Sunday, 29 November 2020

விளக்கும் வாஸ்து விருத்தியும்

விளக்கும் வாஸ்து விருத்தியும்
==========================

கிழக்கு - இந்திரன் - சூரியன் 
மேற்கு - வருணன் - சனி 
வடக்கு - குபேரன் - புதன் 
தெற்கு - எமன் - செவ்வாய் 

கிழக்கு பகுதியை குறிப்பவன் இந்திரன். அதனை ஆளும் கிரகம் சூரியன். ஆளும் திறனும், நல் தாம்பத்யமும், குலவிருத்தி, கீர்த்தியும் பெற, கிழக்கு திசையை ஒளிமிக்கதாக மாற்ற வேண்டும். ஆகவே கிழக்கு பக்கம் நோக்கி விளக்கேற்ற குலவிருத்தி உண்டாகும்.

வடக்கு பகுதியை குறிப்பவன் குபேரன். அதனை ஆளும் கிரகம் புதன். ஆக வடக்கு திசையை நோக்கி விளக்கேற்ற, வடக்கு திசை ஒளிபெறும், அதனால் சமயோஜித புத்தி, வாத திறமை, செல்வ வளம், பணசுழற்சி ஆகியவை கிட்டும்.

மேற்கு பகுதியை குறிப்பவன் வருணன். அதனை ஆளும் கிரகம் சனி. ஆக மேற்கு திசையை நோக்கி விளக்கேற்ற, மேற்கு திசை ஒளி பெறும், அதனால் சகோதர ஒற்றுமை, கடன் தொல்லை நீங்கும், சுயதொழில் மேம்படும், ஆயுள்விருத்தி உண்டாகும்.

தெற்கு பகுதியை குறிப்பவன் எமன். இதனை ஆளும் கிரகம் செவ்வாய். பொதுவாக எமனுக்குரிய திசை அசுபமாதலால், தெற்கு நோக்கி விளக்கு வைத்தல் தவிர்க்க வேண்டும்.


No comments:

Post a Comment