்  அரங்கநாதன் வீற்றிருக்கிறார் 
ஆங்கிலத்தில் Kaveri - 6 எழுத்து 6 என்ற எண் சுக்ரனை குறிக்கும்

ஐப்பசி அமாவாசை நம் முன்னோர்களுக்கு உணவு அளிக்கும் பண்டிகை,, ஐ என்றால் கருப்பு என்று சொல்லபடுகிறது,, கருப்பு என்றால் சனி சனி என்றால் முன்னோர்கள் கிழவன் கிழவி அதாவது நம் பித்ருக்கள்

சனி உச்சம் ஆகும் நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் ஆகும் சுவாதி ராகுவின் நட்சத்திரம் ஆகும் ராகு தகப்பன் வழி பாட்டன் முன்னோர்களை குறிக்கும்,, சுவாதி துலாம் ராசில் இருக்கிறது,,
 ராகு என்றால் புகை,, வெடி மருந்து காரகமும்  ராகுதான்,, வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுகிறோம்,,,மற்றும்
 ஐப்பசி அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆறுமுகன் முருகனுக்கு சஸ்டி விரதம் கொண்டாடப்படுகிறது,,,,

 ஐ என்றால் மரியாதை,

ஐயா,, என்போம்,, வேதம் பயின்றவர் ஐயர் என்போம்,, ஆங்கிலத்தில் I என்ற எழுத்தை சூரியன் ஆளுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது,, சூரியன் ராஜ கிரகம் அதிக மரியாதைக்கு உரிய கிரகம் ஆகும்

 வெளிநாடுகளில் கல்லறை தினம் என்று கொண்டாடுவது உண்டு,, ஆவிகள் தினம் என்றும் இப்படி ஐப்பசி மாதத்தில் கொண்டாடுவது உண்டு,, இந்த மாதத்தில் தான் பித்ருக்கள் பூலோகம் வருவார்கள் என்றும் அவர்களுக்கு விருந்து கொடுத்து வழி அனுப்பும் விதம் தீப ஒளி ஏற்றி வழி அனுப்புவது தான் தீபாவளி,,, என்றும் இதிகாசங்கள் கூறுகிறது

 அன்ன தோசம் நீக்கும் சிவனுக்கு அன்னாபிஷேக விழா உம் ஐப்பசி மாதம் தான், அன்னாபிஷேக உணவை உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்,, நம் முன்னோர்கலே பிள்ளையாய் பிறப்பார்கள் என்று ஐதீகம்,,,, 
ஐதீகம் இங்கும் ஐ எழுத்து முதன்மை பெறுகிறது,

 ஐராவதம்,, ஐயனார், ஐயப்பன், ஐந்து முகத்தான்,, இந்த பெயர்கள் என்றும் மனதில் நீங்காதவை,,

துலா ஸ்நானம் காவேரி ஆறு குளியல் ஸ்ரீரங்கம்,, இது சுக்ர பகவாநை குறிக்கும்

சரஸ்வதி பூஜை கொண்டை கடலை தானம்,,இது குரு பகவானை குறிக்கும்,

ஆயுத பூஜை ஆயுதம் காரகம் செவ்வாய் செவ்வாய் காலபுருசனுகு 10 இல் (தொழில் ஸ்தானம்) உச்சம், தொழில் செய்யும் இடத்தில் பூஜை செய்வோம்,,

தீபாவளி என்றால் தீப ஒளி,, நம் பித்ருக்களை அமாவாசை அன்று வணங்கி எண்ணெய் தேய்த்து குளித்து புது ஆடைகள் உடுத்தி பலகாரம் செய்து கொண்டாடி அவர்களை மீண்டும் வழி அனுப்ப தீப ஒளி ஏற்றுவோம் அந்த வெளிச்சத்தில் அவர்கள் பயணிப்பார்கள்..

 பித்ருக்கள் என்றால் ராகு கேது ஆவார்கள்

(அதாவது நம் முன்னோர்கள், ராகு கேது) (DNA)

நமது ஜாதகத்தில் பித்ரு தோசத்தை ராகு கேது இந்த இரண்டு பேரும் காட்டுவார்கள்,

தீபாவளிக்கு வெடி வெடிபோம் வெடி மருந்து புகை ராகு சுவாதி துலாம்,,

 புது ஆடை சுக்ரன் காரகன்,, எண்ணெய் பலகாரம் சனி காரகம்,,
எண்ணெய் குளியல சனி காரகம்,,

துலாம் சுவாதி இல் சனி உச்சம்,, கட்டாய எண்ணெய் குளியல், செய்கிறோம் அல்லவா,, (சனியின் உச்ச கட்டளை)

நவ கிரகத்திற்கு அதிபதி சாட்சாத் எம்பெருமான் சிவனே,,,சிவனுக்கு அன்ன அபிசேகம்,

இப்படி எல்லா கிரகத்திற்கும் ஐப்பசி மாதம் தொடர்பு இருக்கிறது,,


No comments:

Post a Comment