Saturday 28 November 2020

ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்

ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்

 ⬤இந்த பழத்தில் கலோரி, வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளது.

 ⬤இந்த பழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் உட்பொருள் அதிகமாக உள்ளது.இதை நாம் அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை எதிர்த்து போராடும் சக்தி இவற்றில் அதிகமாக உள்ளது.

⬤ரம்பூட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் பருமனைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

⬤உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ரம்பூட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.

⬤ரம்பூட்டான் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க உதவி செய்கிறது.

⬤இப்பழத்தில் உள்ள இரும்புசத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க செய்கிறது. எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது.

⬤ரம்பூட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக்(Dysentery) குணப்படுத்தும். ரம்பூட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை தடுக்கும்.

⬤இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது.

No comments:

Post a Comment