Saturday 28 November 2020

புதையலும் சோதிடமும்...

புதையலும் சோதிடமும்...

இவ்வாறு தலைப்பிட்டு எழுத வேண்டிய நிலையை ராகு உருவாக்கிவிட்டார், ராகு எனும் பிரபஞ்சமே என்னை இந்த பதிவை எழுத கூறியது, புதையல் சோதிடத்தில் என்ன காரகம் வகிக்கிறது, சோதிடத்தை வைத்து புதையல் இருக்கும் இடத்தை அல்லது குறிப்பிட்ட நபருக்கு புதையல் யோகம் இருப்பதையும் கூற இயலுமா, சற்று அலசுவோம்...!

புதையல் இதன் காரகாதிபதி சனி, ஏனெனில் புதையல் என்பது யாரும் அறியாவண்ணம் புதைத்து வைப்பது அதாவது பழையது, இவ்வாறு புதைக்கப்பட்ட அனைத்தும் சனியின் காரகமே, சரி புதையல் சனி என்றால் அதை புதைப்பது யார் வேறு யாரும் அல்ல கேது, பின்னர் அதை பாதுகாப்பது யார் நம்ம பிரபஞ்சம் எனும் இயற்கை ராகுவே, புதையல் தேடுவதற்கு முதலில் சனியின் ஆசி வேண்டும், பின்னர் ராகுவின் வழிகாட்டுதல் வேண்டும், பின்னர் உங்கள் முன்வினை பயன் எனும் கேது வழிவிட்டால் தான் புதையலை அடைய இயலும், அப்படியே அடைந்தாலும் உங்கள் பிராப்த கர்மா சனி அதை உங்களுக்கு உபயோகமானதாக தருக்கிறாரா இல்லை உபயோகமற்று போக செய்கிறாரா என்பதை கணிக்க வேண்டும், மேலும் சிலருக்கு புதையல் கிடைத்தவுடன் வாழ்க்கை தலைகீழாகும் இதன் பொருள் கர்மா, பலரின் சாபம்/ஆசை/ஏக்கம் அந்த புதையலில் புதையுண்டு இருப்பதால் அவ்வாறு ஏற்படும், புதையல் என்பது முழு சனியின் காரகமாகும், ஒருவருக்கு பரப்த காரகன் சனி நன்றாக இருந்து யோகம் செய்தால் தான் புதையல் வழியே வாழ்வில் மேன்மை பெறலாம்..

மேலும் புதையல் ஆசையை கிளப்புபவர் ராகு ஆவார், ஒருவர் புதையல் ஆசை பிடித்தால் அங்கே குரு வாசம் செய்ய மாட்டார் விலகிவிடுவார்,  ஏனெனில் புதையல் ஒரு கர்மவினை அதை அடைவதும் அவ்வாறே, சோதிடத்தில் புதையல் கிடைக்கும் யோகம் பற்றி முன்னோர்கள் சில கிரக நிலைகளை கூறி சென்றுள்ளனர் ஆனால் அவை 100% துல்லியமானதா என்றால் நிச்சயம் இல்லை, உண்மையில் சோதிடத்தால் புதையலை பற்றி 50% மட்டுமே கூற இயலும் ஏனெனில் இது முற்றிலும் கர்மா சம்பந்தப்பட்டது, சோதிடம் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டா என்பதை மட்டுமே கூறும், புதையல் எடுக்கலாம் பலன் கூறுகிறேன்/பரிகாரம் கூறுகிறேன் என்று யாராவது கூறினால் நம்பவேண்டாம், புதையல் பரப்த கர்மா இருந்து, ஆகமிய கர்மா வழிவிட்டு, சஞ்சித கர்மாவில் எழுத்தப்பட்டிருந்தால் மட்டுமே கிடைக்கும், அவ்வாறு கிடைத்தாலும் அது மீண்டும் கர்மாவை சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதனால் நன்மை ஒன்றுமில்லை, சிலர் ஆன்மீகம் எனும் போர்வையில் புதையல் தேடுகிறார்கள், அவர்களுக்கு எச்சரிக்கை உங்கள் தேடல் குரு சண்டாள யோகத்தை தட்டி எழுப்பும் கடைசியில் உள்ளதும் போய் கேதுவால் பைத்தியம் பிடிக்கும், புதையல் என்பதை அடையாமல் இருப்பதே மேல், ஏனெனில் சில புதையலை ஆன்மா பாதுகாக்கும் அது ராகுவின் ரூபம் ஆகும், ஒருவர் ஜாதகத்தில் ராகு யோகர் என்றால் அவரால் அந்த புதையலை தொட இயலும், ராகு நல்ல நிலையில் இல்லை என்றால் புதையல் கிட்ட போனவுடன் அசம்பாவிதம் நடக்கும், அதே போல் தான் கேது நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே புதையல் இருக்கும் இடம் தெரியும், இதற்கு குரு எனும் கடவுளின் ஆசியை காட்டிலும், கர்ம கிரகங்களான ராகு/கேதுவின் ஆசி அவசியம் அதனால் தான் பலர் காளி வழிபாடு செய்து புதையல் தேடுவார்கள், ஏனெனில் ராகு எனும் பிரபஞ்சம் வழிகாட்டினால் தான் கேது மறைத்து வைத்துள்ள சனி எனும் புதையல் கிடைக்கும், அவ்வாறு கிடைத்தாலும் இம்மூவரால் மீண்டும் கர்மா சேருவதை தவிர்க்க இயலாது, புதையல் எனும் ஆசைக்கு காரகரே ராகு தானே அவர் தானே ஒருவரை கர்மம் சேர்க்க வைக்கிறார், இதற்கு மேல் புதையல் தான் தேடுவேன் என்போருக்கு நான் கூறுவது அது தான் உங்கள் கர்மா என்றால் நான் என்ன செய்ய, விழிப்புணர்வை மட்டுமே கொடுக்க இயலும், கடமையை செய்துவிட்டேன் மீதி அவரவர் வினைப்பயன், மீண்டும் சந்திப்போம்...!

No comments:

Post a Comment