Thursday, 19 November 2020

கைவிஷம் (இடுமருந்து)

கைவிஷம் (இடுமருந்து)
.........................


மித்ரதே புத்ரேத்ரே ஸப்தமே,
வாஷ்டமே வா மாந்தௌ வாஹௌ,
திஷ்டதி க்ஷேன புத்தி, ;

தத்ர ஸேத சாரீசிரே பிரி பிரியக்ருத்தா விஜந்தாவ்யா ஸா ன சேத்தை வயோகால் ;



ஒருவருக்கு தெஸாபுத்திகள் காலங்கள் சரியில்லை என்றிருந்தால் அவர்களை சத்ருக்களோ,   அல்லது வேண்டியபட்டவர்களோ? வசியப்படுத்தி காரியங்களை செய்வார்கள்.
ஒரு சிலர் காதல் நிறைவேறுவதற்காக!
ஒருசிலர் எதிராளியின் குடும்பத்தை நாஸம் செய்ய!
ஒரு சிலர் சொத்துக்களுக்கு வேண்டியும் செய்வார்கள்!
இப்படி செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் தொண்ணூறு நாள்களாவது எதிராளியோடு தொடர்பு இருக்கவேண்டும்!

நேற்று வரை சுற்றிசுற்றி வந்த ஸ்த்ரீயோ, அல்லது புருஷனையோ அறவே எள்ளளவும் பிடிக்காமல்போகும் போகும். அவர்களை பார்த்தாலே சகிக்கமுடியாது.
ஆனால் கைவிஷம் என்கிற இடுமருந்து வைத்துவிட்டால் எதிர்பாலியினரை பார்க்காமல் இருக்கவே முடியாது.
எப்போதுமே கண்களுக்குள்ளேயே அவர்கள் ஞாபகம் ஓடிகொண்டிருக்கும், சாப்பாடு எடுக்காது, தூக்கம் வராது. அழகு சீர்குலைந்து போய்விடும்.
அடிக்கடி வாந்தி வரும்.
பெற்றோரோ அல்லது சார்ந்தோரோ புத்தி சொன்னால் எடுபடாது. புத்தி சொல்பவரை கண்டால் எரிந்துஎரிந்து விழுவர்.
அதற்காக அவர்களுக்குள் விவாஹம் செய்து வைத்தால் அதிகம் போனால் ஒரு வர்ஷம் மட்டுமே அந்த விவாஹ ஜீவிதத்திற்கு ஆயுள் உண்டாகும்.
அதற்குபின்னர் அவர்களை பரஸ்பரம் பார்த்தாலே சகிக்காது.
ஒரு மனுஷ்யருக்கு கெட்டநேரம் ஓடும்போதுதான் இந்தமாதிரி துர்புத்திகள் தோன்றும்.
விநாஸகாலே விபரீத புத்தி!!
ஜோதிஷ ப்ரஸ்னம்வைக்கும்போது,
நான்கு, ஐந்து, ஏழு, எட்டு போன்ற இடங்களில் குளிகனும், இராகுவும் சேர்ந்திருந்தால் ஜாதகர்களுக்கு கைவிஷம் வைக்கப்பட்டுள்ளது.

நான்காவது பாவம், ஐந்தாம்பாவம், இந்த கிரகசேர்க்கை இருந்தால். காரியனுகூலத்திற்காகவும், காதலுக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இராகு, குளிகன் கிரக சேர்க்கை ஏழாம்பாவகத்தில் இருந்தால் விவாஹம் செய்ய வைக்கப்பட்டுள்ளது.

எட்டாம்பாவகத்தில் இருந்தால் குடும்ப கலகங்கள் செய்ய எதிராளி குடும்பத்தை நாஸம் செய்யவும், அவர்களுடைய வீட்டில் யாருடைய ஜாதகம் பலஹீனம்? யாருக்கு கெட்டநேரம் நடக்கின்றது? என்பதையெல்லாம் அறிந்து அவர்கள் குடும்பத்தை நிர்மூலம் ஆக்கவும் கைவிஷம் வைப்பார்கள்.

இந்த இராகு, குளிகன் கிரகசேர்க்கைக்கு, வியாழ கிரகத்தின் பார்வை பிரஸ்னத்தில் இருந்தால் கைவிஷம் வேலைசெய்யாமல் முறிந்துபோகும்.

காதல் சம்பந்தபட்ட பிரச்சினை கைவிஷம் வைக்கப்பட்டிருந்தால், மஹாபஞ்சகவ்யகிருதம், வாங்கி ஏழு நாட்கள் பஞ்சாக்ஷிரி மந்திரம் சொல்லி, உருவேற்றி, அஸ்வதீ, மகம், மூலம் நக்ஷத்ரம் நடக்கும் நாளன்று கொடுத்து வரவேண்டும்.
மாம்ஸபக்ஷணங்கள் தவிர்க்கவேண்டும்.


No comments:

Post a Comment