Friday, 11 December 2020

இந்த 5 ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்தமாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

பெற்றோராக இருப்பது என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அம்சம் ஆகும். அதே நேரத்தில் பெற்றோராக செயல்படுவது என்பது ஒரு கடினமான காரியம் ஆகும். அதாவது குழந்தைகளுக்கு ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாக வேண்டும். இந்த இரண்டிற்குமிடையில் குழந்தைகளோடு ஒரு சமமான அளவிலான உறவைப் பேணுவது என்பது ஒரு சவாலான காரியம் ஆகும்.



Parents Of These Zodiac Signs Believe In Tough Love 
ஒரு சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பா். ஆனால் அந்த அன்பைத் தங்கள் குழந்தைகள் முன்பாக வெளிப்படுத்தமாட்டார்கள். அதனால் குழந்தைகள் ஏதாவது உணர்வுப்பூர்வமான தேவைகளோடு வந்தாலும், அன்பை வெளிப்படுத்தாமல் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு இரக்கமில்லாமல் இருப்பது போல் நடிப்பார்கள்.

ஆகவே இங்கு எந்தந்த ராசிக்கார பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்தாமல் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்று பார்க்கலாம்.


மேஷம்
மேஷ ராசிக்கார பெற்றோர் இலட்சியவாதிகளாவர். அவர்கள் தங்கள் குழந்தைகள் உயர்ந்த இலட்சியங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்புவர். மேலும் அந்த இலட்சியங்களை தங்கள் குழந்தைகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களை எந்தவிதமான எல்லைக்கும் தள்ளுவர். சில சமயங்களில் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாகவும், இரக்கமில்லாமலும் நடந்து கொள்வர். மேலும் அவர்களின் ஆளுமை அமைப்பு அவ்வாறு இருப்பதால் தங்கள் குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்துவதில்லை. தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் வளமாக அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடே அவர்கள் இவ்வாறு அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

Advertisement

Advertisement

சிம்மம்
சிம்ம ராசிக்கார பெற்றோர் இயல்பாகவே அதிகாரம் செலுத்துபவர்களாக இருப்பர். அதோடு அதிக தன்னம்பிக்கையோடும் மன திடத்தோடும் இருப்பர். அதனால் தங்களது குழந்தைகளும் அதுபோல் வலிமையோடு தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று விரும்புவர். அதனால் தங்கள் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதில்லை. மாறாக தங்களது குழந்தைகள் தாங்களாகவே எதையும் செய்ய வேண்டும் என்று கருதி அவர்களிடம் கனிவாக எடுத்துச் சொல்லாமல் கடுமையாக நடந்து கொள்வர்.



கன்னி
கன்னி ராசிக்காரப் பெற்றோர் எப்போதுமே கண்டிப்போடும் தீவிர அணுகுமுறையோடும் இருப்பர். அவர்கள் தங்கள் குழந்தைகளை நேர்மறையாக விமர்சித்தாலும், தங்கள் குழந்தைகள் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பர். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்தாமல் கடுமையாக நடந்து கொண்டாலும், அது அவர்களின் நலனுக்காகவே அப்படி நடந்து கொள்கின்றனர்.


மகரம்
மகர ராசிக்காரப் பெற்றோர் மிகவும் இயல்பானவர்கள். இந்த உலகத்தின் நடைமுறை வாழ்க்கையை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பை பாசத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் தங்கள் குழந்தைகளை தங்களது போக்கிலே கண்காணிப்பர்.


கும்பம்
கும்ப ராசிக்காரப் பெற்றோர் தங்கள் குழந்தைகள் சுதந்திரமானவர்களாகவும், அதே நேரத்தில் பொறுப்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவர். பொதுவாக பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பாகவும், அக்கறையோடும் இருக்க வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவோம். ஆனால் கும்ப ராசிக்காரப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக இருக்க அனுமதிப்பர். மேலும் குழந்தைகளின் காரியங்களில் அவர்கள் தேவை இல்லாமல் தலையிடுவதில்லை. அதன் மூலம் தங்கள் குழந்தைகள் சுந்திரமுள்ள பக்குவப்பட்ட மனிதர்களாக உருவாவார்கள் என்று நம்புகின்றனர்.



No comments:

Post a Comment