நன்றாக சமைக்க தெரிந்த ஜாதக அமைப்பு.
லக்ன ராசிக்கு இரண்டாம் இடமும் கால புருஷனுக்கு இரண்டாம் இடமான ரிஷப ராசியும் வாயை குறிக்கும்.
லக்ன ராசிகளின் மூன்றாம் இடம் மற்றும் மிதுன ராசி தொண்டை மற்றும் கைகளை குறிக்கும்.
லக்ன ராசியின் ஐந்தாம் இடம் திறமையை குறிக்கும். பத்தாம் இடம் கர்ம ஸ்தானமும் ஆகும்.
புதன் கலைகளுக்கு அதிபதியும், சந்திரன் உணவிற்கும், சுக்கிரன் சுவை எனும் உணர்ச்சிக்கும் காரகம் வகிக்கும்.
பொதுவாக பெண் சமைப்பார்கள் இருந்தாலும் சமையலில் பெயர் போனவராக நள மகா ராஜா இருப்பதாலே சிறந்த சமையலை நள பாகம் என்று சொல்வார்கள். யார் நன்றாக சுவையான உணவு தயாரிப்பார் என்பதை ஜாதக ரீதியாக அறிவோமானால்,
லக்ன ராசிக்கு மூன்றாம் அதிபதி ஐந்தாம் அதிபதிகள் சேர்க்கை பெற்றோ சமசப்தமாக பார்த்துக் கொண்டாலோ சார தொடர்பு பெற்று பத்தில் அல்லது திரிகோணத்தில் அமருமானால் ஜாதகர் சிறப்பாக சமைப்பார்.
சுக்கிரன் புதன் சந்திரன் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர தொடர்பு பெற்று 3 5 10ம் இடத்தின் தொடர்பை பெற்றால் மிகச் சிறப்பாக சமைப்பார்.
இதுவே உணவு சார்ந்த தொழில் செய்ய,
இரண்டாம் இடத்ததிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து கேந்திர கோணங்களில் நின்று அக்னி கிரகமான சூரியன் செவ்வாய் தொடர்பும் உணவு காரகனான சந்திரனும் தொடர்பு பெற்றால் உணவு சார்ந்த தொழில் செய்வார்.
எத்தகைய உணவை ஜாதகர் விரும்பி உண்பார் என்பதை இரண்டாம் இடம் அதன் அதிபதி கொண்டு நிர்ணயிக்கலாம். குறிப்பாக இரண்டாம் அதிபதி நின்ற சார நாதனும் சுக்கிரன் பெற்ற சாரநாதனும் சுவையை நிர்ணயிப்பார்கள்.
சூரியன் 2ல் - சூடான உணவு, உப்பு சுவை உணவு
சந்திரன் 2ல் - திரவ ஆகாரம், சாதம், பால் உணவுகள், இனிப்பு பானங்கள். உற்சாக பானம்.
செவ்வாய் 2ல் - சூடான காரமான உணவுகள்
புதன் 2ல் - காய்கறிகள், பச்சை தானியங்கள், உவர்ப்பு சுவை.
குரு 2ல் - இனிப்புப் பண்டங்கள், சைவ பிரியர், கொழுப்பு உணவுகள்.
சுக்கிரன் 2ல் - புளிப்பு சுவையான உணவுகள், பழங்கள் மற்றும் வெண்ணிற உணவுகள்.
சனி 2ல் - பாரம்பரிய உணவுகள் (இட்டிலி தோசை, உப்புமா), குளிர்ச்சிகரமான உணவு, கைப்பு (ஊர்காய் பிரியர்)
ராகு 2ல் - அசைவ உணவு பிரியர், கைப்பு சுவை
கேது 2ல் - உண்வதில் விருப்பமின்மை, காரமான உணவு.
தனிபட்ட ஜாதக பலன் அறிய மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்ளலாம். தங்களால் இயன்ற தட்சிணையை தரலாம்.
No comments:
Post a Comment