Tuesday, 3 November 2020

சுருள் பாசியின் அற்புத மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.:

சுருள் பாசியின் அற்புத மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.:

தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அதிக சத்துள்ள உணவுப்பொருள் சுபைருலீனா மட்டுமே. பசும்பாலை விட 4  மடங்கு சத்து நிறைந்தது. இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன. உடலைச் சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

ஆய்வாளர்கள் விண்வெளிப் பயணத்தின்போது இதையே உணவாகப் பயன்படுத்துகின்றனர்.  சுபைருலீனாவில் 55-65% உள்ள புரதம் உடலில் ஜீரண சக்தியை  அதிகரிக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கடின உழைப்பாளிகள், மூத்தோர்கள் என அனைவருக்கும் ஏற்ற இணை  உணவாகும்.

தாது உப்புக்களாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. கை, கால், மூட்டுவலியை முற்றிலும் நீக்குகிறது. வைட்டமின் ஏ, கண்  பார்வையை சீராக இருக்கச் செய்கிறது. இதிலுள்ள ‘பி’ வைட்டமின்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையம் சீராக செயல்பட்டு தேவையான  அளவு இன்சுலின் சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

15 மடங்கு அதிகம் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதிலுள்ள துத்த  நாகச்சத்து முடி உதிர்தலை தடுக்கிறது.

No comments:

Post a Comment