Friday 6 November 2020

ராகு நின்ற வீடும் வாழும் ஆசையும்...!

ராகு நின்ற வீடும் வாழும் ஆசையும்...!

ராகு நின்ற வீட்டில் தான் ஜாதகரின் வாழும் ஆசை உள்ளது, கேது அந்த ஆசையை ஜாதகர் எவ்வித கர்மத்தால் பெற்றார் என்பதை குறிக்கிறார், கேது குறிப்பிடும் கர்மத்தை கணித்து ராகு நின்ற வீட்டில் திருத்தம் மேற்கொண்டால் ஜாதகரின் ஆசையை அடையும் வழி பிறக்கும், இந்த ஆசை மற்றும் எவ்வித கர்மா என்பது ஜாதகத்துக்கு ஜாதகம் மாறுபடும், ஏனெனில் ஒரு பாவத்துக்கு பல காரகங்கள் உண்டு என்பதால் முழு ஜாதகம் கணித்தே கூற இயலும், இதன் பொதுவான காரகங்களை சுருக்கமாக தருகிறேன் மேற்கொண்டு படிக்கவும்..

1ல் ராகு: களத்திரம்/எதிராளி முன்பு வாழ்ந்துகாட்டுவது...

2ல் ராகு: குடும்பம்/நிலையான வருமானம்...

3ல் ராகு: ஆராய்ச்சி/அதீத முயற்சி செய்து எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டும்/சொந்த பந்தங்கள் முன்பு நன்றாக வாழவேண்டும்...

4ல் ராகு: சொத்து சேர்க்க/சுகாமக வாழ/ அம்மாவை பார்த்து கொள்ள...

5ல் ராகு: மந்திர சித்தி பெற/ பூர்வீகத்தில் நல்ல நிலை பெற/ குழந்தைகள் பெற்றுக்கொள்ள...

6ல் ராகு: போட்டியில் வெற்றி பெற/கடன் வாங்க/தாய் மாமன்...

7ல் ராகு: காமம்/மற்றவர் புகழும் அளவுக்கு வாழ்வில் மேல்நிலை பெற/களத்திரம் பாராட்டும் படி செயல்பட...

8ல் ராகு: அடுத்தவர் தனத்தை தன் பணமாக கருத/திடீர் அதிர்ஷ்டம் பெற/வெளிநாடு செல்ல/எதிரியை பழிவாங்க...

9ல் ராகு: தர்மவான் என பெயரெடுக்க/அறிவுரை கூற/கோயில் கட்ட/தந்தையை கவனித்து கொள்ள/ அதிகம் சேமிக்க...

10ல் ராகு: கர்மகாரியங்கள் செய்ய/வேலை, தொழிலில் மேல் நிலைபெற/நேர்மையாக வாழ...

11ல் ராகு: பல வகை காமம் சுவைக்க/லாபம் சம்பாதிக்க...

12ல் ராகு: கனவு காண/ நன்றாக உறங்கி அதன் சுகத்தை உணர/வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய/அதிக முதலீடு செய்து தொழிலில் லாபம் பார்க்க/வெவ்வேறு வகையில் கட்டில் சுகம் அனுபவிக்க ஆசை...

குறிப்பு: கேது எந்த கர்மத்தை குறிக்கிறார் என்பதை பொதுவாக பதிவிட இயலாது ஏனெனில் அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், இதுவே பொதுவாகவே கூறியுள்ளேன் ஒரு பாவம் என்று எடுத்துக்கொண்டால் பல காரகங்கள் உள்ளதால் அதில் ஒரு காரகமே ஜாதகருக்கு வாழும் ஆசையை தூண்டுகிறது என்பதால் மேலே கூறிய காரகங்கள் ஒரு உதாரணமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment