Thursday, 19 November 2020

பெண்களின்_சினைப்பை #நீர்கட்டி

#பெண்களின்_சினைப்பை
#நீர்கட்டி_என்பது_நோயல்ல 
#குறைபாடு_தான்…❗❗❓❓

🚺➡ சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. 

🔯 பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்❓

ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் ஆனவுடன் தாய்மை அடைவதற்காக 
காத்துக் கொண்டிருப்பார்கள்.

சிலர் விரைவில் கர்ப்பம் ஆகிறார்கள். 
சில பெண்கள் கர்ப்பமாவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் அது அவளின் 
மனநிலையை வெகுவாக பாதிக்கும்.

இதற்கு மிக முக்கியமான காரணம் கருமுட்டை குறைபாடு.

இந்தக் கருமுட்டை வளர்ச்சி அடைய 
நாம் என்ன செய்ய வேண்டும❓ 

⭕ குழந்தைபேறை தடுக்கும்
சினைப்பை நீர்கட்டி (OVRIAN CYST)

👉 குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.

சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.

சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.

🈵 ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.

 சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5வது நாளிலிருந்து 14ஆம் நாள் வரை இச்சுரப்பு அதிகமிருக்கும். 

சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.

🉐 ப்ரோஜெஸ்ட்ரோன்

 விடாய் வெளியான 14வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.

🚺 #சினைப்பை_நீர்கட்டி_அறிகுறிகள்❓

* மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, 

* மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் 

* சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். 

* சினைப்பைக் கட்டிகள் இருந்தால், அதன் அறிகுறிகளுள் முதன்மையாக தென்படுபவை தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. அதிலும் மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.

* ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.

* முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே. ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுகிறது.

* குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அப்போது உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில் கருப்பைக் கட்டிகள் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.

* ஹார்மோன்கள் தான் மனநிலையை வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.

* திடீரென்று கருப்பு நிறத்தில் சருமம் உள்ளதா? அப்படியெனில் கருப்பை கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம். அதிலும் கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.

* பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

◀ மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. 

இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. 
சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். 

👉👉  சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள் இருந்தால் அவை…

⬅ நீரிழிவு, 

⬅ இதய நோய், 

⬅ உயர் கொலஸ்ட்ரால், 

⬅ இரத்த அழுத்தம் 

போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அதன் அறிகுறிகளை கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற்றால், ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருக்கலாம்.

💢 என்ன செய்தால் நாம் விரைவில் 
கர்ப்பம் தரிக்கலாம்❓

மாதவிடாயின் முதல் நாளில் 
ஹார்மோன்கள் புதிய கரு 
முட்டைகளின் வளர்ச்சி 
உண்டாக்குகிறது. கருமுட்டை வளர்ச்சி அடைய ஈஸ்ட்ரோஜன் என்னும் 
ஹார்மோன் வெளிப்படும். கருமுட்டை மாதவிடாயின்இரண்டாம் நாளிலிருந்துஆறாம் நாள் அதற்குள் உருவாகிறது. 
பின்பு ஆறாம் நாளில் இருந்து 13 ஆம் நாள் வரை அதன் வளர்ச்சி 
ஆரம்பமாகிறது.

பதின்மூன்றாம் நாளிலிருந்து 18ம் 
நாட்களுக்குள் கரு முட்டை 
வெளிப்படுகிறது.

கருமுட்டை நன்றாக வளர ஒமேகா-3 புட் தேவைப்படுகிறது. இந்த ஒமேகா-3 
இருக்கும் உணவுப் பொருட்கள் பாதாம் பருப்பு, வால்நட் மற்றும் பிஷ்.

பல வகைகளில் மாதுளைப்பழம் 
மிகவும் முக்கியம் இதை தினமும் 
எடுத்துக் கொள்வதன் மூலம் 
கர்ப்பப்பையை பலப்படுத்தலாம்.

அடுத்த அத்திப்பழம் சாப்பிடுவதன் 
மூலம் நம் உடலில் ரத்தம் அதிகமாக 
சுரக்கும்.

அடுத்து நாட்டுக்கோழி, முட்டை, 
பசும்பால், கீரை வகைகளை தொடர்ந்து கொள்வதன் மூலம் ஹார்மோன்களில் அளவை சீர் செய்யலாம்.

வாழைத்தண்டு மிகவும் முக்கியமான 
பங்கு வகிக்கிறது. இதைத்தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் யூட்ரஸ் 
பலப்படுத்தலாம்.

முளைக்கட்டிய பச்சைபயிறு அல்லது வேக வைத்த பச்சைப்பயிறு. 
முளைக்கட்டிய அல்லது வேக வைத்த கொண்டைக்கடலை இதைப் பீரியட்ஸ் ஆன இரண்டாம் நாளிலிருந்து 19ஆம் நாள் வரை தொடர்ந்து எடுத்துக் 
கொள்ளலாம்.

அதே சமயம் பெண்களின் 
ஹார்மோன்களை அதிகரிக்கச் சோயா எடுத்துக்கொள்ளலாம். உடலின் வெப்ப சூட்டைத் தணிக்க இளநீர் எடுத்துக் கொள்ளலாம்.மேற்கூறிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் கருவளம் மேம்படும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும். 

#கருமுட்டை_வளர்ச்சியை_அதிகரிக்கும்  #உணவுகள்❓

⭕ கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்கும் தோல் நீக்காத உளுந்து வடை

👉 தேவையான பொருள்கள்❓

தோல் நீக்காத கருப்பு உளுந்து – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

பச்சை மிளகாய் – 3

மிளகு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

அரிசி – சிறிதளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

⏩ செய்முறை❓

உளுந்து மற்றும் அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து உளுந்தை தோல் நீக்காமல் அரைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து நல்லெண்ணையில் வடையாக தட்டி எடுக்கவும்.

⭐ பயன்கள்

இது கருமுட்டை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்புகளும், நரம்புகளும் உறுதியாக இருக்க உதவுகிறது.

உளுந்து தோலில் கால்சியமும், பாஸ்பரசும் சம அளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

சிறு நீர் சார்ந்த நோய்களை நீக்குகிறது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படுகிறது.

🈺 #அவல்_தோசை

அவல் மற்றும் 1 கப் தயிரை மிக்ஸ் செய்து ஊற விடவும். 1 கப் பச்சரிசி மற்றும் 1 கப் புழுங்கல் அரிசியை தனியாக ஊற விடவும். இதனுடன் வேக வைத்த ஒரு ஸ்பூன் சாதத்தை சேர்த்து அரைக்கவும். அவல் மிக்சையும் தனியாக அரைத்து அனைத்தையும் கலந்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

🈯 #ரெசிபி

⏩ ஓட்ஸ் வெஜ் அடை

கேரட் துருவியது அரை கப், கோஸ் அரை கப் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைக்கவும். ஒரு கப் ஓட்சில் தோசைப் பதத்துக்கு தேவை யான தண்ணீர் சேர்க்கவும். அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், அரை கப் கீரை மற்றும் உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அடையாகவும் சுடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

🈳 #கருவேப்பிலைக்_குழம்பு

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், 5 வறமிளகாய், 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 டீஸ்பூன் மிளகு, ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கவும். 50 கிராம் புளியை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி புளிக்கரைசல் மற்றும் தேவை யான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது.

♈ #டயட்

பரம்பரைக் காரணங்கள், தாமத மான திருமணம், அதிக எடை, தைராய்டு பிரச்னை, ஆண், பெண் வயது வித்தியாசம் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உருவாகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி இன்றி இருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் புட், கொழுப்பு உணவுகள் அதிகம் எடுப்பதைத் தவிர்க் கவும். முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகள், நல்ல கொழுப்பு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து, கால்சியம், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்கவும். எண்ணெய்யின் பயன்பாட்டை குறைக்கவும், சோயா பருப்பு, கீரை சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டு ஈரல் மற்றும் மீன் ஆகியவற்றை எண்ணெய்யில் பொரிக்காமல் குழம்பில் போட்டு சாப்பிடலாம். உப்பு அதிகம் உள்ள உணவு, ரீபைண்டு செய்யப்பட்ட மைதா, சேமியா, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும்.

 *  ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் பெண்களின் குறைபாடு நீங்கும்.

*  அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.

*  அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும்.

*  அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத் தன்மை நீங்கும்.

*  ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.

*  ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.

*  இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.

🔴 #கருமுட்டை_வளர்ச்சிக்கு_உணவுகள்❓

⭐ பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது.

துவரம் பருப்பு,

பாசிப் பருப்பு,

பாசிப் பயறு,

கொண்டைக் கடலை,

சிவப்பு காராமணி,

உளுந்து, 

அனைத்து வகை கீரைகள்,

வெள்ளாட்டு ஈரல்,

பூசணிகாய்,

வாழைப்பழம்,

உலர்ந்த பழங்கள்,

முந்திரி பருப்பு,

பாதம் பருப்பு,

வால்நட்,

பிஸ்தா,

அனைத்துவகையான மீன்கள்,
மத்தி மீன்

பால்,தயிர்,

வெண்ணை,

உலர் அத்திபழம்,

கடல் சிப்பி,

ஆராஞ்சு,

வெள்ளை காரமணி,

எள்,

வெள்ளாட்டு இறைச்சி,

சிவப்பு அரிசி,

உலர் திராட்சை,

பூசணி விதை,

பூண்டு,

சுரைக்காய்,

செவ்வாழை பழம்,

ஒமேகா 3,6,9,

முட்டைக்கோஸ்

ப்ராக்கோலி

உருளைக்கிழங்கு

மாதுளை

அன்னாசிப்பழம்

முட்டை

மஞ்சள்

#பெண்களுக்கு_குழந்தைபேறை #தடுக்கும்_35_காரணங்கள்…❗❓

1,கருக்குழாய் அடைப்பு
( Fallopian Tube Block) 

2, கருப்பைக் இழை நார் தசை கட்டி
 ( FIBROID Uterus )

3, கருப்பைக் கட்டி & சினைக் குழாய் கட்டி. ( Ovarian Cyst )

4, கருப்பை வளர்ச்சியின்மை.

5,பருத்த (தடிம்மம்மான அல்லது பெரிய ) கருப்பை

6,குறுக்கீடான மாதவிடாய் போக்கு

7,மிகை [அதிகமாக] மாதவிடாய்ப் போக்கு.

8,சூதக சூலை.

9,கருப்பை வாயு.

10, கருப்பையில் தங்கி இருக்கும் கிருமிகள், பூச்சீகள் ஒரு காரணம். 

11, சினைபை நீர்கட்டிகள்.(PCOD)

12, சினை குழாய் அடைப்பு.

13, மாதவிடாய் தாமதமாக வருவது.
(2 மாதம் மற்றும் 3மாததுக்கு ஒரு தடவை மாதவிடாய் விட்டு விட்டு வருவது)

14, மாதவிடாய் சுழர்ச்சி சரியில்லாமை.

15, மலட்டு ரோகம்
      3 - வகை
      1, காக      மலடு
      2, கதலி   மலடு
      3, கன்ம   மலடு 

16, இரத்த சோகை

17, அடிக்கடி கருச்சிதைவு.

18, அதிகமாக வெள்ளைபடுதல்.

19, ஹேர்மோன் குறைபாடு.

20,  தைராயிடு, அட்ரீனலின் சுரப்பிகளின் கோளாறுகள் மற்றும்
குறைபாடுகள்.

21,கரு முட்டை சரியான வளர்ச்சியின்மை.

22, கரு முட்டை வெடிப்பதில் குறைபாடு.

23, பெண்ருப்பில் அக்கி மற்றும் அரிப்பு,சொரி போற்ற தோல் நோய்கள்.

24, சில பெண்களுக்கு 30 வயது முதல்    40 வயதுகுள் மாதவிடாய் நின்று போவது.

25, மாதம் ஒரு முறை சினைமுட்டை வெளியாகாமல் போவது. 

26, ப்ரோஜிஸ்டெரோன் ஹார்மோன் சுரக்காமல் போவது.

27, மூளை,   பிட்யூட்டரிக்கு தேவையான கோனாடோட்ரேபின் என்ற ஊக்குவிக்கும் ஹார்மோனை அளிக்க முடியாமல் போனால், முட்டை உற்பத்தியாகாது.

28, கர்ப்பப்பையின் வாய் பாகம் தொற்று நோயால் பாதிக்கப்படுவது அடைத்துக் கொள்வது. 

29, நீரிழிவு நோய், 

30, அதிக உடல் பருமன்.

31, சாதாரணமாக பெண்களின் கருப்பையில் இருக்கும் சளி கெட்டியாகவே இருந்துவிடும். விந்துவால் உள்ளே பிரவேசிக்க முடியாது. 

32, தொற்றுநோய்க்காக கொடுக்கப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகள் விந்துவையும் நாசம் செய்து விடலாம்.

33, பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புகளின், பிறவிக்கோளாறுகள். 

34, கர்ப்பப்பை இடம் மாறுவது. 

35, பரம்பரை காரணங்கள்.

இப்படி பெண்களுக்கு உள்ள அனைத்து பிரச்சைனைகளும். சிறப்பான வைத்தியம்  மற்றும் முழுமையான தீர்வு.

No comments:

Post a Comment