Wednesday, 2 December 2020

முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்:

முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்:

முருங்கை கீரை:

◆முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.

◆முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்.

◆முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

◆பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

◆முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.

◆ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.

முருங்கைக் காய்:

◆முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

◆முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

◆வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது.
முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல், மூட்டு வலி குணமாகும்.

◆கர்ப்பப்பையின் குறைகளை போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்த உதவுகிறது

No comments:

Post a Comment