Sunday, 29 November 2020

தூக்கத்தை அதிகரிக்கும் உணவுகள்

தூக்கத்தை அதிகரிக்கும் உணவுகள் 

தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும். சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். 
 
அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும். தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. 
 
வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
திருநீற்று பச்சிலையை நுகர
தூக்கம் தானாக வரும்.

No comments:

Post a Comment