Saturday, 14 November 2020

கொசுவை அழிக்க ஒளிக்க வீட்டு வைத்தியங்கள்…



🉐 கொசுவை அழிக்க ஒளிக்க வீட்டு வைத்தியங்கள்…❓❓❓

⏩ உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. 

ஆண்டுதோறும் லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்.❗

👉மலேரியா, 

👉மஞ்சள் காமாலை, 

👉டெங்கு, 

👉மூளை அழற்சி, 

👉சிக்குன்குனியா,

👉ஜிகா வைரஸ் 

போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன.

🔯#மலேரியா

இது ஒருவகை ஒட்டுண்ணி நோயாகும். இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர்………

▶தலைவலி, 

▶தசை வலி, 

▶குறைந்த ரத்த அழுத்தம், 

▶சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், 

▶கடும் குளிர் 

போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கும். மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகமாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஸ்போரோசோயிட்டுகள் எனும் ஒட்டுண்ணிகள் ரத்த ஓட்டத்தில் ஊடுருவி சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும்.

🔯#டெங்கு

ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது தொற்றுநோய் வகையை சார்ந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், மற்ற நபர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு நோய் பாதிப்பு உண்டாக்கிவிடும். 

▶நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மூட்டு மற்றும் தசை பகுதியில் கடும் வலி உண்டாகும். இது எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. 

▶வெப்ப மண்டல பகுதியில்தான் இந்த நோய் அதிகமாக பரவும். 

▶கொசு கடித்தாலும் 4 முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி கள் தென்பட தொடங்கும். 

▶கடுமையான தலை வலி, 

▶கண் வலி, 

▶குமட்டல், வாந்தி, 

▶மூட்டுவலி, 

▶மார்பு, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் வீக்கம், 

▶கடுமையான காய்ச்சல் 

போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆரம்பத்தில் நோய் தாக்கம் லேசாக இருக்கும். பின் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

🔯#சிக்குன்குனியா

ஏடீஸ் ஏஜிப்டி கொசுக்கள் இந்த நோயை பரப்பும் தன்மை கொண்டவை. 

▶கடுமையான மூட்டுவலி, 

▶உடல் வீக்கம், 

▶காய்ச்சல் 

போன்ற அறிகுறிகள் தென்படும். ஏறக்குறைய இந்த நோயும் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகளை கொண்டிருக்கும். 

கொசு கடித்த 4 நாட்களுக்குள்ளே நோய்க்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். 

▶குமட்டல், 

▶வாந்தி, 

▶உடல் வீக்கம், 

▶ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, 

▶மலச்சிக்கல், 

▶தலைச்சுற்று, 

▶விரல்களில் குளிர்த்தன்மை, 

▶தொண்டை வலி, 

▶கடுமையான தலைவலி 

போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

🔯#ஜிகா_வைரஸ்

சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. 

⏩இரண்டு நாட்களில் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். 

▶மூட்டுவலி, 

▶காய்ச்சல், 

▶வீக்கம், 

▶தலைவலி, 

▶சோம்பல், 

▶விழி வெண்படல அழற்சி 

போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

🔯#மூளை_அழற்சி

இது கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் நோயாகும். இதன்மூலம் 

▶மூளைக்குச் செல்லும் மென்படலத்தில் வீக்கம் ஏற்படும். 

▶கடும் காய்ச்சல், 

▶கழுத்து விறைப்பு, 

▶வலிப்பு நோய், 

▶பக்கவாதம் 

போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

#கொசு_தொல்லையா❓
#விரட்டி_அடிக்க_இதை_செய்யுங்க #போதும்……

🔴 வீட்டில் கொசு மருந்து தயாரிப்பது எப்படி❓

👉தேவையான பொருட்கள்❓

சிட்ரோனில்லா எண்ணெய்  – 30 மில்லி

மஞ்சள் வாஸ்லின் – 110 மில்லி

நீலகிரி தைலம் – 20 மில்லி

கற்பூரம் – சிறியது

கொசு விரட்டி தயாரிக்கும் முறை
சிட்ரோனில்லா என்பது ஒருவகை வாசனி புல் இதனை எலுமிச்சை புல் என்றும் கூறுவார்கள். இதன் வேரில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிட்ரோனில்லா எண்ணெயாகும்.
இதனுடன் நீலகிரி தைலத்தையும் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மஞ்சள் வாசலின் நன்றாக நீர் பதம் வரும்வரை உருக்கி முன் செய்து வைத்துள்ள கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கலவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து கொள்ளம் படி கலக்கி எடுத்து கண்ணாடி புட்டியில் வைத்துக் கொண்டு தேவையான போது  பயன்படுத்தி கொள்ளலாம். மேற் கூறிய மருந்துகளுடன் வேம்பு, திருநீற்று பச்சிலை, நொச்சி இலை போன்ற மூலிகை  சாறு எடுத்து பக்குவ படுத்தி மேற்கூறிய முறையில் கலந்து பயன்படுத்தலாம்

⭕ கொசு விரட்டும் மூலிகை வகைகள்

பிரியாணி இலை, வேப்ப இலை, ஆடுதொடா, கற்பூரவள்ளி, நொச்சி, குப்பைமேனி, புதினா , யூகலிப்டஸ் இலை,  ரோஸ்மேரி , அசோலா பாசி, கிராம்பு, பூண்டு, திருநீற்று பச்சிலை, ஆகிய மூலிகைகளில் இருந்து வரும் மனம் கொசுக்கள் வெறுக்கும் விதம் இருப்பதால் கொசுக்கள் அம் மூலிகை செடிகளின் அருகில் செல்லாது.

⭕ கொசு விரட்டும் நொச்சி மூலிகை

நொச்சி செடிகளில் நான்கு வகைகள் உள்ளன. நீர் நொச்சி, சாம்பல் நொச்சி, நீல நொச்சி மற்றும் கரு நொச்சி. இந்த நான்கு வகையான நொச்சி செடிகளில் இருந்து வரும் வாசம் கொசுக்களுக்கு பிடிப்பதில்லை அச் செடிகளில் அருகிலோ அல்லது நொச்சி செடியின் வாசம் இருக்கும் தூரம் வரை கொசுக்கள் செல்ல விரும்புவதும் இல்லை. கொசுக்களிடம் இருந்து தப்பிக்க மனித இனத்திற்க்கு நொச்சி ஓர் வரபிரசாதமே என்று கூறலாம் நொச்சி செடியை போல பல மூலிகைகளுக்கு கொசுவை  விரட்டும் தன்மை உண்டு அதை பின் வரும் பகுதிகளில் குறிப்பிட்டுள்ளோம்.

கொசு விரட்ட நொச்சி செடி வளர்ப்பு
வீடுகளில் கொசு நுழையும் பகுதிகளான வாசப்படி, ஜன்னல் அருகில் நொச்சி செடி வளர்ப்பதால் கட்டு படுத்த முடியும். அத்துடன் மாலை சுமார் 6:00 மணிக்கு மேல் கொசு வர ஆரம்பிக்கும். அதற்க்கு முன்னதாக நொச்சி இலைகளை வீட்டின் உட்புரத்தில் புகைக்க கொசு வராது. இந்த புகையின் வாசாம் சுமார் 8 மணிவரை இருக்கும் படி செய்தால் அன்று இரவு முழுவதும் கொசுக் கடியில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். நொச்சி இலைகளை படுக்கையின் அடியில் போட்டு வைக்க கொசு கட்டுபடும். நொச்சி இலை பல மருத்துவ தன்மை வாய்ந்து இதை நிழலில் உலர்த்தி பத்திர படுத்தி சித்த மருத்து பயன்படுத்தலாம்.

⭕ வீட்டில் கொசு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

கொசு வராமல் இருக்க புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகள் கொசுக்களுக்கு  விரோதி. இந்த எளிய  செடிகளை வீட்டை சுற்றி வளர்த்து வந்தால் கொசுக்கள்  வராது. இம் மூலிகை இலைகளை சேகரித்து வைத்து கொண்டு வீட்டில் புகை போட கொசு வராது. கொசு மட்டும் அல்ல கிருமிகளும் ஓடிவிடும். 

⭕ கொசு வராமல் தடுக்க இயற்கை வழி

வேப்பிலை, கற்பூரவள்ளி இலை, நொச்சி இலை, வேப்ப இலை,  ஆடுதொடா இலை, குப்பைமேனி இலை, யூகலிப்டஸ் இலைகளை உலரவைத்து இடித்து தூள் செய்து வைத்து கொண்டு சாம்பிராணியுடன் சேர்த்து புகை போட  கொசு வராமல் தடுக்க இயற்க்கை வழ முறைகள் ஆகும். மேலும் இதனால் வீட்டில் உள்ள தீய சக்திகளாக கருதப்படும் எதிர்மறை சக்திகளும் வெளியேறும். நோய்களும் குணமாகும். மேற் கூறிய மூலிகை புகை சுவாசிக்கும் போது நூரையிரலுக்கு சென்று இரத்தத்தில் கலந்து நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். இயற்கையான வழி முறைகாளை பின் பற்றுவதால் பல நன்மைகளை நாம் பெறலாம்.

⭕ கொசு வராமல் இருக்க 
மூலிகை புகை

பிரியாணி இலை 30 கிராம், வேப்ப இலை 30 கிராம்,  சந்தன கட்டை பொடி 30 கிராம், அகில் கட்டை 30 கிராம், ஆடுதொடா இலை 30 கிராம், கற்பூர வள்ளி இலை 30 கிராம், நொச்சி இலை 30 கிராம், குப்பைமேனி இலை 30 கிராம், புதினா இலை 30 கிராம்  யூகலிப்டஸ் இலை 30 கிராம்,  ரோஸ்மேரி  பூ 30 கிராம், அசோலா பாசி 30 கிராம், வேப்ப எண்ணெய் 10 மில்லி, தேங்காய் எண்ணெய் 10 மில்லி,  சாம்பிராணி 200 கிராம், குங்கிலியம் 100 கிராம்.

⭕ கொசு வராமல் இருக்க மூலிகை புகை செய்முறை

முதலில் மூலிகை வகைகளை நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கவும் அதில் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், சிறிது சிறிதாக விட்டு கலக்கி வைத்து விட்டு சாம்பிராணியையும், குங்கிலியத்தையும் தனி தனியாக இடித்து நன்றாக பொடி செய்து முன் செய்த மூலிகை கலவையுடன் சேர்த்து கலக்கி ஓர் சில்வர் பாத்திரத்தில் போட்டு காற்று புகாத படி மூடி வைத்து கொண்டு தினமும் வீட்டில் மூலிகை புகை போட கொசு, கிருமிகள், நோய்கள் நீங்கி வீட்டில் நல்ல மனம் வீசும்.

⭕ கொசு விரட்டி

ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.

⭕ மண் சட்டி ஒன்றில், தீ உண்டாக்கி அதில் வேப்பிலை போட்டு, அதன்மெல் மஞ்சள் தூள் தூவினால் அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம் கொசு மட்டுமின்றி மழைக் காலத்தில் வீட்டுக்குள் வரக் கூடிய அனைத்துப் பூச்சிகளையும் விரட்டும். குளிர்காலத்தில் நமக்கு வரும் மூச்சுப்பாதை கோளாற்றை இந்தப் புகை சரி செய்யும். சுற்றுசூழலுக்கும் எந்த கேட்டையும் ஏற்படுத்தாது.

⭕ சாயுங்கால நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காட்டலாம். இதனால் ஒரு கொசுகூட வீட்டில் இருக்காது. இந்த நார்களின் புகையால் உடலுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

⭕ கொசுவை இயற்கையான முறைகளில் மூலம் விரட்ட, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணியை வாங்கி, அரை மணி நேரம் புகைத்தால் போதும், கொசு வரவே வராது.

⭕ யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது கொசுவை விரட்டலாம்.

 
⭕ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சில கற்பூர வில்லைகளை போட்டு வைத்தால் கொசு எட்டிக்கூட பார்க்காது.

 
⭕ வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம்.

⭕ கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது கொசுவை விரட்டலாம்.

⭕ தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும்; கொசுவும் நெருங்காது.

⭕ வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம். அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.

⭕ பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது.

⭕ வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம். 

⭕ வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் சிறிதளவு மண்ணெண்ணையை தெளித்து வைத்தால் அந்த இடத்தில் கொசுக்கள் முட்டையிடுவது அடியோடு நின்று போய்விடும்.

 
⭕ ​எலுமிச்சையில் இலவங்கம்

நல்ல சாறு நிறைந்த எலுமிச்சையை பாதியாக வெட்டி கொள்ளவும். அதில் கிராம்புகளை நட்டு வைக்க வேண்டும். எலுமிச்சையின் வாசமும், கிராம்பின் வாசமும் கொசுக்களிடமிருந்து நம்மை விலக்கி வைக்கும்.

சிலிண்டர் பயன்படுத்தறீங்களே இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்களா?

வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் நடுவில் வைக்கவேண்டும். இவை 3 முதல் 4 மணி நேரம் வரை பலனளிக்கும். இதன் வாசனையால் வேறு பூச்சிகளும் கூட ஓடிவிடும். கொசுக்கள் அதிகமாக நடமாடும் நேரமான மாலை 5 மணிக்கு வைத்தால் இரவில் கொசு தொல்லை அதிகம் இராது. தினமும் பழங்களை மாற்ற வேண்டும்.

⭕ ​மூலிகை புகை

நல்ல மண்சட்டியை கொசு விரட்டுவதற்கான புகை போடுவதற்காக வாங்கி பயன்படுத்தலாம். அடுப்புக்கரி அல்லது தேங்காய் சிரட்டையை சேர்க்கவும்.

மாலை நேரங்களில் மண்சட்டியில் தேங்காய் சிரட்டையை வைத்து கற்பூரம் கொண்டு எரியவிட்டு பிறகு அதில் வேப்பிலை, நொச்சி இலைகளை சேர்த்தால் புகை வர தொடங்கும். இந்த புகையை வீடு முழுவதும் பரப்பும்படி மண்சட்டியை ஒவ்வொரு அறையிலும் வைத்து எடுக்க வேண்டும். அறைக்குள்ளிருந்து புகை வெளியேறாதவாறு ஜன்னல் கதவையும் அடைக்க வேண்டும். இந்த கசப்பு நிறைந்த புகை கொசுக்களை நிச்சயம் அருகில் வரவிடாது.

▶ குறிப்பு

குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா, சுவாசப்பிரச்சனைகள் இருப்பவர்கள் வீட்டில் புகையைத் தவிர்க்க வேண்டும்.

⭕ ​புதினா

நறுமணமிக்க புதினாவின் வாசனையை கொசுக்கள் விரும்பாது. புதினாவை சிறிது நீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டவும். அதில் சிறிதளவு கற்பூரத்தை பொடித்து போடவும். இப்போது புதினாவுடன் கற்பூர வாசனையும் சேரும். அந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இதை அவ்வபோது படுக்கும் அறையில் மூலை ஜன்னல் பகுதிகளில் ஸ்ப்ரே செய்யவும். இதன் வாசனை போக போக ஸ்ப்ரே செய்துவந்தால் கொசுக்கள் நடமாட்டம் குறையும். கோடையில் ஈ அதிகம் வரும் இடங்களிலும் இதை ஸ்ப்ரே செய்தாலும் ஈக்கள் குறையும். கூடுதலாக இவை அறையில் நறுமணத்தையும் கொடுக்கும்.

⭕ பூண்டு

பூண்டு வாசனையை நம்மை போலவே கொசுக்களும் விரும்பாது. பூண்டை நசுக்கி சாறு கீழே போகாமல் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு ஸ்ப்ரே செய்யலாம். பூண்டுக்கு மாற்றாக பூண்டு எண்ணெயுடன் ஐந்துமடங்கு நீர் கலந்து பஞ்சை நனைத்து ஆங்காங்கே போட்டு விட்டாலும் அதன் வாசனைக்கு கொசுக்கள் அண்டாது. ஆனால் பூண்டு வாசனை இருக்கும் வரை தான் கொசுக்கள் வராமல் இருக்கும். அதை அப்படியே வைத்திருந்தால் வாசனை போனதும் அதிலேயே கொசுக்கள் முட்டையிடும். அதனால் அவ்வபோது காட்டனையும் மாற்றிவிட வேண்டும்.

⭕ ​இயற்கை லிக்விட்

கொசுவை விரட்டி அடிக்க வீட்டில் பயன்படுத்தும் கொசு திரவத்தை இயற்கை முறையில் விரட்டலாம். சுத்தமான வேப்ப எண்ணெயை 50 மில்லி எடுத்து அதில் 5 கற்பூர வில்லைகளை போட்டு அவை கரையும் வரை நன்றாக கலக்கவேண்டும். கற்பூரம் கரைந்ததும் அதை லிக்விட் பாட்டிலில் (ஏற்கனவே பயன்படுத்திய பாட்டிலை வீசி எறியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்து ) ஊற்றி வழக்கம் போல் மின்சாரத்தில் இயங்க செய்யவேண்டும். கொசு விரட்டும் திரவம் போல் இவை ஆவியாகி அறைமுழுக்க பரவி அந்த வாசனைக்கு கொசுவை விரட்டி அடிக்கும்.

⭕ ​மருந்து களிம்பு

வேப்ப எண்ணெயும் விளக்கு எண்ணெயும் சம அளவு கலந்து வைக்கவும். இதை உடலில் தடவி கொண்டால் அந்த எண்ணெய் வாசனைக்கு கொசு அருகில் வராது.

வீட்டுக்குள்ளேயே செடிகளை வையுங்க.. உற்சாகமா புத்துணர்ச்சியா வளைய வருவீங்க..

குழந்தையின் உடலிலும் தடவலாம். குழந்தையின் விரல்களில் தடவ வேண்டும். குழந்தை கை சப்புவதால் அவை உள்ளுக்குள் போய் வயிற்றுபோக்கை உண்டாக்கும். பெரியவர்களும் இதை தடவி கொள்ளலாம்.

⭕ கிராம்பு

கிராம்பு ஆயில் ஏற்கனவே பூச்சிகளை எதிர்த்து கொல்லும் சக்தி வாய்ந்தது. இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் இதன் அதீத வாசனை பூச்சிகளை விரட்டி அதன் பெருக்கத்தையும் தடுக்கிறது. பயன்படுத்தும் முறை 1 டேபிள் ஸ்பூன் கிராம்பு எண்ணெய் எடுத்து கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் பரவியுள்ள இடத்தில் ஸ்பிரே செய்யவும்.

⭕ வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் ஓரு கிருமி நாசினியாகும். வேப்பிலையிலிருந்து பெறப்படும் இந்த எண்ணெய் மூட்டை பூச்சிகளை கொல்லும் மருந்தாக செயல்படுகிறது. பயன்படுத்தும் முறை 1 அவுன்ஸ் வேப்பெண்ணெய்யை எடுத்து கொள்ளவும். அதனுடன் 4 அவுன்ஸ் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/2 டீ ஸ்பூன் அளவு சோப்பு எடுத்து கலந்து கொள்ளவும். பிறகு அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் உள்ள இடங்களான கட்டில், மெத்தை, இடுக்குகள் போன்ற இடங்களில் ஸ்பிரே செய்யும் வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் 18-20 நாள் செய்து வந்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை இருக்காது.

⭕ லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய்யும் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும். இது மூட்டை பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதில் மிகவும் சிறந்தது. பயன்படுத்தும் முறை 50 மில்லி லிட்டர் தண்ணீரில் 10-15 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ள வேண்டும்.நன்றாக குலுக்கி விட்டு அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் பரவியுள்ள இடத்தில் ஸ்பிரே செய்யவும்.

⭕ யூகாப்லிட்டஸ் ஆயில்

பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது. இதுள்ள பூச்சி விரட்டும் பொருட்கள் மற்றும் முட்டைகளை அழிக்கும் தன்மை களைகளை அழித்தல், பூஞ்சை, பூச்சிகள், பாக்டீரியா போன்றவற்றை விரட்டுகிறது. பயன்படுத்தும் முறை 1.5 அவுன்ஸ் வோட்காவுடன் 2 அவுன்ஸ் தண்ணீர் மற்றும் 30-35 சொட்டுகள் யூகாப்லிட்டஸ் ஆயில் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து நன்றாக குலுக்கி கொள்ளவும். இதை பூச்சிகள் உள்ள இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஸ்பிரே செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

⭕ ஆரஞ்சு ஆயில்

ஆரஞ்சு ஆயிலில் அடங்கியுள்ள டி - லைமோனோன் ஒரு பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இதுலுள்ள பொருட்கள் பூச்சிகளின் நரம்புகளில் நச்சுக்களை விளைவித்து சில விநாடிகளில் அதை கொண்டு விடுகிறது. பயன்படுத்தும் முறை 1 அவுன்ஸ் கருப்பு நிற வெல்லப்பாகு, 1 கப் கம்போஸ்ட் டீ மற்றும் 2 அவுன்ஸ் ஆரஞ்சு எண்ணெய் இவற்றுடன் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து கொள்ளவும். இப்பொழுது பூச்சிகள் இருக்கின்ற இடத்தில் ஸ்பிரே செய்யவும்.

⭕ தைம் ஆயில்

தைம் ஆயில் ஒரு பூச்சி விரட்டியாக இருப்பதால் எளிதாக மூட்டை பூச்சிகளை விரட்டி விடுகிறது. பயன்படுத்தும் முறை சில தைம் இலைகளை எடுத்து ஒரு கவரில் போட்டு பூச்சிகள் இருக்கின்ற இடத்தில் வைத்து விடவும். பிறகு 3 நாட்களுக்கு பிறகு அந்த இலைகளை நீக்கி விட்டு புதிய இலைகளை அதனுள் வைத்து இதே மாதிரி திரும்பவும் செய்யவும். இதன் மூலம் பூச்சித் தொல்லைகள் இல்லாத வீட்டை பெற முடியும்.

⭕ டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில் ஒரு சிறந்த பூச்சி விரட்டி. இந்த எண்ணெய் பூச்சிகளின் செல் சுவர்களை தாக்குவதால் இது ஒரு அற்புதமான பூச்சி விரட்டியாகும். குறிப்பாக மூட்டை பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது. பயன்படுத்தும் முறை 50 மில்லி லிட்டர் தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் டீ ட்ரி ஆயில் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து கொள்ளவும். பிறகு பூச்சிகள் பரவியுள்ள இடங்களில் ஸ்பிரே பண்ணவும். ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் பாட்டிலை குலுக்கி கொள்ளுங்கள்

#சுற்றுப்புறத்_தூய்மை

⭐வீடு, வீட்டைச்சுற்றியுள்ள இடம் உள்ளிட்ட நம்முடைய சுற்றுப்புறத்தை, தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கொசுக்கள் அதிகளவில் தொல்லை கொடுக்கும். அந்த வேளைகளில் கொசுமருந்துகளை அதாவது மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டிகளைப் (Mosquitoe repellent) பயன்படுத்தலாம்.

⭐அதே நேரத்தில் கொசு விரட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே கொசு விரட்டிகளுக்கு பதிலாக கொசுவலைகளைக் பயன்படுத்த தவற வேண்டாம்.

⭐குழந்தைகளுக்கு கை மற்றும் கால்கள் முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவிப்பது, கொசுக்கடியில் இருந்து ஓரளவுக்கு பாதுகாக்கும். பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளுக்கும் முழுக்கை அடைகளைக் போட்டு அனுப்பவும்.

⭐பகல் வேளையில், டெங்கு காய்ச்சலைக் கொண்டுவரும் டெங்கு கொசுக்கள் அதிகளவில் கடிக்கும் என்பதால், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

⭐ஏர்கூலர்களை (AirCoolers) மண்ணெண்ணைய் கொண்டோ அல்லது கொசுவிரட்டி எண்ணெய் கொண்டோ சுத்தம் செய்வது அவசியம். அவற்றை காய வைப்பதை மறந்துவிட வேண்டாம்.

⭐வீடுகளின் அருகிலோ, மேற்கூரையிலோ தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறம் அசுத்தமாக இருந்தால், மாநகராட்சியின் புகார் தெரிவித்து, அந்த இடத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்.

⭐மாலை நேரங்களில் பூங்காக்களுக்கு செல்வதைத் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

⭐அவ்வப்போது கொசு மருந்து அடித்து, கொசுக்களை ஒழிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்கிறார்களா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

⭐அதிகளவில் பூண்டினை உணவில் சேர்த்துக்கொள்வது, கொசுக்கள் உங்களை அண்டாமல் இருக்க வழிவகுக்கும். ஏனெனில் கொசுக்களுக்கு பூண்டு வாடை அறவே பிடிக்காது.

⭐இதேபோல் வைட்டமின் B1 அதிகளவில் இருக்கும் உணவுகளைச் சாப்பிடுங்கள். உங்கள் உடலில் வைட்டமின் B1 அதிகமாக இருக்குமானால், கொசுக்கள் கடிக்காது.

⭐முழுக்கை மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிவதன் மூலம் கொசுக்கடியில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment