Thursday, 19 November 2020

கர்மம் எங்கே சேமிக்கப்படுகிறது...!

கர்மம் எங்கே சேமிக்கப்படுகிறது...!

சோதிடத்தில் பொதுவாக கர்ம ஸ்தானம் என்று கூறப்படும் பாவம் லக்னம்/ராசிக்கு 10ம் வீடு, ஆனால் ஜாதகர் ஒவ்வொரு பாவத்திலும் சேர்க்கும் கர்மம் அந்த பாவத்தின் 10ம் வீட்டில் சேரும் அவ்வாறு சேர்க்கப்படும் கர்மம் அந்த பாவத்தின் 4ம் வீட்டில் பரிதிபலிக்கும், உதாரணமாக மனித பிறப்பே அவரின் கர்மத்தை பொறுத்ததே அதனால் தான் லக்னத்துக்கு 10ம் வீடான கர்மஸ்தானத்துக்கு 4ம் வீடாக லக்னம் வருகிறது, காலபுருஷ தத்துவத்தின்படி 4ம் வீடு தாய் ஸ்தானம் அதாவது ஆக்கம் ஆகவே தான் ஒவ்வொரு கர்மத்தின் தாக்கமும் அதன் ஆக்க ஸ்தானமான 4ம் வீட்டில் பிரதிபலிக்கும் என்கிறேன், 2ன் கர்மஸ்தானம் 11 அதாவது ஒருவரின் நல் வாக்கு, குடும்பம், இவைகள் அவரின் கர்மஸ்தானமான 11ல் லாபம், மூத்த சகோதரம் இவர்களின் அரவனைப்பை தரும், இதே போல் தான் 3ல் உழைத்தால் 12ல் உறக்கம் தானாக வரும், 12கெட்டால் 3ல் உழைக்க இயலாது, 4ல் ஒருவன் சுகமடைவது அவரின் பிறப்பை பொறுத்தே, 1கெட்டால் 4ல் சுகமில்லை, 5ல் சேர்த்த பூர்வபுண்ணியமே ஒருவரின் வாக்கு, நிலையான வருமானம், குடும்பத்தை அமைத்து கொடுக்கிறது, 5 கெட்டால் 2ல் நிலையான வருமானம் இருக்காது, குடும்பத்தில் குழப்பம் இருக்கும், 6 வலுத்தால் 3ல் உழைப்பு முயற்சி கெடும், 3 வலுத்தால் 6ல் நோய் நொடி இல்லா நிலையை பெறலாம், இவ்வாறு கணிக்கும் போது சுப ஸ்தானம் வலுத்தும், அசுப ஸ்தானம் வலு குறைந்தும் இருக்கும் விதத்தில் கணிக்க வேண்டும், 7ல் களத்திரம், தொழில் கூட்டாளி 7க்கு 10ல் தாய், சொத்து, சுகம் இவைகளை பொறுத்து அமையும், இப்படி மற்ற பாவத்துக்கும் பலனை காணலாம், எப்போதுமே ஒரு பாவத்தின் பலன் அதன் கர்மஸ்தானத்தை பொறுத்தே கிடைக்கும்...

இதே ராகு/கேதுவின் எடுத்துக்கொண்டால் ராகு கேது இருவரின் நட்சத்திரங்கள் காலபுருஷ லக்னத்துக்கு 1,3,5,7,9,11ல் உள்ளது இந்த பாவங்கள் தர்மம், காமம் இரு வகை ராசியில் உள்ளது, அதுவே 2,4,6,8,10,12ம் வீடுகள் அர்த்த மற்றும் மோட்ச வீடுகளாகும், இதை சரியாக புரிந்து கொண்டால் 1ல் பிறந்த மனிதன் பொருளை தேடி இரண்டை அடைந்து, பொருள்வந்த பிறகு 3ல் அந்த பொருளை உழைப்பால்/முயற்சியால் பெருக்கி 4ல் சொத்து, சுகம் சேர்த்து 5ல் பூர்வபுண்ணிய பலனால் 6ல் நோய் நொடி அற்று, 7ல் களத்திரம், நல்ல தொழில் கூட்டாளி அமைந்து, 8ல் வெளிநாடு சென்று 9ல் ஆன்மீகத்தை வளர்த்து, 10ல் கர்ம காரியங்களை சரிவர செய்து, 11ல் லாபம், நல்ல சகோதரம், உறவினர் பெற்று 12ல் நல்ல தூக்கம், கட்டில் சுகம் பெறவே இந்த வழக்கை, ஆனால் எல்லோராலும் இந்த சுற்றை மேலே கூறியவிதத்தில் நேர்மறையாக கழிக்க இயலுவதில்லை, அதன் காரணம் 1ல் கேதுவால் பிறந்து 3ல் ராகுவால் ஆசைபட்டு, 5ல் கேதுவின் கணக்குபடியே 7ல் களத்திரம் அமையும், 7ல் பேராசை/தவறு செய்தால் 9ல் கேது பாக்கியத்தை தரமாட்டார், 9ல் தானம் தர்மம் செய்தால் 11ல் லாபம், நல்ல உறவுகளை பெறலாம், 11ல் காமம், மற்றவரை ஏமாற்றுவது இவ்வாறான செயல்கள் செய்தால் அடுத்த பிறவி அதன் தாக்கத்தில் கேது 1ல் தருவார், இதில் இன்னொரு விதத்தில் ஆராய்ந்தால் ராகு/கேது நட்சத்திரம் நிற்பது  தர்மம்/காமம் ஸ்தானங்களில், ராகு/கேது நட்சத்திரம் இல்லாத வீடுகள் அர்த்த(பொருள்) மற்றும் மோக்ஷம் வீடுகள் ஏன் இவ்வாறு பார்ப்போம் வாருங்கள்...

ஒருவரின் தர்மம் எனும் கர்மம் தான் அவனுக்கு பொருள் பாகியத்தை நல்கும், ஒருவருக்கு பொருள் கிடைத்து விட்டால் அவரின் தேடல் அந்த பொருளை பெருக்குவத்தில் முயற்சியில் செல்லும், அவ்வாறு செல்லும் போது அதனால் கிடைக்கும் பலனை போகம் எனும் காமத்தை அனுபவித்து பின்னர் மோக்ஷத்தை அடைவார், இதனால் தான் ராகு/கேது காமம்/தர்மம் இரண்டில் மட்டும் தங்கள் நட்சத்திரத்தை கொண்டுள்ளனர், எவ்வளவு பெரிய யோகியானாலும் காமத்தை கடந்தே யோகத்தை பெற இயலும், சிலரின் வாழ்க்கை முன் ஜென்மத்தில் காமத்தை அனுபவித்து போகியாக இருந்தாலும் தர்மத்தை கடைபிடித்த காரணத்தால் பிறக்கும் போதே காமத்திடம் சிக்காமல் பொருள் காரகத்தில் சிக்கி கடைசியில் யோக நிலையை அடைவார் ஆகவே வாழ்க்கை, தர்மத்தில் ஆரம்பித்து பொருளை அடைந்து காமத்தை அனுபவித்தே மோக்ஷத்தை பெற இயலும், காமம் என்பது உடல் சுகம் மட்டுமே அல்ல காமம் என்பது ஒரு பற்று அதை அனுபவித்தே யோகத்தை அடைய இயலும், ஆகவே கர்மம் எந்த ஒரு பாவத்திலும் நிலையாக சேமிக்கபடுவதில்லை ஒவ்வொரு பாவத்திலும் சேமிக்கப்பட்ட கர்மம் 12ல் முடிந்து 1ல் பிறக்கிறது அதன் காரகாதிபதி கேது, இதில் சனி இவர்களை மேய்ப்பவர், சனி நின்ற இடத்தின் ராசி வகையின் காரகத்தின் கர்மத்தை தான் ஜாதகர் இப்பிறவியில் அனுபவிக்க இருக்கிறார், கடைசியில் சனியின் மூலத்திரிகோண வீடான கும்பத்தில் அத்தனை கர்மங்களும் சேமிக்கப்பட்டு அது அடுத்த பிறவிக்கு கடத்தப்படுகிறது, ஏனெனில் 10க்கு 2ம் பாவம் 11ம் பாவம் அல்லவா, அந்த 11க்கு 2ம் பாவம் 12 ஆகவே கர்மம் சனியின் மேற்பார்வையில் ராகுவின் காரகத்தில் கேதுவால் ஒழித்துவைக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment