Wednesday, 18 November 2020

தென்னையப் பெத்தா இளநீரு... பிள்ளையப் பெத்தா....!

தென்னையப் பெத்தா இளநீரு...
      பிள்ளையப் பெத்தா....!

ஐந்தாமிடத்தில் குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களோ நின்றிருந்தால் குழந்தை பாக்கியம் சீக்கிரம் அமையாது. மிகவும் காலதாமதம் ஆகும். மேற்படி ஜாதகத்தில் கர்ம காரனாகிய செவ்வாயோ, அல்லது பத்தாமிட அதிபதியோ பலம் பெற்றிருந்தாலும், 10 ல் செவ்வாய் நின்றாலும், அந்த ஜாதகனுக்கு கர்மம் செய்வதற்கு காலம் கடந்தாவது ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்பது விதி.

5 க்குடையவன், லக்கினத்திற்கு 3 ல் மறைந்தால், ஜாதகனுக்கும், அவனுடைய மகனுக்கும் அடிக்கடி மனஸ்தாபங்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்.

லக்கினத்திற்கு  2, 12 ல், பாபர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு. கேது ஆகிய கிரகங்கள் நின்றிருந்தால், ஜாதகனுக்கு ஆண் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை.

சந்திரனும், குருவும் இணைந்து 7 ல் இருந்தால் அந்த ஜாதகனுடைய வம்சம் அவனுக்குப் பின் தொடராது.

8 க்குடையவன் அலி கிரகமாக இருந்து 
5 ல் இருந்தால், புத்திர பாக்கியம் மிகவும் குறைவு. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் கிடைக்கலாம்.

5 ல் இருக்கும் சூரியன் நவாம்சத்தில் சனியின் வீட்டில் இருந்தால், புத்திர பாக்கியம் உண்டாகாது.

சனியும், செவ்வாயும், 5 ல் இருக்க, நவாம்சத்தில் செவ்வாய், சனியின் வீட்டில் இருந்தால், ஜாதகனுடைய குழந்தை கருவிலேயே மரணிக்கும்.

5 க்குடையவனும், சுக்கிரனும், சந்திரனும் இணைந்து பெண் ராசிகளில் நின்றால், ஜாதகனுக்கு பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும்.

(கணவன்+மனைவியின் புத்திர ஸ்தான
  பலம் பொறுத்து பலன் மாறலாம்)


No comments:

Post a Comment