Sunday, 15 November 2020

சிறுநீர்_பாதை #நோய்_தொற்று

#சிறுநீர்_பாதை #நோய்_தொற்று

அநேக நேரங்களில் உணவு குழாயில் ஏற்படும் கிருமி சிறுநீர் பாதை துவாரத்தின் வழியே உள் செல்வதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது.

ஆரோக்கியம் உடைய மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் நச்சுத் தன்மை இல்லாது தூய்மையாய் இருக்கும். இதன் பொருள் அந்நீரில் உப்புகள், கழிவுப் பொருட்கள் இருக்கும். ஆனால் அதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய் தொற்று இருக்காது.

இச்சிறுநீரில் நோய் பாதிப்பு ஏற்படும் பொழுது அதனை சிறுநீர் பாதை நோய் தொற்று என்கிறோம். அநேக நேரங்களில் உணவு குழாயில் ஏற்படும் கிருமி சிறுநீர் பாதை துவாரத்தின் வழியே உள் செல்வதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா ஈகோலி என்பதிலிருந்துதான் அநேக கிருமிகள் உண்டாகின்றன. இந்த ஈ கோலி குடலில் இருக்கக் கூடியது.

 
பொதுவில் இந்த தொற்று சிறுநீர் வெளி செல்லும் பாதையில் ஆரம்பிக்கும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கா விட்டால் குழாய் வழியே பை வரை பரவும். முறையான சிகிச்சை பெறாவிட்டால் கிருமி சிறு நீரகம் வரை பரவி விடும்.

பொதுவில் சிறு நீர் பையிலிருந்து கீழ் நோக்கி சென்றே வெளியேறும். இது கிருமிகளையும் வெளியேறச் செய்யும் இயற்கை அமைப்பு. ஆண்களுக்கு ‘பாரஸ்டேட்’ எனப்படும் சுரப்பி சில திரவங்களை சுரப்பதின் மூலம் கிருமிகள் பெருகுவதை தடுக்கும். இருப்பினும் இவைகளை மீறியே கிருமி தாக்குதல் ஏற்படுகின்றது.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படும்.சிறுநீர் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் (உம்.கல்) அந்த அடைப்பு நோய் தொற்றுக்கு காரணமாகின்றது. சில நேரங்களில் ஆணுக்கு ‘ப்ராஸ்டேட்’ வீக்கமடையும் பொழுது சிறுநீர் வெளியேற்றம் தேங்குகிறது. பெண்களுக்கு சிறுநீர் குழாயின் நீளம் குறைவாய் இருப்பதாலும் கிருமி பாதிப்பு எளிதாய் ஏற்படுகின்றது. கர்ப்பிணி பெண்களில் வெகு சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அதனால் தான் சிறுநீர் பரிசோதனை அவ்வப்போது செய்யப்படுகின்றது.

சிறுநீர் நோய் தொற்று அறிகுறிகள் :

* அடிக்கடி சிறுநீர் செல்ல தோன்றும்.
* ஆனால் சிறுநீர் சிறிதே வெளி செல்லும்.
* சிறுநீர் துவாரம் எரியும்.
* சிலர் வெகுவாய் சோர்ந்து இருப்பர்.
* சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.
* சிறுநீரில் ரத்தம் கலந்து இருக்கலாம்.
* ஜுரம் இருக்கலாம்.

சிறுநீர் பரிசோதனையின் மூலம் கிருமி பாதிப்பினை அறிய முடியும். பாதிப்பினை பொறுத்து மருந்துகள், ஊசி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.
சிறுநீர் குழாய் நோய் தொற்று சில நேரங்கள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கலாம். சிறு நீரக பாதிப்பினை கூட ஏற்படுத்தலாம். பல கிருமிகள் ‘ஆன்டிபயாடிக்’ மருந்திற்கு நிவர்த்தி ஆகாத எதிர்ப்பினைத் தரலாம்.

* கிருமிகள் மட்டுமே காரணம் தானா? மற்ற மருத்துவ காரணங்கள் இருக்கின்றதா? என மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் குழாய் நோய் தொற்று ஏற்பட்டால் மருந்துகள் நிவர்த்தி அளிப்பது கடினமாக இருக்கலாம். மேலும் நீரிழிவு பாதிப்பு உடைய ஆண் பெண் இருவருக்கும் இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு கூடுதலாக இருக்க வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
* அதிக எடையுடைய ஆணுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது.

* சிறுநீர் குழாய் நோய் தொற்று சிறுநீரகத்தினை பாதிக்கும் ஆபத்து உள்ளது என்று பார்த்தோம். அரிதாக இருந்தாலும் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும் பொழுது கண்பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

* சிறு குழந்தைகளுக்கு எளிதாய் இப்பாதிப்பு வரலாம்.
* கொழுப்பு இல்லாத தயிர், மோர் எடுத்துக் கொள்வது நல்லது.

சிறுநீர் குழாய் நோய் தொற்று என்றால் என்ன?

சிறுநீர் குழாயில் கிருமிகளால் தாக்குதல் ஏற்படுவதுதான் நோய் தொற்று. மைக்ராஸ் கோப்பில் பார்ப்பதற்குக் கூட மிக மிக சிறிதான-பூஞ்ஜை, வைரஸ் பாக்டீரியா கிருமிகளால் இத்தகு தாக்குதல் ஏற்படுகின்றது. பாக்டீரியா கிருமிகள் தாக்குதல் அதிகமாகக் காணப்படுபவை. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்குதல் ஏற்படுத்துபவை. சிறுநீர் குழாயின் வெளித்துவாரம் முதல் குழாய் வழியாக சிறுநீரகம் வரை சென்று பாதிப்பு ஏற்படலாம்.

அதிக நீர், உடல் கழிவுப் பொருட்கள் இதனை வெளியேற்றுவதே இதன் வேலை. சிறுநீரகங்கள் ரத்தத்தினை சுத்தம் செய்து நீரினையும், கழிவினையும் வெளியேற்றும். இதிலிருந்து வெளியேறும் சிறுநீர் குழாய்கள் வழியாக சிறுநீர்பையினை வந்து அடையும். பின் அது துவாரத்தின் வழியே வெளியேறும்.
குடலிலுள்ள கிருமியினாலே அதிகம் சிறுநீர் குழாய் பாதிப்பு ஏற்படுகின்றது.

இப்பாதிப்பு மனிதர்களுக்கு மிகச் சாதாரணமாக ஏற்படும் ஒன்று. பெண்கள் சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் ஒவ்வாமையினால் கூட பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்ற குழாய்கள் பயன்படுத்தப்படும் பொழுதும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு அடிக்கடி இப்பாதிப்பு காணப்படும். கி, ஙி, கிஙி பிரிவினருக்கு சில குறிப்பிட்ட காரணங்களால் இப்பாதிப்பு ஏற்படுவதாகக் கூட ஆய்வுகள் கூறுகின்றன.

சிறுநீர் பரிசோதனை எளிதில் பாதிப்பினை தெளிவாகக் கூறிவிடும் என்றாலும் தேவைக்கேற்ப மேலும் சில பரிசோதனைகளும் உள்ளன. சிலருக்கு அடிக்கடி இப்பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு மருத்துவர் ‘தினமும் இரவு ஒரு மாத்திரை வீதம் ஆறு மாதங்கள் வரை கூட பரிந்துரைப்பார். சிலருக்கு கூடுதல் காலமும் கொடுக்கப்படுவது உண்டு.

* தேவையான அளவு நீர் அருந்த அறிவுறுத்தப்படும்.
* சிறுநீரினை வெகு நேரம் கட்டுப்படுத்தாமல் வெளியேற்ற வேண்டும்.
* ஆண்களுக்கு ‘ப்ராஸ்டேட்’ பிரச்சினை ஏற்படின் உடனடி சிகிச்சை தேவை என அறிவுறுத்தப்படும்.
* பருத்தி உள்ளாடைகளை இறுக்கம் இல்லாதவாறு அனைவருமே பயன்படுத்துவது நல்லது.

வீட்டிலேயே நாம் செய்து கொள்ள கூடிய சில எளிய வழிகளையும் பார்ப்போம்.

* நன்கு தண்ணீர் குடியுங்கள். இது கிருமிகளை வெளியே தள்ளிவிடும். உங்களை எளிதில் நிவாரணம் பெறச் செய்யும்.
* சிறுநீர் போக வேண்டுமெனில் உடனே சென்று விடுங்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறும் பொழுதும் முன்னேற்றம் கிடைக்கும்.
* 8 அவுன்ஸ்நீரில் 1 டீஸ்பூன் ஆப்ப சோடா (பேக்கிங் சோடா) கலந்து காலையில் முதலாவதாக எடுத்துக் கொள்ளுங்கள். எரிச்சல் நன்கு குறையும். ஒருவாரம் வரை கூட இதனைத் தொடரலாம். ஆனால் முக்கியமாக, உப்பு குறைத்து எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்களும், ஒவ்வாமை உள்ளவர்களும் இதனை செய்யக் கூடாது.

* தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.
* சாக்லேட், புளிப்பு உணவு, இவைகளை தவிர்த்து விடுங்கள்
* கீழ் வயிற்றுக்கு மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுத்துக் கொள்ளுங்கள்.
* இஞ்சிசாறு, இஞ்சி டீ எடுத்துக் கொள்ளலாம்.

* இளநீர் மோர், இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* காரமான உணவினை, தவிர்ப்பது மிக நல்லது.
* ஒருமுறை இந்த பாதிப்பு ஏற்பட்டால் மறு முறை லேசான அறிகுறிகள் தோன்றும் பொழுதே மருத்துவரிடம் செல்லுங்கள்.
* மூன்று மாதத்திற்குள் மறுபடி மறுபடி வருகின்றது என்றால் விரிவான மருத்துவ பரிசோதனையும் குறைந்த வீரியத்தில் நீண்ட கால ஆன்டிபயாடிக் இவர்களுக்குத் தேவைப்படலாம்.

* இத்தகைய பாதிப்பு உடையவர்கள் சிலர் ஏதோ குழம்பிய மனநிலையில் கூட இருப்பார்கள். சிகிச்சை அவர்களுக்கு நல்ல தீர்வினை அளிக்கும்.

சருமம் வறண்டு அறிக்கின்றதா?

அதிக ஸ்டிரெஸ் சரும அரிப்பிற்கு முக்கிய பொதுவான காரணம் என்றால் ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா? காரணம் எதுவாயினும் வறண்ட சருமம் அரிக்கும் பொழுது எளிதான முறையில் நீங்கள் சரி செய்ய முடியும்.

* ஆப்பசோடாவினை சிறிது நீரில் கலந்து உடலில் தடவி 20 நிமிடங்கள் சென்று குளித்து துண்டினால் உடலினை ஒத்தி எடுத்து விடலாம். அரிப்பு வெகுவாய் அடங்கும். இதனை செய்வதற்கு முன் உடலில் சிறிய இடத்தில் சற்று தடவி சோதனை செய்து பின்னர் இம்முறையை கடைபிடிக்கலாம். சிறிதளவு நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்கலாம். ஒட்ஸ்ஸினை நன்கு பொடி செய்து நீரில் நன்கு குழைத்து ஈர உடலில் மெலிதாய் தடவி 5 நிமிடம் சென்று மென்மையாய் தேய்த்து குளித்து விடலாம்.

* தேங்காய் எண்ணை சிறிது நீர் கலந்து உடலில் தடவி 1/2 மணி நேரம் பொறுத்து குளிக்கலாம்.
* தேங்காய் பாலுடன் நீர் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் பொறுத்து குளித்து விடலாம்.
* ஆப்பிள் சிடார் வினிகர் தண்ணீருடன் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் சென்று குளித்து விடலாம்.
* சோற்று கற்றாழையினை உடலில் தடவி குளித்து விடலாம்.

* பாலு + தேன் + நீர் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் சென்று குளித்து விடலாம்.
* பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வாசனை அடர்ந்த சோப்புகளை கண்டிப்பாய் பயன்படுத்தக் கூடாது.
* காபியை குறைத்துக் கொள்ளுங்கள்.
* துளசி, பொதிரு, கொத்தமல்லி தழை இவைகளை அதிகம் பயன்படுத்துங்கள்.
* டீயில் துளசியினைச் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment