Saturday, 21 November 2020

சளியை போக்க இயற்கை கை வைத்தியங்கள்

சளியை போக்க இயற்கை கை வைத்தியங்கள்

மருத்துவ குறிப்பு 1
சிறிதளவு தேங்காய் என்னை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை போட்டு நன்கு சுடவைத்து பின் சிறிது நேரம் ஆற வைத்து அதை நெஞ்சில் தடவினால் சளி தொல்லை நீங்கும்.

மருத்துவ குறிப்பு 2
பொதுவாக மஞ்சள் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி என்பது நாம் அறிந்ததே. பாலோடு மஞ்சள் சேர்கையில் அது மருந்தாக மாறுகிறது. பாலை நன்கு காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்

மருத்துவ குறிப்பு 3
தூய்மையான தேன் மூலமும் சளியை குணப்படுத்தலாம். 100 மி.லி தேனை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் ஊற்றி அதன் அடர்த்தி குறையும் வரை நன்கு சூடாக்கவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து பயன்படுத்திவர சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மருத்துவ குறிப்பு 4
பொதுவாக வெங்காயம் சளியை அதிகரிக்கும் என்று பலர் கருதுவதுண்டு. ஆனால் வெங்காயத்தின் மூலமும் சளியை சரி செய்யலாம். ஒரு வெங்காயத்தை எடுத்து கொண்டு அதை உரித்து பின் நன்கு நசுக்கிக்கொள்ளவேண்டும். அதோடு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பின் அதோடு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் இதனை ஆறவைத்து பருகினால் சளி தொல்லை நீங்கும்

No comments:

Post a Comment