Monday 16 November 2020

கடக லக்னம்-பொது பலன்

கடக லக்னம்-பொது பலன்.
தலைமைப் பண்பும்,வழி நடத்திச் செல்லும் திறனும் உங்களிடத்தில் பிறவியிலேயே இயல்பாகவே அமைந்திருக்கும்.அது போல முன் கோபமும்.. உங்கள் லக்னாதிபதி சந்திரன்.அவர் இரண்டரை நாட்களில் ஒரு ராசியைக் கடந்து செல்வதால், எல்லா செயல்களையும் அதி விரைவாக  செய்யவே விரும்புவீர்கள்.இந்த லக்ன காரர் நடந்தால்,பக்கத்தில் செல்பவர் ஓடனும் (இவரது உடல் நிலை நன்றாக இருக்கும் போது). நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்கிற பழமொழிக்கு ஏற்ப ..வெவ்வேறு வேலைகளுக்கு /துறைகளுக்கு மாறிக் கொண்டே இருப்பார்கள் சிலர். பார்வையாலேயே ஆளை எடைபோடும் சாமர்த்தியம் இருக்கும். சந்திரனைப் போலவே,இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வசீகரமாக, ஈர்ப்பு சக்தியோடு இருப்பார்கள். எத்தனையோ பேர் இருந்தாலும் உங்களின் இருப்பு மட்டும் தனித்து  தெரியுமாறு நடந்து கொள்ளும் திறமை..ஆற்றல் இருக்கும். உங்களை விட அதிகாரத்தில் உள்ளவர்கள்…உங்கள் அறிவை பயன்படுத்தி,உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.அவர்களை… சந்தர்ப்பம் பார்த்து சறுக்க வைப்பீர்கள். பிறகு, அந்தப் பதவியில் சென்று அமரும் அளவிற்கு ராஜதந்திரம்  இருக்கும். ஆனால், அதற்கு… #மூன்று கிரகங்கள் முக்கியமானவை. 1.சந்திரன். 2.செவ்வாய். 3.குரு.
இதில் சந்திரன்  இந்த லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். சூரியன், சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கு  ராசி மண்டலத்தில் ஒரே வீடு மட்டும் சொந்தமாகும்.எனவே, தன்னுடைய சொந்த லக்னமான, சுய வீட்டிற்கு நல்லதைச் செய்வார். ஆனால், சந்திரன் பாவ கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ, தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும். தாயார் அடிக்கடி நோய்வாய்ப்படக் கூடும். சந்திரன் தேய்வது, வளர்வது, மறைவது போல் அடிக்கடி  mood மாறிக் கொண்டே இருக்கும்.நிறைய ஞாபகசக்தி,கேள்வி ஞானம், சுய சிந்தனை இருப்பதால்  ‘‘அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ’’ என்று உங்களை வழிகாட்டியாக கொள்வார்கள்.
உங்களுக்கு மிக முக்கியமான கிரகம் செவ்வாய் ஆகும். இவர் உங்கள் ஜாதகத்தில் அதிமுக்கியமான இடமான பூர்வ புண்ணிய,புத்திர ஸ்தானத்திற்கும், கர்ம /தொழில் ஸ்தானமான பத்தாமிடத்திற்கும் அதிபதியாக வருவதால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார். அள்ள அள்ளக் குறையாத செல்வத்தையும் தருவார். யோகாதிபதியாக வரும் செவ்வாயே பூமிகாரகனாகவும் வருவதால், இந்த லக்னத்தில் பிறந்தோருக்கு எங்கேனும் ஓரிடத்திலாவது வீடு/மனை இருக்கும்.
செவ்வாய் நன்றாக அமர்ந்திருக்கும், கடக லக்ன ஜாதகருக்கு அழகும் அறிவும் துணிவும் கொண்ட வாரிசு(களைக்) கொடுப்பார்..ஜாதகத்தில் செவ்வாயோடு, புதன் அல்லது சனி சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ தோஷம் ஏற்படும்.மனதில் எப்போதுமே எதிர்மறை சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும். இதுவா... அதுவா... என்கிற குழப்பமும்,தெளிவின்மையும் இருக்கும்.
மூன்றாவதாக குரு உங்களுக்கு  யோகங்களை அளிப்பவர்.செவ்வாய்க்கு அடுத்தபடியாக குரு உங்களுக்கு நன்மைகளை அளிப்பவர்.ஆறாம் இடமாகிய சத்ரு ஸ்தானத்திற்கும், ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதி குரு. பொதுவாக தங்க நகைகள்,சரளமான பணவரவு, கல்வி அறிவு என்று முக்கியமான விஷயங்களை குருதான் அருள்கிறார். அவர் ஆறாம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்துதான் நன்மைகளை செய்வார்.குரு பாக்கியாதிபதியாக வருவதால்,அவர் நல்ல இடத்தில் அமர்ந்தால் நிச்சயம் தந்தையை மிஞ்சி சாதிக்க/சம்பாதிக்க வைப்பார். ஜாதகத்தில் கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் குரு அமர்ந்திருந்தாலோ அல்லது குரு, சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ, நிறைவான வாழ்க்கை அமையும். அமைச்சராக/ பேராசிரியராக / பெரியா மேலாளராக வருவார்கள்.குரு கெடாமல் இருந்தால்… உங்களுக்கு சமூகத்தில் எதாவது ஒரு துறையில் அந்தஸ்தை பெற்றுத் தருவார்.

No comments:

Post a Comment