Saturday, 7 November 2020

ராசி பலன் லக்னத்தை வைத்து சொல்வதா,ராசியை வைத்து சொல்வதா?

ராசி பலன் லக்னத்தை வைத்து சொல்வதா,ராசியை வைத்து சொல்வதா? 

அதற்குள் என்ன வித்தியாசங்கள்? 

லக்கினம் என்பது நீங்கள் பிறந்த போது பிறந்த இடத்தில், அந்த நேரத்தில் சூரிய உதயத்தில் இருந்து எங்குள்ளது என்பதை வைத்து லக்னம் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது சூரியனை ☀️ மையப்படுத்தி அது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அது எந்த மாதம் என்பதை பொறுத்து அந்த கணக்கிடல் தொடரும். இது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் அது ஒவ்வொரு ராசியிலும் இரண்டு மணி நேரத்திற்கு குறிப்பிட்ட ஒரு லக்னம் இருக்கும். 

உதாரணமாக சித்திரை மாசத்தில் நீங்கள் பிறந்தால் சூரியன் மேஷத்தில் இருக்கும். அன்று காலை சூரிய உதயம் 6 மணிக்கு இருந்தது என்றால் குழந்தை 9:33 am க்கு பிறந்தது என்றால் 6-8 மேஷ லக்னம், 8-10 ரிஷப லக்னம். 9:33 am என்பது ரிஷப லக்னத்தில் விழும். 

ஆனால் இந்த இரண்டு மணி நேரம் என்பது மாதத்தின் முதல் நாளுக்கு மட்டுமே, அடுத்த நாள் 4 நிமிடம் குறைந்த 116 நிமிடங்களில் ஒரு லக்னம் மாறும். அதுவே மாதத்தின் 15 ஆம் நாள் வெறும் 60 நிமிடம் மட்டுமே ஒரு லக்னம் இருக்கும். அது முடிந்தபின் மீண்டும் அது அடுத்த ராசிக்கு இரண்டாம் சுற்று வரும். இது கொஞ்சம் கணக்கிடுவது கஷ்டம்.

இதே குழந்தை புரட்டாசி மாதத்தில் முதல் நாள் 9:33 am க்கு பிறந்தால் சூரியன் அந்த மாதத்தில் கன்னியில் இருக்கும். அதனால் லக்ன கணக்கீடு கன்னியில் இருந்து தொடங்கும். 

அப்போதை சூரிய உதயம் 6:45 am என்றால் 6:45-8:45 கன்னி லக்னம் 8:45-10:45 துலா லக்கினம். 9:33 am என்பது இரண்டாவது லக்னத்தில் விழுகிறது. எனவே ஜாதகரின் லக்னம் துலா லக்னமாகும். 

அதாவது லக்னம் என்பது நேரம், ராசி, பாகையை பொறுத்தது..

சரி, அப்போ ராசி என்ன? 

பிறந்த நேரத்தில் சந்திரன் எந்த ராசி கட்சத்தில் அமைகிறதோ அந்த கட்டம்தான் ராசி கட்டம். உதாரணமாக பிறந்த ஜாதகத்தில் ரிஷபத்தில் சந்திரன் இருந்தால் ரிஷப ராசி. விருச்சிகத்தில் இருந்தால் விருச்சிக ராசி. 

ராசி பலன்களுக்கு என்பது தற்போதைய நிலையில் ஒவ்வொரு கிரகமும் எங்கே இருக்கிறது என்பதை வைத்து பார்ப்பதுதான். தற்போதைய கிரக இருப்புகளை சொல்வது கோச்சாரம் என்று சொல்வர்.

ஏன், ராசியை (சந்திரனை வைத்து பார்க்கிறோம்) ராசிபலன்களை பார்க்கிறோம்?

சந்திரன் என்பது மனோகாரகன். அதாவது நமது மன நிலையை உணர்த்துபவர். இப்போதைய கிரக இருப்புகள், நமது மனமாகிய சந்திரன் இருப்புக்கு ஏற்ப அது மாறுதல், அல்லது பாதகங்களை நமக்கு செய்கிறது என்பதால், ராசியாகிய சந்திரனை வைத்து பார்க்கிறோம். 

சரி, அப்போ ராசி மட்டுமே போதுமா?

இல்லை.

லக்னம் என்பது உங்கள் வாகனம். உங்கள் ராசி என்பது ட்ரைவர். கோச்சாரம் என்பது நீங்கள் செல்லும் பாதையும், சூழ்நிலையும். 

அப்படியெனில் மூன்றும் இணைத்து பார்க்கின்ற போதுதான் முழு பலன்களை எடுக்க முடியும். அதாவது ரிஷப ராசிக்கு கோச்சாரப்படி நல்ல ரோடு, கால நிலைகள் அமைகிறது. ஆனால் ஜாதகர் வைத்திருப்பது ஒரு பழைய அம்பாஸிடர் கார். ஓட்டுபவருக்கு வயசு 70 என்றால், அதற்கு ஏற்பவே பயணம் அமையும் என்பது போலத்தான்..

இன்னும் கொஞ்சம் விரிவாக சொன்னால் பில்ட் செய்யப்பட்ட், அதாவது பிறந்த லக்னத்தின் அடிப்படையில் , திசாபுத்தி எனும் ட்ரைவரின் வயசுக்கு ஏற்ப, கோச்சாரமாகிய ரோட்டில் பயணிப்பதே பலன் சொல்லுதல்.


No comments:

Post a Comment