Monday, 23 November 2020

முட்டைக்கோஸ் அதிகமா சாப்பிட்டா எடை குறையுமா? எப்படி சாப்பிடணும்?

இதுவரை முட்டைக்கோஸ் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்போம். இது நிறைய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய காய், இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது என்பது நமக்கு தெரியும். உண்மையில் சொல்லப்போனால் முட்டைக்கோஸைக் கொண்டு நம்முடைய எடையை கூட குறைக்க முடியுமாம். ஏனெனில் முட்டைக்கோஸில் கலோரி குறைவாக உள்ளது. இது நமது எடையை இழக்க உதவுகிறது. 0% கொழுப்பை கொண்டுள்ளது. எனவே இது எடையை இழக்க சிறந்த நண்பன் என்றே கூறலாம்.



முட்டைக்கோஸ் அதிகமா சாப்பிட்டா எடை குறையுமா? எப்படி சாப்பிடணும்?
குளிர்காலத்தை கதகதப்பா வெச்சிக்கணுமா? டீ தவிர வேற என்னென்ன உணவெல்லாம் சாப்பிடலாம்?...

முட்டைக்கோஸ்


முட்டைக்கோஸ் கொழுப்பை எரிக்கவில்லை என்றால் கூட கலோரிகள் குறைவாக இருக்கிறது. 1/2 கப் சமைத்த முட்டைகோஸில் வெறும் 16 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் அடங்கியுள்ளன. இது உங்க பசியை நீண்ட காலத்திற்கு தணிக்கிறது. முட்டைகோஸில் விட்டமின் சி, பைட்டோ கெமிக்கல்கள், பிற ஆக்ஸினேற்றிகள் உள்ளன. இது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. எடை இழப்பை தருகிறது.

குளிர்காலத்தில் வைட்டமின் ஏ உணவுகள் சாப்பிட்டால் உடம்புக்குள் என்னல்லாம் நடக்கும்... கட்டாயம் தெரிஞ்சிக்கங்க...


இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. எனவே இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே வெளியிடுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

டிப்ஸ்கள்


முட்டைக்கோஸை சமைக்கும் போது அதிகமாக சமைக்க கூடாது. ஏனெனில் இதன் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. அதே மாதிரி இதை நீங்கள் சாலட்டுகளில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதை முன்கூட்டியே வெட்டக் கூடாது. இவை ஊட்டச்சத்துக்களை இழக்கிறது.

முட்டைக்கோஸ் பொரியல், முட்டைக்கோஸ் பராத்தா மற்றும் முட்டைக்கோஸ், பன்னீர் சாண்ட்விட்ச் செய்து நீங்கள் சாப்பிட்டு வரலாம். இது நீங்கள் ஆரோக்கியமான உடல் எடையை குறைக்க பயன்படுகிறது

No comments:

Post a Comment