Thursday, 19 November 2020

இஷ்டதேவதை

இஷ்டதேவதை.
...................




யார்? உங்களின் ப்ரார்த்தனா இஷ்ட உபாஸனா தேவதா மூர்த்தி?

பலருக்கும், பலதரத்தில் அபிப்ராயம் உண்டு.

ஒவ்வொருவர் ஜாதகம் அனுசரித்து ப்ரார்த்தனை தேவன்மார்கள், தேவிமார்கள் மாறி வரும் அது தெரிந்து தான் ப்ரார்த்திக்க வேண்டும்,

அந்த தேவதா, அல்லது தேவன், உங்களுடைய ப்ரார்த்தனா சக்திக்கேற்றாற்போல், உங்களை ரக்ஷிக்கும் ரக்ஷகர்த்தா போல் மாறி விடுவர்,

நித்யமும்  உபாஸனா மூர்த்தியை, உபாஸித்து நித்யகர்மங்கள் செய்தால், காரியசித்திகள், உண்டாகும், 

இங்கே சில அபிப்பிராய பேதங்கள் தோன்றும்.! 

சில ஜோதிஷன்மார்கள் சொல்கிறார்கள், ஒன்பதாம் பாவாதிபன் தான், உபாஸனா மூர்த்தி, தேவதா, வாக வருவார் என,

சமீபத்தில் ப்ரஸ்ன மார்க்கம், என்கின்ற க்ரந்தம் நன்றாக ஆழ்ந்து படித்தபோது அதில் சொல்லப்படுவது என்றால், ஒன்பதாம்பாவகக்ஷேத்ராதிபன், அவரவர்கள் பூர்வஜென்ம, உபாஸனா தேவன், தேவிமார்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்கள் 

லக்னப்பாவகக்ஷேத்ரம் லக்னக்ஸேனன், ஐந்தாம்பாவகக்ஷேத்ராதிபன், ஒன்பதாம்பாவகக்ஷேத்ராதிபன், ஆகிய மூன்றில் யார் பலவானோ அவர்தான்,
உபாஸனா தேவதா என்று P.V. இராமன் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது,

மாயா,
இஷ்டதேவதா,
தேவபக்தி,
மந்திரம்,
யந்திரம்,
புண்யகர்ம்மங்கள்,
போன்றவை ஐந்தாம்பாவகக்ஷேத்ரம் உட்கொள்கின்றது,

பஞ்சமக்ஷேத்ராதிபன், பஞ்சமக்ஷேத்ரத்தில் ஸ்திதி கொள்ளும் கிரகம், இந்த பஞ்சமக்ஷேத்ராதிபனை திருஷ்டி செய்யும் கிரகம்,
அல்லது பஞ்சமக்ஷேத்ரத்தை திருஷ்டி செய்யும் கிரகம் ஆகியவற்றில், ஏதாவது, ஒன்றுதான்,

இவைகளில் யார் பலவானோ அவர்தான், உபாஸனா மூர்த்தி,

மேலும் லக்னக்ஷேத்ரத்திலிருந்தும், இராசி சந்திர க்ஷேத்ரத்திலிருந்தும், பஞ்சம ஸ்தானம் கணக்கில் கொள்ள. வேண்டும், 

மேலும் நித்யமும்  நன்றாக உபாஸித்து, கொண்டிருக்கும் மனுஷ்யன்மார்களுக்கு, அவர்கள் உபாஸிக்கும் தேவதை, தேவன், அவர்களுடைய உபாஸனா மூர்த்தி அல்லாவிட்டாலும் கூட, அவர்கள் எந்த தேவனை உபாஸித்தாலும், ஒரு காலகட்டத்தில், அவர்கள் உண்மையான, உபாஸனா மூர்த்தி, அவர்கள் ஸரீரத்தில் வந்து சேரும், மனசில் தானாகவே தோன்றும், அனுபவத்திலும் காணலாம்.

அந்த உண்மையான உபாஸனா தேவன், தேவி நிச்சயமாக, லக்னக்ஷேத்ரம்,
பஞ்சமக்ஷேத்ரம்,
ஒன்பதாம்பாவகக்ஷேத்ரம்,
ஆகியவற்றின் க்ஷேத்ராதிபனாக தான் இருக்க முடியும்,

No comments:

Post a Comment