Wednesday 4 November 2020

சன்னியாசி யோகம்


ஒரு மனிதனின் ஜனன ஜாதகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் கூடியிருக்கப் பிறந்தவர் சன்னியாசியாவார் .
அந்த வகையில் சன்னியாசி யோகமானது நான்கு வகைகளாகப் பிரித்துச் சொல்லப்படுகின்றது.
அதாவது, சன்னியசத்தில் ஈடுபட்டு மீண்டும் கிரஹஸ்தன் ஆவது., சன்னியாச விருப்பம் மட்டுமே ஏற்படுவது.,  
 தீட்சை பெற்ற சன்னியாசியாவது,  இராஜ சன்னியாவது என்று வகைப்படுத்தப்படும்.
 இதில் நவநாயகர்களின் செயல் எவ்வாறு இருக்குமென்றால்,
சூரியன் -  வன்யாசனம் ( வனவாசம்)  
சந்திரன் -  விருத்த விராவத ( சிவயோகி)  
செவ்வாய் - சாக்கிய சிவப்பு உடை 
                       அணிந்த ( பௌத்த) 
                                           சன்னியாசி .
புதன்  - ஆஜீவிக ( சமண அல்லது 
                        வைஷ்ணவ சன்னியாசி)  
குரு    -   பிக்ஷுக ( சாஸ்திரீக
                                         சன்னியாசி )
சுக்கிரன் - சரக ( சக்கரம் பூண்ட 
                                  சன்னியாசி ) 
சனி     -  நிக்ரந்த ( நிர்வாண சன்னியாசி)  
          மேற்கண்ட வகைகளை கிரகங்களின் வலிமையைக் கொண்டு யூகித்து அறிய வேண்டும்.
     சன்னியாசத்திற்குரிய கிரகம் கிரக யுத்தத்தில் தோல்வியடைந்திருக்குமானால் ஜாதகன் சன்னியாசி சில காலத்தில் அதனை வெறுத்து இல்லறம் திரும்புவான்.
   வலிமை பெற்ற கிரகம் அஸ்தங்கம் பெற்றிருக்குமானால் ஜாதகர் சன்னியாசம் போறார் என்றாலும் சன்னியாசிகளை உபசரித்து வழிபடுவார். வலிமை பெற்ற கிரக யுத்தத்தில்  தோல்வியடைந்து பிற கிரகப் பார்வை பெற்றிருக்குமானால் ஜாதகருக்கு சன்னியாசத்தில் ஆசை இருக்குமே தவிர சன்னியாசத்தை ஏற்க முடியாது.
      ஜென்மேசன் என்னும் சந்திரன் நின்ற ராசியாதிபதியை பிற கிரகங்கள் பாராதிருந்து,  சனி பார்த்தாலும் அல்லது சந்திரன் சனியின் திரேக்காணத்தில் சஞ்சரித்து சனி அல்லது செவ்வாய் நவாம்சம் பெற்று சனி பார்வை பெற்றாலும் ஜாதகர் முறையான தீட்சை பெற்று சன்னீயாசியாவார்.
    சனைச்சரன் லக்னத்தையும், ராசியையும், குருவையும் பார்த்து, குரு 9 ல் சஞ்சரிக்க ஜனித்தவர் ராஜாவாய் சாஸ்திர விஞ்ஞான விற்பன்னராகத் திகழ்வார். இந்த ராஜயோகம் பெற்று 9 ல் சனி சஞ்சரிக்கப் பிறந்தவர் தீட்சை பெறுவார்.

No comments:

Post a Comment