Wednesday, 11 November 2020

திருநீற்றுப்பச்சையின் மருத்துவகுணங்கள்.:

திருநீற்றுப்பச்சையின் மருத்துவகுணங்கள்.:

திருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா. இவை சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

திருநீற்றுப்பச்சை செடியில் ஊதா கலந்த வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது.

படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது. சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. 

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற  உணர்வு ஏற்படும்.

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த  வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு  தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். 

எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.

மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

No comments:

Post a Comment